துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.
காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்
காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் 60 ஆண்டு மணி விழா மாநாட்டில் சமூக நல்லிணக்க விருதுபெற்ற அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலதிக விபரம் பெற : 050 467 4399 / 050 644 04 15
மேற்கண்ட தகவலை அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்