Thursday, March 11, 2010

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை


பிறைமேடை மாதமிருறை ஏடு

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மாதமிருமுறை ஏடான ஹஹபிறைமேடை|| இதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட த.இ.செ. நெய்னா முஹம்மது, எம்.கே.எம். கபீர், வி.ஏ. செய்யது பட்டாணி, பேராசிரியர் அ. சாகுல் ஹமீது ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இ.ய+.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலர்

இந்திய ய+னியன் முஸ்லிம் வரலாற்றுச் செய்திகள், சன்மார்க்க கட்டுரைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சிறப்புக் கட்டுரைகள் என பல்வேறு அரிய விஷயங்களை தாங்கி ஹ-4 அளவில் 144 பக்கங்களில் அழகாக உரு வாக்கப்பட்டுள்ள மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலரை மாண்புமிகு மத்தியஅமைச்சர் அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரி வெளியிட தமிழக அமைச்சர் மாண்புமிகு டி.பி.எம். மைதீன்கான் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப்பயணத்தில்

இராஜாஜி ஹால் முதல்

சாதாப் மஹால் வரை

முஸ்லிம் லீக் வரலாறாகவே வாழ்ந்துக் கொண் டிருக்கின்ற எழுத்தரசு ஏ.எம். ஹனீப் எழுதிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை என்ற இந்நூல் 1+8 அளவில் 90 பக்கங்களுடன் தமிழிலும், உருதுவிலும் தனித் தனி புத்தகங்களாக உருவாக்கப் பட்டுள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.கோதர் மொகிதீன் வெளியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர்

அய்யம்பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியா வுதீன் தொகுத்துள்ளஆயிஷா பதிப்பக வெளியீடான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர் 1+8 அளவில் 32 பக்கங்களுடன் இம்மாநாட்டில் வெளியிடப்படுகிறது.