டி.என்.டி.ஜே. அவதூறு செய்திக்கு மறுப்பு
பேராசிரியர் ஆசி வாங்கவா சென்றார்?
ஆன்மீக உண்மையை உணர்த்தவே சென்றார்!
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் குறித்து, அவதூறு பரப்பும் வகையில் அவரது நற்பண்புகளையும் நற்குணங்களையும் சரிவர உணராத நிலையில் ~விமர்சனம்| என்ற பெயரில் விஷமத்தனமான தகவல்களை டி.என்.டி. ஜே.நெட் என்ற இணைய தளம் மூலம் பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினரின் தரங்கெட்ட - தறுதலைத்தனமான செயல்பாடுகளைக் கண்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினரும், தன்னலமின்றி சமுதாய தொண்டு புரிகிற தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மீது அன்பும், மதிப்பும் கொண்டவர்களும் வேதனை அடைந்துள்ளதுடன் கடும் கண்டனங்களை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் ~நித்யானந்தா| என்பவருடன் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ~போலி சாமியாரையும் விட்டு வைக்கவில்லை காதர் மொகிதீன்| என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், ~எங்கெல்லாம் சாமியார்கள் உள்ளார்களோ அங்கெல்லாம் அவர்களை தேடி சென்று ~ஆசி| வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் காதர் மொகிதீன் நித்தியானந்தரையும் விட்டு வைக்கவில்லை| என்றும், முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சி நடத்தும் இவர்கள் இந்து மத சாமியார்களிடம் என்ன வேலை?| என்ற ரீதியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது அந்த அமைப்பின் ஊடகங்கள்.
எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் அந்த அமைப்பினர் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா? ஹதீஸில் ஆதாரம் என்று கேட்கக் கூடியவர்கள் தங்கள் விஷயத்தில் இவ்வாறு கேட்க மறப்பது அல்லது மறுப்பது ஏன்? ஒரு செய்தியை எழுதுவதற்கு முன்பாக - அதனை வெளியிடுவதற்கு முன்பாக பலரும் அறியும் வண்ணம் பரப்புவதற்கு முன்பாக குர்ஆனும் - ஹதீசும் கடைப்பிடிக்க சொல்லும் வழிகாட்டல்களை - நெறிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்தார்களா என்று பார்த்தால் கடுகின் நுனியளவும் அதனை கடைப்பிடிக்க வில்லை என்பதுடன் அதுபற்றி கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ~தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதனை ஆராயாமல் பரப்பாதீர்கள். அதன் மூலம் நீங்கள் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விடக்கூடும்? என்றும் (திருக்குர்ஆன்).
~எவனேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாபத்தையோ செய்து (அதனைத்தான் செய்யவில்லை என்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது அதனை சுமத்தினால், நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யை யும், பகிரங்கமான பாபத்தையுமே சுமந்து கொள்கிறான். (திருக்குர்ஆன்).
இதுபோன்று பல்வேறு வசனங்களில் அவதூறு செய்யக்கூடாது என்றும், எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவன் வலியுறுத்தியிருக்கிறான். அப்படியிருக்க இறைவனின் கட்டளைகள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் சிறிதளவு இறையச்சம் கூட இல்லாமல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறித்து அடிப்படையற்ற செய்திகளை தவறான முறையில் அவதூறு பரப்பும் வகையில் எழுதுபவர்கள் எப்படி திருக்குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களாக தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்?
சாமியார்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ - அங்கெல்லாம் தேடிச் சென்று ~ஆசி| வாங்குகிறார் காதர் மொகிதீன் என அபாண்டமான முறையில் அந்த இயக்கம் எழுதியுள்ளது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டுமல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும்கூட அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொண்டு இஸ்லாத்தின் சிறப்புகளை இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்து விளக்கி, ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்வதை பல ஆண்டு காலமாக ஏறக்குறைய 40, 45 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்து வருகிறார். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கருத்தாழம்மிக்க இஸ்லாமிய பிரச்சாரத்தினால் எத்தனையோ மதவாதிகள் மனம் திருந்தியுள்ளனர். இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை திருத்திக் கொண்டுள்ளனர்.
ஆனால், இவற்றையெல்லாம் உணராத அல்லது உணர்ந்தும் அவதூறு செய்யும் நோக்கத்தில் தவ்ஹீது ஜமாஅத்தினர் செயல்படுவது கண்டனத்திற்குரியது.
பிற மத துறவிகளையோ - அறிஞர்களையோ முஸ்லிம்கள் சந்திக்கக் கூடாது. அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தோ - ஹதீஸ்களிலிருந்தோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் ஆதாரம் காட்ட முடியுமா?
உங்களில் சிலரை கொண்டு சிலரை தடுக்காதிருந்தால் உலகில் கிறிஸ்தவ மத மடங்களோ, தேவாலயங்களோ இறைவனை துதிக்கும் பள்ளிவாசல்களோ இல்லாமல் ஆகியிருக்கும் (திருக்குர்ஆன்) என்று கூறுகிறானே? அதன் பொருள்தான் என்ன? அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ய+த, கிறிஸ்தவ (பிறமத) அறிஞர்களிடமும், துறவிகளிடமும் மிகுந்த கண்ணியத் துடன் நடந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் அனைவரும் பிற மதத்தினருடன் மரியாதையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்கள்.
அப்படியிருக்க இந்து மத சாமியார்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை எப்படி தவறாக கொள்ள முடியும்?
அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அந்த சாமியார்களிடம் ஆசி வாங்குவதற்காக கலந்து கொள்ள வில்லை. மாறாக, ஆன்மீக உண்மையை - சத்திய இஸ்லாத்தின் போதனைகளை தெளிவாக எடுத்துரைக்கவே சென்றார். அவர் கலந்து கொண்ட இந்து மத - கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகள் அனைத்திலும் இஸ்லாத்தின் போதனைகளை தௌ;ளத்தெளிவாக உள்ளது உள்ளபடி திருக்குர்ஆனையும், ஹதீசையும் மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் செய்திகளை எடுத்துக் கூற ஒருபோதும் தவறியதும் இல்லை - தயங்கியதும் இல்லை.
பேராசிரியரின் இந்தப் பண்புக்காகவே இந்து மத சாமியார்களும், கிறிஸ்தவ மத அறிஞர்களும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அவசியம் கலந்து கொண்டு இஸ்லாத்தின் செய்திகளை எடுத்துக்கூறுங்கள் என அழைப்பு விடுக்கின்றனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்து வரும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விளம்பரம் செய்து அதை சி.டி.யாகவும், புத்தமாகவும் ஆக்கி காசு பார்க்கும் குறுகிய நோக்கம் இல்லாததால் அந்தப் பணி இறைவனுக்கான பணி. இறைவனின் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பணி என்று கருதுவதால் அதனை அவர் விளம்பரம் செய்து கொள்வதில்லை.
அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகைகள் அவர்கள் பாணியில் தரும் செய்திக் குறிப்புகளையும், வாசகங்களையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு கே.எம். காதர் மொகிதீன் ஆசி வாங்கினார் என இவர்களும் அப்படியே கூறித் திரிவது அதனை அவ்வாறே பிரச்சாரம் செய்வது இவர்கள் திருக்குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பவர்களா? அல்லது பத்திரிகைகள் தரும் நாலாந்தர செய்தி வாசகங்களை ஏற்று பின்பற்றக் கூடியவர்களா? என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும். ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள செய்தி உண்மைதானா? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து சிந்திக்காமல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்காமல் உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அவதூறு பரப்புவது நியாயமா? இதுதான் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்களின் பண்பா?
சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுகாப்பு இதுவே இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் லட்சியம். அதனைப் பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமையும்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எப்பொழுதுமே எவரிடமும் ஆசி வாங்கச் செல்வதில்லை. ஆன்மீக உண்மைகளை உணர்த்தவே செல்கிறார். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் செல்வார் என்பது அவரை நன்கு அறிந்தவர்களின் கருத்தாகும்.
-இரா.ச.மு. ஹமீது