சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேட்டி
காயல்பட்டினம், மார்ச் 9-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன் னிட்டு மேலப்பாளை யத்தில் நடைபெறும் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு தாய்ச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.
மாநாடு நடைபெறும் இடத்தையும், பந்தலையும் பார்வையிட்டு பின்னர் நடைபெற்ற மாநாட்டு ஆலோசனை கூட்டத்தி லும் பங்கேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
இம் மாநாட்டின் ஒரு அங்கமாக முஸ்லிம் பெண் கள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெறுகிறது. முஸ்லிம் லீக் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்துகின்ற வகையில் நடைபெறுகிறது. அத னைத் தொடர்ந்து சமுதாய மறு மலர்ச்சி மாநாடு நடை பெறுகின்றது.
இம் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென் மாவட்டத் தொண் டர்கள் பங்கேற் கின்றனர்.
தமிழ்நாட்டின் 42 மாவட்டங்களில் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிளை கள் உருவாக்கப்பட இருக் கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட இருக்கின்றன. அவைகளுக் கெல்லாம் இம் மாநாடு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும்.
இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கூறினார்.