பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சென்னை, ஜூன், 27_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.
இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.
கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.
கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.
இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.
http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php