மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்
மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
பந்தல் அமைக்கும் பணியை
நிர்வாகிகள் பார்வையிட்டனர்
நெல்லை, மார்ச்.8-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறு மலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப் பாளையம் ஜின்னா திடலில் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் தலைமையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பட்டாளத்தின் சமூக நல்லி ணக்க பேரணி நடைபெறு கிறது.
மாலை 6 மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டுப் பந்தலை திறந்து வைக் கிறார். மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் காதர் ஆலிம், மாநாட்டுத் திட லில் முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைக்கிறார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.
மு.க. அழகிரி
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, தமிழக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வ.மு. செய்யது அஹ மது, கேரள முன்னாள் கல்வியமைச்சர் இ.டி. பஷீர் அஹமது எம்.பி., நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், எஸ். எஸ். ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. கருப்ப சாமி பாண்டியன், என். மாலைராஜா, எம்.ஏ. கலீல் ரஹ்மான், எச். அப்துல் பாசித்,
முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான், எம்.எஸ்.எ. ஷாஜஹான், நாகூர் ஜபருல்லா, நெல்லை மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்,
அணிகளின் அமைப் பாளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுதீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ஹாமீத் பக்ரீ ஆலிம்,
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம். கோதர் முகைதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் உள்பட அனைத்து மாவட்ட நிர் வாகிகள் கலந்து கொள் கிறார்கள்.
சமுதாய
ஒளிவிளக்கு மாநாடு
இம் மாநாட்டில் கல்வி, இலக்கியம், சமூக சேவை களில் சிறந்து விளங்கும் சிறந்த கல்வியாளர் கீழக் கரை சீனாதானா, செய்யது அப்துல் காதர் சிறந்த இலக் கியவாதி கவிஞர் வீரை ரஹ்மான், சிறந்த சமூக சேவகர் ஷிபா டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த பெண் கல்வியாளர், மதுரை தஸ்ரீப் ஜஹான் ஆகிய நான்கு பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.
பந்தல் அமைக்கும்
பணி தீவிரம்
மேலப்பாளையம் ஜின்னா திடலில் மாநாட் டுப் பந்தல் அமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணியை மாநிலப் பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன், மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், ஜே. ஷாகுல் ஹமீது, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம், பட்டதாரி அணி செயலா ளர் எஸ். மசூது, செய்தித் தொடர்பாளர் எஸ். பீர் முகைதீன், மேலப்பாளை யம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், மறு மலர்ச்சி புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி, செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகி யோர் பார்வையிட்டார் கள்.
பல்லாணிரக் கணக்கானோர்
பங்கறெ;கின்றனர்
மாநாட்டுப் பந்தலில் மாநாட்டு நிதிக்கழு தவைர் ஷிபா எம்.கே.எம். முஹம் மது ஷாபி நிருபர்களிடம் கூறியதாவது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது ஆண்டு நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப்பாளையம் ஜின்னா திடலில் மிகச் சிறப்பாக நடைபெற இருக் கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாக னங்களில் பல்லாயிரக் கணக்கானோர் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாட் டில் வந்து கலந்து கொள்கி றார்கள்.
இம் மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வர லாற்றில் ஒரு புதிய அத்தி யாயத்தைப் படைப்ப தோடு சமுதாயத்தின் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கூறினார்.
ஆலோசனை
கூட்டம்
இன்று மேலப்பாளை யம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளியில் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் மற்றும் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் . மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.