Thursday, March 11, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி

தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.

மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.

மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,

நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.

புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.

நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.

எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.

தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.

மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.

ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.

மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.

தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது



மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை

அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு

பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்

மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.

சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்

தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை

கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்

தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை

தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.

செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்

செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி

மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்

திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.

இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.