மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினமான 2010 மார்ச் 10-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ~சமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் கல்வி, பொது நலம், இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் நால்வருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மேலப்பாளையம் ஜின்னா திடலில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்கான ஏற்பாடு கள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.
சமூக நல்லிணக்க பேரணி
காலையில் நடை பெறும் மகளிர் விழிப் புணர்வு கருத்தரங்கையும், பிற்பகலில் நடைபெறும் பிரமாண்டமான சமூக நல்லிணக்கப் பேரணியையும், மாலையில் நடைபெறும் சமுதாய மறு மலர்ச்சி மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து இம்மாநாட்டிற்கு பெருமளவில் சமுதாயப் பெருமக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் மஹல்லாக்கள்தோறும் சென்று மாநாட்டு அழைப்பிதழ்கள் கொடுப்பது என்றும், மேலப்பாளையத்தில் வீடுவீடாக சென்று அழைப்பது என்றும், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கல்வி, இலக்கியம், சமூக சேவைகளில் மிகச் சிறந்த சேவையாற்றி வரும் பிரமுகர்கள் நால்வருக்கு ~சமுதாய ஒளிவிளக்கு| விருதுகள் வழங்கப்பட இக்கூட்டத்தில் முடிவானது.
விருது பெறும் பெரு மக்கள்
சிறந்த கல்வியாளர் - சீனாதானா செய்யது அப்துல் காதர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 22-8-1946-ல் பிறந்த சீனா தானா செய்யது அப்துல் காதர் ஹாங்காங், இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொழில் செய்யும் முன்னணி பிரமு கர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு சொந்த முயற்சி யிலும், ஓமியத் மற்றும் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பிலும், பைத்துல்மால் வழியிலும் உதவி செய்துவரக் கூடியவர்.
தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பைத்துல் மால் அமைக்கப்படுவதற்கு துணை புரியக்கூடியவர். அனைத்து சமயத்தவர்களுக்கான அறிவுரைகள், மதங்கள் சொல்லும் நற் சிந்தனைகள் உள்ளிட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் நான்கு புத்தகங்களை எழுதியிருக்கக் கூடியவர். சீனாதான சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை களுக்கு மருத்துவ மற்றும் உணவு உதவிகள் செய்து வரக்கூடியவர். ஏராளமானோர் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பெறுவதற்கு துணை நிற்கக் கூடியவர். இத்தகையப் பெருமைக் குரிய சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களுக்கு ~சிறந்த கல்வியாள ருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.
சிறந்த இலக்கியவாதி - கவிஞர் வீரை ரஹ்மான்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த கவிஞர் அப்துல் ரஹ்மான் 1931 மார்ச் 28-ல் பிறந்தவர். நாற்பது ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக உள்ள இவர் சிறந்த பொதுநல ஊழியர். மிகச் சிறந்த இலக்கியவாதி.
போட்டிகளையும் நடத்தியுள்ளார்.
முஸ்லிம் சமுதாய நலச் சங்கம், வீரை ஜும்ஆ பள்ளிவாசல், மூத்த குடிமக்கள் மன்றம், மக்கள் இயக்கம், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம், பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம், வீரை ஜுல்பா அறக் கட்டளை, சிராஜுல் ஹ{ப்தா மதரஸா உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர்.
மிகச் சிறந்த இலக்கிய வாதியான வீரை ரஹ்மான் அருமையான கவிஞர். இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பல இவர் எழுதியவை. இத்தகையப் பெருமைக் குரிய கவிஞர் வீரை ரஹ்மானுக்கு ~சிறந்த இலக்கிய வாதிக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம் மாநாட்டில் வழங்கப்படுகிறது.
சிறந்த சமூகசேவகர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை ஒட்டியுள்ள மியான்பள்ளி கிராமத்தில் 1961 மே 4-ம் தேதி பிறந்தவர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை, ஷிபா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராகவும், எம்.எச். அக்ரோபார்ம் பங்குதார ராகவும் உள்ளார்.
ஷிபா கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி ரோட்டரி கிளப், சேம்பர் ஆஃப் காமர்ஸ், முஸ்லிம் அனாதை நிலையம், காதர் அவுலியா பள்ளிவாசல், மதரஸத்துல் ஹ{சைனியா அரபிக் கல்லூரி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகக் குழு, தனியார் நர்சிங் ஹோம், மனிதஉரிமை அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் போன்ற பல்வேறு பொதுஅமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர். சமயப் பாகுபாடின்றி ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இவர் நேசப்பார்வை என்ற அமைப்பை ஏற்படுத்தி விபத்து நடக்கும் போது மருத்துவஉதவி செய்து வரக்கூடியவர். கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தி வரக்கூடியவர். இவர் ஏற்பாடு செய்கின்ற இலவச கண் சிகிச்சை மூலம் மட்டுமே வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர்.
இளம்பிள்ளை வாத நோயை ஒழிப்பதற்கு இலவச சொட்டு மருந்து வழங்கி சேவை செய்து வரக் கூடியவர். 1986- முதல் ஆண்டு தோறும் 15 தம்பதிகளுக்கு இலவச திருமணங்கள் செய்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் போன்ற அளப்பரிய காரியங்களை செய்து வருகின்றவர்.
இலவச மருத்துவ ஆலோசனை, விபத்து முதலுதவி பயிற்சி முகாம் கள் நடத்துதல், இயற்கை சீற்றப் பாதுகாப்பு உதவிகளை தாராளமாக செய்து வரக்கூடியவர். இவரது தர்ம காரியங்களும், அறப்பணிகளும் இறைவனின் நன்மைக்காக என்ற அடிப்படையில் ரகசியமாக செய்யப்படுவது பாராட்டிற்குரியதாகும். இத்தகையப் பெருமைக் குரிய டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கு ~சிறந்த சமூக சேவகருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.
சிறந்த பெண் கல்வியாளர்- தஸ்ரீப் ஜஹான்
மதுரை ஸ்டேட் பாங்க் பணியாளர் காலனியைச் சேர்ந்த ஏ.கே. தஸ்ரீப் ஜஹான் எம்.ஏ. எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், புதுக்கோட்டை ராஜா அரசு கலைக் கல்லூரியி லும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக் கல்லூரியி லும் முதல்வராக பணி செய்தவர்.
கல்விக் கருத்தரங்குகள், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கிய வர். பொருளாதாரப் பேராசிரியையான இவர் அது குறித்த தலைப்புகளில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். இஸ்லாம் வலியுறுத்துகின்ற மனிதநேயம், சகோத ரத்துவம், கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் பயனுள்ள பல ஆக்கங்களைத் தந்தவர். 2007.ல் அவர் பணி ஓய்வு பெற்ற பின் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அல்புர்கான் மெட்ரிகுலே ஷன் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். முஸ்லிம் பெண் கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான வழிகாட்டுபவராக திகழ் கிறார். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக் கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். ஏராளமான பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு மிகச் சிறந்த உதவிகள் செய்து வருகிறார். இத்தகைய பெருமைக் குரிய தஸ்ரீப் ஜஹான் அவர்க ளுக்கு ~சிறந்த பெண் கல்வியாளருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப் படுகிறது