Saturday, March 13, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின மாநாட்டில்

பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கோரிக்கை


மேலப்பாளையம், மார்ச் 13:

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு நடைபெற இருப்பதையொட்டி பல் லாண்டு காலமாக விசாரணை கைதிகளாக கோவை உள் ளிட்ட பல சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு மாநி லப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினம் கடந்த 10ம் தேதி திருநெல்வேலி மேலப்பா ளையத்தில் சமுதாய மறு மலர்ச்சி மாநாடாக நடை பெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசும்போது குறிப்பிடடதாவது:

கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர் களால் 1948ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சென்னை ராஜாஜி ஹாலில் துவக்கப் பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இங்கு தனது 62வது நிறுவன தினத்தை சிறப்பான மாநாடாக கொண்டாடிக்கொண்டி ருக்கிறது.

காயிதெ மில்லத் அவர் கள் அமானிதமாக ஒப் படைத்துச் சென்ற இந்த இயக்கத்தை கட்டிக்காப் பாற்ற வேண்டியது சமு தாய மக்கள் அனைவரின் கடமையாகும்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிறப்புக் குரிய ஜானிபாய், சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஆகி யோரின் சிறப்பான தலை மையின் கீழ் பல சாதனை களை நிகழ்த்திய இந்த இயக்கம் முனீருல்மில்லத் பேராசிரியர் அவர்கள் தலைமையில் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு சமுதாயத்துக்கு ஆக்கப்ப+ர் வமாக பணியாற்றி வருகி றது.

இந்த நல்ல நாளில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்காக, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தங் கள் வாழ்வை அப்பணித் தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளோம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் வாழ்க்கையை தியா கம் செய்த தூய்மையான ஊழியர்கள். அனைவர் களுக்காகவும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

இன்று சமுதாயத்தில் எத்தனையோ இயக்கங்கள் அரசியல் ரீதியாக செயல் பட்டாலும் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் போன்று வரலாற்று பாரம்பரியமோ-சரித்திர சாதனைகளோ அவர்களிடம் இல்லை.

நமது இயக்கத்தின் ஆலிம்கள் அணி அமைப் பாளர் ஹாமித் பக்ரி முன்பு பல் வேறு அமைப்புகளில் செயல்பட்டவர். அவர் எந்த அமைப்புகளுக்காக கடுமையாக உழைத்தாரோ அந்த அமைப்புகளாளே அவருக்கு பிரச்சினை வந் தது. அவரை கண்டு கொள்ளவில்லை.

ஹாமித் பக்ரீயை பயங் கரவாதியாக சித்தரித்துக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது முஸ்லிம் லீக்தான் அவருக் காக குரல் கொடுத்தது. சேலத்தில் நடந்த இ.ய+. முஸ்லிம் லீக் மாநாட்டில் பனாத்வாலா சாஹிபு குரல் கொடுத்தார். தலைவர் பேராசிரியர் காயல்பட்டி னத்திற்கே வந்து தீர விசா ரித்து ஹாமித் பக்ரி விடு தலைக்கு முயற்சி மேற் கொண்டார்.

இப்படி பாதிக்கப்பட்ட வர்கள்-அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் களுக்காக முதல் குரல் கொடுக்கக் கூடிய இயக் கம் இந்திய ய+னியன் முஸ் லிம் லீக்தான்.

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப் பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகி றோம்.

சிறையில் உள்ள பலர் பல நோய்களாலும் பாதிக் கப்பட்டு உள்ளனர். ஒரு வருக்கு இரண்டு கிட்னி களும் பாதிக்கப்பட்டுள் ளது. மருத்துவ சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இப்படி பலவித பாதிப்பு கள் உள்ளன.

உலகத் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடை பெறும் இந்த சூழலை ஒட்டியாவது கோவை உள்ளிட்ட பல சிறைகளில் உள்ள அப்பாவிகள் விடு தலை செய்ய வேண்டும் என மத்திய மாநில அர சுகளை கேட்டுக்கொள்கி றோம்.

முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினம் நடைபெற் றுக் கொண்டிருக்கும் இந் நாளில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் நாம் அனைவரும் ஒரு உறுதியினை எடுத்துக் கொள்வோம்.

சமுதாய மக்கள் அனை வரையும், தாய்ச்சபையான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும், முஸ்லிம் லீகிற்கு 10லட்சம் உறுப்பினர் சேர்க்கும் திட் டத்தை விரைந்து முடித்து வெற்றி காணவும் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகி களும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள் வோமாக.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசினார்.