இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவு
முஸ்லிம் தலைவர்கள் இரங்கல்
மும்பை, ஜுன்.26-
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75.
பனாத்வாலா
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம், பி.எட். படிபை முடித்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
அந்த சமயத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004-ம் ஆண்டு வரையிலும் பாராளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
பனாத்வாலா தன்னுடைய மனைவி இறந்தவுடன், சகோதரர்களுடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று மதியம் பனாத்வாலா சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தார். அப்போது `திடீரென' அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அவர் உடல் அடக்கம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது.
பனாத்வாலா கடந்த சில சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதித்துவ சபையாக முஸ்லிம் லீக்கின் ஒப்பந்த உன்னதமான தலைவராக திகழ்ந்தவர். மிகச்சிறந்த அரசியல் சட்ட நிபுணர். உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்த பனாத்வாலா, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் இதயங்களில் நீங்காத இடத்தை பெற்று வானத்தில் சுற்றி வரும் வளர்பிறை போல் விளங்கி கொண்டிருப்பவர்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேசிய லீக் தலைவர் பசீர் அகமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாடுபட்டவருமான பனாத்வாலாவின் மறைவு இந்தியா மற்றும் உலக முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
பேரிழப்பு
தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த பேச்சாளராகவும், நாடாளுமன்றவாதியாகவும், முஸ்லிம்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்த பனாத்வாலாவின் மறைவு பேரிழப்பு'' என்று தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுசெயலாளர் மேலைநாசர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக மட்டுமின்றி, மத நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அயராது பாடுபட்ட பனாத்வாலாவின் மறைவால் துயரமுற்றிருக்கும் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
இதே போல் வக்புவாரிய தலைவர் ஹைதர் அலி, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் ஆகியோர் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1