Sunday, March 14, 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

இஸ்லாமிய வங்கி முறை மிகச் சிறந்தது. பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பு செயல்வடிவம் பெற நாமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
சென்னை மண்ணடி மஸ்ஜித் மாமூரில் வாரந் தோறும் ஞாயிற்றுக் கிழமை மாலை திருக்குர் ஆன் விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதன் 150-வது வார நிறைவு விழா கடந்த 7-2-2010 அன்று நடைபெற்றது. மவ்லவி ஓ.எஸ்.எம். முஹம்மது இலியாஸ் காஸிமி தலைமை தாங்கினார். மவ்லவி ஆஸிகுர் ரஹ்மான் காசிபி கிராஅத் ஓதினார். மவ்லானா மவ்லவி எம். அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார்.
அல்லாமா ஷெய்கல் தப்ஸீர் அல்ஹாஜ் பி.எஸ். பி. ஜெய்னுல் ஆபிதீன் ஹஜ்ரத், மவ்லவி கே.ஏ. நிஜாமுதீன் மன்பஈ ஹஜரத் சிறப்புரையாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு அவர் ஆற்றிய உரை வருமாறு-
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாரந்தோறும் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ஆலிம் பெருமக்களுக்கும், பங்கேற்று சிறப்பிக்கும் சமுதாய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு என்ன வேலை? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று கட்சிகளின் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போன்று முஸ்லிம் லீகின் உறுப்பினர்களை யாரும் கருதிவிடக்கூடாது. சமு தாயத்தின் உணர்வோடு ஒன்றரக் கலந்தவர்கள் முஸ்லிம் லீகினர்.
சமுதாயத்தின் உணர்வு களை - தேவை களை - கருத் துக்களை - சட்டமன்ற, நாடாளுமளகளில் எடுத் துரைக்கத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோமே தவிர அரசியலை வைத்து பதவி, பட்டங்களைப் பெறுவதற்காக அல்ல. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் எங்களுக்கு அதனைத்தான் வழிகாட்டித் தந்துள்ளார் கள்.
ஒரு நல்ல முஸ்லிம் எந்த நேரத்திலும் அல்லாஹ் வின் சட்டத்திற்கும் - நபி கள் நாயகம் (ஸல்) அவர்க ளின் வழிமுறைகளுக்கும் மாற்றமாக நடக்க மாட் டார்கள். நான் வேலூர் தொகுதியின் வேட்பா ளராக போட்டியிட்ட போது, பல சமுதாய மக்க ளிடமும் வாக்கு சேகரிக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் அல்லாத மக்கள் பல சாதிகளாக - சமூகங்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சமுதாயத் தலைவர்களுக்கு ஆங்காங்கே சிலைகளை வைத்துள்ளார்கள். அது தவிர, பல்வேறு அரசியல் தலைவர்களின் சிலைகள் வேட்பாளராகிய நான் அந்த சிலைகளுக்கெல் லாம் மாலை அணிவிக்க வேண் டும். மரியாதை செலுத்த வேண்டும். அதன்மூலம் தான் அந்த சமுதாய மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழ் நிலை இருந்தது.
அரசியலுக்காகத்தானே - தேர்தலுக்காகத்தானே ஒரு மாதம் மட்டும் தானே சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்வதால் ஒன்றும் தவறில்லை என்று சிலர் என்னிடம் கூறவும் செய்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் சட்டங்க ளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி முறைகளையும் நல்ல முறை யில் அறிந்து கொண்ட ஒரு முஸ்லிம். எந்தச் சூழ்நிலை யிலும் இதுபோன்ற செயல் களை இணைவைப்பது போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் செய்ய மாட் டார். அல்லாஹ் நெருக்கடி யான அந்த சூழ்நிலையை விட்டு தப்பிக்கும் வகையில் எனது
தேர்தல் பிரச்சார காலத்தில் அனைத்து வேட் பாளர்களையும் ஒன்றாக அழைத்து தொகுதி மக்க ளுக்கு எவ்வாறெல்லாம் பணியாற்றுவீர்கள்? என்று நேர்காணல் தொகுதி மக்களால் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலே என் னைப் பார்த்து கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி யாக முஸ்லிம் லீகின் சார்பிலே தேர்தலிலே நிற்கிறீர்கள். தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்று கூட்டணியிலே ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி ஒருவேளை மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரிட்டால் உங்களது செயல் பாடு எப்படி அமையும்? என்று கேட்கப்பட்டது. நான் முஸ்லிம் லீகின் சார்பிலே தி.மு.க.வின் உதயசூரியன்| சின்னத்தில் வேட்பாளராக நின்ற அந்த வேளையில் என்னைச் சுற்றி தி.மு.க.வின் முன் னணித் தலைவர்களெல் லாம் இருந்தவேளையில் சமுதாய மக்களிடம் தௌ;ளத்தெளிவாக கூறினேன்.
சமுதாயத்திற்கும் - மார்க்கத்திற்கும் மாற்ற மான - பாதகமான சூழ்நிலை ஏற்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பேனே தவிர, ஒருபோதும் சமுதாயத் திற்கு குந்தகம் ஏற்பட துணையாக இருக்க மாட் டேன் என்று கூறினேன். பலரும் என்னைக் கேட் டார்கள். எப்படி இப்படி பாளர்களையும் ஒன்றாக அழைத்து தொகுதி மக்களுக்கு எவ்வாறெல்லாம் பணியாற்றுவீர்கள்? என்று நேர்காணல் தொகுதி மக்க ளால் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலே என்னைப் பார்த்து கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி யாக முஸ்லிம் லீகின் சார் பிலே தேர்தலிலே நிற்கி றீர்கள். தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்று கூட்ட ணியிலே ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி ஒருவேளை மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரிட் டால் உங்களது செயல்பாடு எப்படி அமையும்? என்று கேட்கப்பட்டது. நான் முஸ்லிம் லீகின் சார்பிலே தி.மு.க.வின் உதயசூரியன்| சின்னத்தில் வேட்பாளராக நின்ற அந்த வேளையில் என்னைச் சுற்றி தி.மு.க.வின் முன்னணித் தலைவர்க ளெல்லாம் இருந்தவேளை யில் சமுதாய மக்களிடம் தௌ;ளத்தெளிவாக கூறினேன்.
சமுதாயத்திற்கும் - மார்க்கத்திற்கும் மாற்ற மான - பாதகமான சூழ் நிலை ஏற்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப் பேனே தவிர, ஒருபோதும் சமுதாயத்திற்கு குந்தகம் ஏற்பட துணையாக இருக்க மாட்டேன் என்று கூறி னேன். பலரும் என்னைக் கேட்டார்கள். எப்படி இப்படி துணிச்சலாக கூறுகிறீர்கள்? இதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் கவலை இல்லையா? என்றார்கள். நான் கூறினேன்,
ஹஅரசியலில் வெற்றி யையும், தோல்வியையும் தீர்மானிப்பது இறைவனின் புறத்திலானது| இறைவன் நாடியவர்களுக்கு வெற்றி யைத் தருகின்றான். அவன் நாடியவர்களுக்கு தோல்வி யைத் தருகிறான். நான் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படுவதை விட இறைவனின் கட்ட ளைக்கு மாறு செய்யாமல் இருக்கி றேனா என்பது பற்றித்தான் கவலை. எங்களது தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்கள் எங்களுக்கு இப் படித்தான் அரசியல் பயிற்சியளித்துள் ளார்கள். அவர்கள் தேர்த லிலே போட்டியிட்டு தொகுதிக்கு செல்லாமலேயே மக்களிடம் வாக்கு கேட்காமலேயே மாபெரும் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார்கள்.
முதன் முதலில் அவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பாக பத்திரி கையாளர்கள் காயிதெ மில்லத்தை வழிமறித்து நீங்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் வாக்கு கேட்கவில்லையே? நாடாளுமன்றத்தில் சரியாக பணியாற்றா விட்டால் தொகுதி மக்க ளுக்கு பதில் கூற வேண்டும் என்ற பயம் இல்லையா உங்களுக்கு? என்று கேட்டனர். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள் கூறினார் கள். தொகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமோ இல்லையோ? என்னைப் படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. அந்த இறைச்சம் என்னை சரியான முறை யில் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக் கிறது என்று கூறினார்கள்
.இதனை கேட்டு அந்தப் பத்திரிகையாளர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மற்றொரு முறை நாடாளுமன்றத்தில் உங்கள் பணி எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்? என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் மட்டு மல்ல, எப்பொழுதுமே எனது ஒவ்வொரு செயலும் அமலில் சாலிஹாத் என்ற இறைவனுக்கு உவப்பான நற்செயலாக இருக்க வேண்டும் என விரும்பு கிறேன் என்று பதில் அளித் தார். இதைத்தான் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஒவ் வொருவரும் பின்பற்றி வருகிறார்கள். அந்த முறை யில்தான் நாடாளுமன்றத் தில் எனது பணிகள் அமைந்து வருகின்றன. நான் நாடாளுமன்றத் தில் முதன் முறையில் ஆற்றிய உரையில் இவற்றை தெளி வாக பதிவு செய்துள்ளேன்.
இன்று இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப் படுத்த பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசினேன்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வட்டி யில்லாத பொருளாதார முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து திருக் குர்ஆனிலிருந்து சுருக்க மான ஒரு மேற் கோளை தர முடியுமா? என்று கேட் டார். நான் அவருக்கு கூறி னேன். திருக்குர்ஆனி லிருந்து நிறைய மேற் கோளை காட்ட முடியும். என்றாலும், அல்லாஹ் ஒரு வசனத்தில் தௌ;ளத் தெளி வாக கூறியிருக்கின்றான். உங்களுக்கு வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹரமாக்கி விட்டேன் என்று கூறியுள்ளான் என்று நான் கூறியதும், இது போதும், இதுபோதும் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நிதியமைச்சரும், அவரின் செயலாளர் களும் அது குறித்து ஆராய்ந்து ஒரு நல்ல அறி விப்பினை தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் இஸ்லா மிய வங்கி முறை விரைவில் நடைமுறைப்படுத்தப் படும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இஸ்லாமிய வங்கி முறை மிகச் சிறந்தது. பொருளாதார மேம்பாட் டிற்கு மிகவும் ஏற்றது. இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறி விப்பு செயல்வடிவம் பெற நாமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதேபோன்று இன்று தமிழக முஸ்லிம்களிடம் குறிப்பாக உலமா பெரு மக்களிடமும் தமிழக அரசின் திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களைப் போக்குவதற்கு முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்து களில் காலம்காலமாக பதிவு செய்யப்பட்டு வரும் திருமணப்பதிவு ஆவணங் களை அரசு ஆவணங்க ளாக ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக் கையை முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
சமுதாயம் மகிழத்தக்க வகையில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.
இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.