Saturday, March 13, 2010

இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்

இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்


திருவள்ளுர், மார்ச்.13-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப+ண்டி வட்டம் மாநெல்லூர் கிராமம். இங்கு சுமார் 45 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள். இந்த ஊரில் மஸ்ஜிதெ இலாஹி ஆஷர் கானா, கமிட்டி என்று தமிழ் நாடு வக்ஃபு வாரியத்தால் ஜி.எஸ். நெ.153ஃ1958-சி, சி.ஜி.டி அங்கீகரிக்கப்பட்டு கமிட்டியின் தலைவராக ஷேக் அன்சம்பாஷா, செய லாளர் இ.எ. நசீர் உசேன் மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் செயல்பட்டு வந் தார்கள்.

ரமளான் மாதம் முடிந்ததும் கணக்கு கேட்டு இருக்கிறார்கள். மேற்படி அன்சர் பாஷா வரவு செலவு கணக்கு கொடுக்காததி னால் ஜமாஅத்தில் பிரச் சினை பிணக்கு ஏற்பட்டி ருக்கிறது.இதனால் ஊத் துக்கோட்டை ஜமாஅத், மாதர்பாக்கம் ஜமாஅத் கும்மிடிப+ண்டி ஜாஅத் பழவேற்காடு, செம்பாசி பள்ளி ஜமாஅத், பொன் னேரி ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகியவர்கள் வந்து சமாதானம் செய்தும் முடிவு ஏற்படவில்லை.

மேற்படி அன்சார்பாய் அவர்களைச் சேர்ந்த வர்கள் தனியாக ஐவேளை தொழுகை ஜும்ஆ போன் றவை நடத்தி வந்தார்கள். நசீர் உசேன், அவரைச் சேர்ந்தவர்கள் மஸ்ஜிதெ இலாஹியில் தொழுகை நடத்தி வந்தார்கள் இரு ஜமாஅத்தார்களுக்கும் அடிக்கடிமோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார், பஞ்சாயத்து என்று கடந்த 8 மாதமாக இருந்து வந் துள்து அனைத்து ஜமா அத்து ஜமாத்தும் முயன் றும் தீவு கிடைத்காததால் சமுதாயத்தின் தாய்ச்சபை தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களுக்கு அவ்வ+ர் ஜமாஅத்தினர் கடிதம் மூலம் தெரிவித்த தினால் இவ்வ+ர் பிரச்சினை குறித்து விசாரித்து விபரம் தெரிவிக்கும்படி தாய்ச்சபை பொதுச் செய லாளர் கே.எம். அப+பக்கர் அவர்கள் கடிதம் மூலம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் காயல் அஹ மது சாலிஹ் ஆலோசனை வழங்கப்பட்டது.

தலைவர் அவர்களின் மேலான ஆலோசனைப் படி திரவள்ளூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் திருவள்ளூர் மாவட்ட தப்லீக் அமீர்சாப், டி.எஸ். யாக்கூப் ஆகியோர் 09-3-10 அன்று காலை மாதர் பாக்கம் பள்ளிவாசலில் இருந்து கொண்டு மாநெல் லூர் இருஜமாஅத்தார்க ளையும் அழைத்து லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய வந்துகளில் 3சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இரு வரின் கருத்துகளை கேட்டு இஷா தொழு கைக்கு பின் ஒருமித்த கருத்தோடு இரண்டு ஜமாத்துகளை ஒரு ஜமாஅத்தாக ஒன்றி ணைத்து 10-3-10 அன்று முதல் சுப்ஹ{ தொழுகை யில் இருந்து ஒரே ஜமாஅத்தாக மஸ்ஜிதெ இலாஹில்தான் தொழ வேண்டும் என்றும், இருதரப்பில இருந்து மூவர், மூவர் என்று 6 மாதம் வரை மஸ்ஜித் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், எழுத்துப்ப+ர்வமாக எழு தப்பட்டு- இருதரப்பினர் களும் கையொப்பம் இட்டு பகைமையை மறந்து விரோதத்தை துறந்து இரு ஜமாஅத்தார்களும் ஒரே ஜமாஅத்தாக இணைந்து ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து முஸாபா, மானகா செய்து கொண் டனர்.

மாதர்பாக்கம் ஜமாஅத் தலைவர் காசிம் சாஹிப், செயலாள்ர கபீர் சாஹிப், கும்மிடிப்ப+ண்டி அ.தி.முக. கவுன்சிலர் சிராஜுதீன், ஊத்துக்கோட்டை தி.மு.க. கவுன்சிலர் சம்சுதீன், தப்லீக் அமீர் பாபு பாய், முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப் பாளர் ஜமாலுதீன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜலீல்கான் ஆகியோர் கலந்துகொண்டு இணைந்த ஜமாஅத்திற்காக துஆ செய்தனர். முஸ்லிம் லீகின் முயற்சிக்கு வெற்றி கிடைத் தைதைப் பாராட்டினர்.

தகவல்:

காயல் அஹமது சாலிஹ்