Sunday, March 21, 2010

மதுரை புறநகரில் வரலாற்றுச் சாதனை: 91 பிரைமரிகள் உதயம்

மதுரை புறநகரில் வரலாற்றுச் சாதனை: 91 பிரைமரிகள் உதயம்

பச்சிளம்பிறைக்கொடி பாசறையில் பத்து இலட்சம் உறுப்பினர்! இது லட்சியம்! இது நடப்பது நிச்சயம்! இதற்கு அத்தாட்சியாக காஞ்சியையும், மதுரை மாநகரையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இன்றைக்கு மதுரை புறநகர் பிரைமரி தேர்தல் பட்டியலைப் பார்த்ததும், மெய்சிலிர்த்தோம். புதிதான வரவு டாக்டர் மொகிதீன். இவருக்கு மதுரை புறநகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்த்துப் பிரைமரிகளை உருவாக்கும் பொறுப்பை வழங்கினோம். இவருடன் இணைந்து செயல்பட தென் மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் ஜாகிர் உசேனை நியமித்தோம். மறைந்த மதுரை மாவட்ட முஸ்லிம் லீகின் செயலாளர் அலி அக்பரின் அருமைப்புதல்வர் இவர். இருவரும் ஒருங்கிணைந்து இதுவரை மதுரை புறநகரில் 91 பிரைமரிகளை உருவாக்கி பல்லாயிரம் பேரை பிறைக்கொடி பாசறைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
டாக்டர் மொகிதீன் - அந்தப் பேரில் ஒளிந்திருக்கும் உண்மையை - மார்க்கத்தில் உள்ளவர்களை உயிர்த்துடிப்பு மிக்கவர்களாக்கும் பணியை ஜாகிர் ஹ{சேனுடன் சேர்ந்து செய்திருக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத் தளகர்த்தர் மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் எழுதிய கவிதை வரி இது:
கத்லே ஹ{சேன்! அஸல்மே மர்கயே யஜீத் இஸ்லாம் ஜிந்தா ஹோத்தாஹை ஹர் கர்பலா கே பகத்
ஹ{சைனைக் கொன்று விட்டனர்! ஆனால் உண்மையில் மரணமுற்றவர் யஜீத்தான் ஒவ்வொரு கர்பலா நிகழ்ச்சிக்குப் பிறகும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுந்து கொண்டே இருக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இன்றைக்குப் புத்தெழுச்சி பெற்றுப் புதுவெள்ளமென புதிய தலைமுறை புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கர்பலா நமக்குத் தேவை இல்லை@ நாம் களத்தில் இறங்க வேண்டும்@ களப்பணி புரிய வேண்டும்@ முஸ்லிம் லீகின் கொள்கையும் - கொடியும் - கோட்பாடும் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும்@ அதை செய்வதற்கே உறுப்பினர் சேர்ப்பும் - பிரைமரி உருவாக்கலும் நடைபெற வேண்டும் என்கிறோம்.
இதுவரை தலைமை நிலையத்துக்கு வந்த தகவல்களில் மதுரை புறநகர் செய்திதான் தலைப்புச் செய்தி. அதிகப் பிரைமரிகளை அமைத்துள்ள பெருமையும், பேரும் டாக்டர் மொகிதீனுக்கும், தம்பி ஜாகிர் உசேனுக்கும் சேருகிறது. தூரந்தொலைவில் இருந்து இந்த நற்செய்தியைப் பார்ப்போரும், படிப்போரும் புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பார்கள்.
தங்கத் தமிழ் வளர்த்த சங்கம் கண்டது மதுரைச் சீமை. தமிழில் யாத்து வெளியிடப்படும் நூற்கள் யாவும் சங்க காலத்தில் மதுரை சங்கப் பலகைக்கு வர வேண்டும். சங்கத்து தலைப்புலவர்கள் அப்புதிய நூற்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றிருந்தது அந்தக் காலம். அத்தகைய மாமதுரை தென்னிந்தியாவின் தலைமைப்பீடமாக இருந்த காலத்தில் எல்லாம் முஸ்லிம் லீகின் செல்வாக்கும் - சொல்வாக்கும் மிகுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் சின்னகாஜியார் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவராக ஒளிர்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். ஷரீப் சாஹிப், மதுரை ய+சுப் சாஹிப், பிற்காலத்தில் ஹாஜி எஸ். கமாலுதீன், டாக்டர் அப்துல் வஹாப், டார்பிடோ ஏ.கே. பாஷா பாய் போன்ற லீகின் தளபதிகள் வாழ்ந்து சிறந்த மாவட்டம் மதுரை. பெரியகுளம் ஆர்.எம். முஸ்தபா அண்ணன் அவர்கள் மாவட்டச் செயலாளராக இருந்தபோதும், ஹாஜி எஸ். கமாலுதீன் ஹாஜியார் தலைவராக இருந்த போதும் மதுரை மாவட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடி பறக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு இயக்க வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆண்டுதோறும் மாமதுரை வீதிகளில் மீலாது பேரணியும், தமுக்கம் மைதானத்தில் பல்லாயிரம் பேருக்கு இலவச சேவைகள் வழங்கு விழாவும் நடைபெற்று வந்த நாட்கள் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றன.
புறநகரிலும், மாநகரிலும் இப்பொழுது முஸ்லிம் லீகின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் பொறுப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதுவே சிறந்த பணி! நாளைய சமுதாய வாழ்வுக்கு இதுதான் அணி! எங்கெங்கும் எழுச்சிதான் இனி!
-கே.எம்.கே.