துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு துஆ
துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் முஜாஹிதெ மில்லத் பனாத்வாலா சாஹிபுக்கு 27.06.2008 வெள்ளிக்கிழமை காலை துஆச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மது இக்பால் பேசும் போது முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது பாராளுமன்ற பணி, சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவற்றை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவரின் மஃபிரத்துக்காக துஆச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை செயலாளர் சஹாபுதீன், எம். ஜே. அப்துல் ரவூஃப் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.