இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.
Source: www.tmmk.in