Tuesday, February 24, 2009

சிந்தனைக் க‌ள‌ஞ்சிய‌ம்

சிந்தனைக் க‌ள‌ஞ்சிய‌ம்

ஒன்றும் ஒன்றும் இர‌ண்டு தான். ஆனால் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒன்றும்,ஒன்றும் 11 ஆக‌ மாறிவிடுகிற‌து. அதைப் போல சிறுபான்மையின‌ர் ஒன்றுப‌டுவ‌து ஒற்றுமையாக‌ செய‌ல்ப‌டுவ‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பெரும்பான்மையின‌ரின் முடிவை நிர்ண‌யிக்க‌க்கூடிய‌ ச‌க்தியாக‌க் கூட‌ மாறிவிடுகிற‌து.இதுபோன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தில் முஸ்லிம் லீக் ஏற்ப‌டுத்திவிடுகிற‌து.

‍காயிதெ மில்ல‌த் ( ர‌ஹ் )

அமைதி அடைந்த‌ ஆன்மாவைப் பெற்ற‌வ‌ன் எந்த‌ சூழ்நிலையிலும் த‌னிமையை ஒருபோதும் இழ‌ந்துவிடுவ‌து இல்லை. த‌விர்க்க‌வொண்ணாத‌ இடைஞ்ச‌ல் ஏற்ப‌டினும் ஆன்மீக‌ வ‌ள‌ர்ச்சியின் அதி உச்சி நிலையை அடைந்த‌வ‌னுக்கு க‌வ‌ன‌ம் ச‌ல‌ன‌ம் இல்லை ச‌ப‌ல‌ம் இல்லை ச‌ங்க‌ட‌ம் ப‌ற்றிய‌ க‌வ‌லையும் இல்லை. அமைதியாக‌ இருப்ப‌டு அவ‌னின் இய‌ற்கையான‌ இய‌ல்பாகி விடுகிற‌து. இய‌ல்பாகிவிடும் இய‌ற்கை ப‌ண்பாக‌வும் மாறிவிடுகிற‌து.

‍ பேராசிரிய‌ர் கே.எம்.காத‌ர் மொகிதீன் எம்.பி
( தாருல் குர் ஆன் ந‌வ‌ம்ப‌ர் 1995 )

பிற‌ அமைப்புக‌ளைப் போன்று விள‌ம்பர‌ங்க‌ளும், வாய்வீச்சுமாக‌ த‌ன்னை அல‌ங்கார‌ப் ப‌டுத்திக் கொள்ளாம‌ல் அமைதியாக‌ எந்த‌வித‌ ஆர்ப்பாட்ட‌மும் இல்லாம‌ல் ம‌ஹல்லா ஜ‌மாஅத் பிர‌ச்சினைக‌ளை ச‌முதாய‌த்தின் ஒரே அர‌சிய‌ல் பேரிய‌க்க‌மான‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் தீர்த்து வ‌ருகிற‌து. முஸ்லிம் லீகினுடைய‌ ஒரே நோக்க‌ம் முஸ்லிம் ச‌முதாய‌த்திற்கான‌ தேவைக‌ளை ச‌மூக‌ ஒற்றுமைக்கு பாத‌க‌ம் இல்லாத‌ வ‌கையில் கவ‌ன‌த்துட‌ன் நிறைவேற்றுவ‌தே ஆகும்.

முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்
( அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் )

ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் நாளித‌ழ்

Monday, February 23, 2009

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி


வாணியம்பாடி,பிப்.23-

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.

வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனி நல வாரியம்

சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்

இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, February 22, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தியாகிகளில் சிலர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தியாகிகளில் சிலர்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தென் மண்டல மாநாடு கடந்த 24.01.2009 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் காலமெல்லாம் தாய்ச்சபைக்கு உழைத்து தாய்ச்சபையின் வரலாற்றிலும் ஊழியர்களின் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தாய்ச்சபை தியாகிகளை நினைவு கூர்கிறோம்
எஸ்.எம். சரீப்
1967 வருடம் எஸ்.எம்.சரீப் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதையும் சேது சமுத்திரம் திட்டம் முக்கியத்துவம் பற்றி சேது மன்னர்களின் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர்.
பசுங்கதிர் எம். கே. ஈ.மெளலானா
இந்த மாவட்டத்தின் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து செயலாற்றிய பசுங்கதிர் எம். கே. ஈ. மெளலானா அவர்கள் வரலாற்று ஆராய்ச்சி நூலானா சேதுவிலிருந்து சிந்து வரை என்ற அரசு பரிசு பெற்ற நூலைத் தந்தவர்.
எம்.எஸ்.அப்துல் ரஹீம்
1962 இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மன்னர் சேதுபதியை எதிர்த்து முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டவர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அப்துல் ரஹீம்
டி.எஸ்.ஓ. அப்துல் காதர்
1981 டி.எஸ்.ஓ. அப்துல் காதர் மாவட்ட தலைவராகவும் கடலாடி சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகவும் போட்டியிட்டவர்.
முஸ்லிம் லீக் இயக்கத்திற்காக உழைத்த இயக்க கண்மணிகள்
மெளலானா நூரி ஹஜ்ரத், முகவை எம்.எஸ். அப்துல்லா, முகவை செய்யதலி ஆலிம், மெளலவி முதுகுளத்தூர் சேட் ஆலிம், பெரியகுளம் தியாகி அப்துர் ரஹ்மான், வலிநோக்கம் சே.மு. முஹம்மது மீரா சாஹிப், கமுதி டி.எஸ்.டி. முஹம்மது தாவூது, தேவிபட்டிணம் எம்.எஸ்.எம். புஹாரி, ஏர்வாடி பி.எஸ்.கே. அப்துல் ரஹ்மான், எஸ்.தரைக்குடி கே.எம். நல்லகனி ராவுத்தர், எமனேஸ்வரம் எஸ்.துல்கருணை, பரமக்குடி எஸ்.அல்லா பிச்சை, எக்ககுடி ஏ.ராவுத்தர் பிள்ளை, அழகன் குளம் அப்துல் மஜீது, கீழக்கரை எஸ். ஐதுரூஸ், முகவை இ.ஏ. இபுராகீம், முகவை பி.நாகூர்கனி, கீழக்கரை எம். தாவூது, பார்த்திபனூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான், மண்டபம் பி.ஏ.எம் முஹைதீன் குப்பை மரைக்காயர், ஆர்.எஸ்.மங்களம் என்.ஏ. மெளலா முஹைதீன் ஆலிம், திருப்பாலைக்குடி சல்மான் பாரீஸ், என்மனங்கொண்டான் ஜே. காதர் முகைதீன், தொண்டி அப்துஸ் ஸலாம், கீழக்கரை ஏ.எம்.எம்.சாகுல் ஹமீது, வாலிநோக்கம் பி.முஹம்மது இப்னு செய்யது, வாலிநோக்கம் பி.என்.ஏ. பீர் முஹம்மது சம்மாட்டி, சாயல்குடி எஸ்.என்.சந்தனமீரா, சித்தார்கோட்டை எம்.எஸ்.எம். வருசை களஞ்சியம், ஆர். எஸ்.மங்களம் க.சீ.அப்துல் முத்தலிபு, மண்டபம் எஸ்.முஹைதீன் பக்கீர், தேவிபட்டிணம் சுல்தான், முகவை சே.ரா.மீராசா ராவுத்தர், முகவை வி.எஸ்.சீனி மதார், பனைக்குளம் முஹம்மது முபாரக் ஆலிம், முகவை கே.கே.எஸ்.ஏ. பஜ்ருத்தீன், கீழக்கரை ஏ.கே.எஸ்.கபீர், தேவிபட்டிணம் செய்யது நூகு, உமர் நகர் அப்துல் ஸமது, எமனேஸ்வரம் முகம்மது இக்பால், மண்டபம் எம்.அப்துல் மஜீத்கான், மண்டபம் எஸ்.எம்.எம்.எஸ். மீராசா மரைக்காயர்.

நன்றி : மணிச்சுடர் நாளிதழ்

Thursday, February 19, 2009

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்


வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !

தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது


நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !

சிறுபான்மையினர் கடமைகள்


நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .

குர்ஆன் போதனை

நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்

அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !


இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது

முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?


எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!

முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி

உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன


ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !

சிறப்படைவது எவ்வாறு?

நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !


அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !

நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்


அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !

இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !

முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !


இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.

நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !


அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்

பாத்திரமானவர்களாகிறோம் !

நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .

( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )

தொகுப்பாளர் :

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316

வெளியீடு :

மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926

விலை : ரூ. 70 ( எழுபது )

தாம்பரத்தில் முஸ்லிம் லீகின் முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம்

தாம்பரத்தில் முஸ்லிம் லீகின் முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம்



காலம்:20-02.2009 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி

இடம் : நெ.12, கல்யாண் நகர், முதல் குறுக்குத் தெரு, (முடிச்சூர் ரோடு), மேற்கு தாம்பரம்.

தலைமை : கே.ஏ.எம். அப்துல்லாஹ் பாஷா (காஞ்சி மாவட்டத் தலைவர்)

முன்னிலை:கமுதி பஷீர், மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர்

கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், (தலைமை நிலையச் செயலாளர்)

திருப்ப+ர் எம்.ஏ. சத்தார் (காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்) கே.எம். நிஜாமுதீன் (மாநில இளைஞர் அணி அமைப்பாளர்)

ஆப்பனூர் பீர் முஹம்மது (சென்னை மாவட்ட அமைப்புப் பணி ஒருங்கிணைப்புக்குழு) முக்கியமான இக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

காஞ்சி மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்

தென்சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்

தென்சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்



இக்கூட்டத்தில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்குமாறு வடசென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலம்:21-02.2009 சனிக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : நெ.16, தைபூன் அலிகான் ஹோட்டல் அல்மாஸா (ஆதம் மார்க்கெட் அருகில்), திருவல்லிக்கேணி, சென்னை.

தலைமை : ஹாஜி கே.பி. இஸ்மத் பாட்சா

(தலைவர், தென் சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

முன்னிலை:ஏ.பி. அமானுல்லா (மாவட்டப் பொருளாளர்)

ஆப்பனூர் கே.பீர் முஹம்மது - நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர் (சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் அமைப்புப் பணி ஒருங்கிணைப்புக்குழு)

தென் சென்னை மாவட்டம் முழுவதும் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள், பகுதி பொறுப்பாளர்கள், கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் லீகின் முன்னோடிகள் அனைவரும் தவறாது பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

தென்சென்னை மாவட்டச்செயலாளர் பூவை எம்.எஸ். முஸ்தபா அழைப்பு விடுத்துள்ளார்

ஐ.ஏ.எஸ். தேர்வு ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ். தேர்வு ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி



பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி - தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118ஃ13, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு,
சென்னை - 3. அலைபேசி, பொதுச் செயலாளர் - 9444165153

Wednesday, February 18, 2009

உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி

உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=46

தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி அது நிறைவேற்றப்படுவ தற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டது.

2008 ஜுன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இக் கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது.

கடந்த 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் சமுதாயத்தின் முக்கியமான 16 கோரிக்கைகள் தீர்மானமாக முன்மொழியப்பட்டன. அதில் பிரதானமாக உலமாக்கள் நல வாரிய கோரிக்கை முன்மொழியப்பட்டது.

இம்மாநாட்டில் பங் கேற்று நிறைவுறையாற்றிய தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஹஹஇந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கின்ற அரசு|| இந்த தீர்மானங்களை பொறுத்த வரையில் உங்கள் உணர்வோடு நானும், உரிமை யுடன் முதல்வரிடம் முறையாக எடுத்துச் சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில், உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.

சொன்னதைச் செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்|| என்ற கலைஞரின் வாக்குறுதிக்கேற்ப இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனி கவனம் செலுத்துவதற்காக சிறுபான்மைனருக்கான தனி இயக்குனரகம் சிறப்பாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்களுக்காக தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றோம்.

நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கும் சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணை புரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் உள்ள சங்கைக்குரிய உலமா பெருமக்கள் முஸ்லிம் லீகின் முன்னனியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றனர்.

வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது சமுதாய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் பள்ளிவாசல் இமாம்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, February 15, 2009

மேலப்பாளையம் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: "பெண்கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்''

மேலப்பாளையம் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: "பெண்கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்''
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு


மேலப்பாளைம், பிப்.15-

"பெண் கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்'' என்று மேலப்பாளையம் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பேசினார்.

பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அன்னை ஆஜிரா பெண்கள் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா மற்றும் 5-ம் ஆண்டு தொடக்க விழா ஆகியன நேற்று காலையில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.

விழாவுக்கு தொழில் அதிபர் ஏ.அன்வர் உசேன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் எஸ்.கே.செய்யது அகமது வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிந்தியா ஜோன்ஸ் அறிமுக உரையாற்றினார்.

75 மாணவிகளுக்கு பட்டம்

விழாவில் 75 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி மிக முக்கியம். 21-ம் நூற்றாண்டு என்பது கல்வி நூற்றாண்டாகவே இருக்கும். எனவே ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு வரும் கல்வி கற்க வேண்டியது அவசியம். குறிப்பாக பெண் கல்வியை ஒவ்வொரு பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும். தங்களுடைய பெண் குழந்தையை புறக்கணிக்காமல் ஆண்களுக்கு நிகராக அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

நாட்டின் முன்னேற்றம்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண்கல்வியின் முன்னேற்றம். இதனை கருத்தில் கொண்டு பெண்கள் படிப்பதற்கு தடை போடாமல் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவர்களை படிக்க வைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாய கடமையாகும்.

பட்டம் பெறுகிற மாணவிகளும் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்காகவும் மனம் உகந்து உழைக்க வேண்டும். நம் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிற பிரதீபா பட்டீல் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதியான மேலப்பாளையத்தில் செயல்படுகிற இந்த கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சென்னை கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.ஜெரினா, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவன கூட்டமைப்பு பொருளாளர் எஸ்.அகமது மீரான், மேலப்பாளைம் நகரசபை முன்னாள் தலைவர் எஸ்.முகமது அபுபக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.முகமது மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் எஸ்.கே.குதா முகமது நன்றி கூறினார்.

Sunday, February 8, 2009

தஞ்சையின் பசுமை எதனால்..?

kalam kadir
toaimantimes@yahoogroups.com,
muduvai hidayath ,
noor shajahan ,
shafaath ahamed ,
Adirai Mansoor ,
mohamed hussain

dateSun, Feb 8, 2009 at 8:06 PM
subjectRe: [AIMAN Times] 2009 பிப்ரவரி 28 சனி தஞ்சை திலகர் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு தஞ்சை அழைக்கிறது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள்


தஞ்சையின் பசுமை எதனால்..?
நெஞசையள்ளும் கேள்வி...
"பச்சை பிறைக்கொடியின்
வண்ணம் அதனால்"
மெச்சிடும் வண்ணம்
உச்சமாய் அமையட்டும்...
கூறு போட்டவர்கள்;
கீறி போட்டவர்கள்;
மாறி போனவர்கள்;
வேறிடம் தேடியே...
வெற்றிடம் ஆனவர்கள்;
முற்றிலுமாய் "உணர்வு" பெற
வெற்றி பெற வேண்டும்,
தஞ்சை மாநாடு(இன்ஷா அல்லாஹ்)
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்க்ளோடு...

-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Saturday, February 7, 2009

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 50-வது கிளை தாம்பரம் நகரத்தில் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 50-வது கிளை தாம்பரம் நகரத்தில் தொடக்கம்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 50-வது கிளை தாம்பரத்தில் துவக்கப்பட்டது. இதற்கான கூட்டம் மேற்குத் தாம்பரம் கல்யாண் நகர் 12-ம் இலக்கத்திலுள்ள மாவட்ட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 2-2-2009 திங்கள் மாலை மாவட்ட துணைத் தலைவர் ஜே.எம். அப+சாலிஹ் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூடுவாஞ்சேரி கே.எஸ். தாவ+த் முன்னிலையில் நடைபெற்றது. ஊரப்பாக்கம் கிளைத் தலைவர் எம். ஜவாஹீர் சிறப்புப் பிரதிநிதியாக பங்கேற்றார்.

தாம்பரம் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோரின் விவரம்

தலைவர் - எம். சாகுல் ஹமீது
செயலாளர் - ஐ. அப்துல் ரஷீது
பொருளாளர் - பி. காதர் மொய்தீன்
துணைத் தலைவர் - எஸ்.ய+. முபாரக் அலி
துணைச் செயலாளர் - எஸ். சாகுல் ஹமீது
அமைப்புச் செயலாளர் - ஏ. தமீம் அன்சாரி
வர்த்தகர் அணி செயலாளர் - ஏ. அப்பாஸ் அலி
காயிதெ மில்லத் பேரவை செயலாளர் -
கே.எம். பரகத்துல்லா
மகளிர் அணி தலைவர் - ஏ. ஷபியா ஃபர்வீன் ஆலிமா
மகளிர் அணி துணைத் தலைவர் - ஏ. ஜீனிஹாபீவி
மகளிர் அணி துணைச் செயலாளர் - ஏ. சபியா பானு
இளைஞர் அணி துணைச் செயலாளர் - டி. அஜீஸ்
மாணவர் அணி செயலாளர் - ஆர். இப்ராஹீம்
தொண்டர் அணி துணைச் செயலாளர் -எம். ரபீக்
தொழிலாளர் துணைத் தலைவர் - எம். ஜாபர் சாதிக்
வர்த்தக அணி துணைச் செயலாளர்-அப்துர் ரஷீது
தொழிலாளர் துணைச் செயலாளர் - எம். மொய்தீன்

காஞ்சி மாவட்டத்திலுள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கிளைகள்

1. கூடுவாஞ்சேரி 2. மாடம்பாக்கம் 3. ஊரப்பாக்கம்
4. செங்கல்பட்டு 5. மதுராந்தகம் 6. அச்சரப்பாக்கம்
7. காஞ்சிபுரம் 8. குன்றத்தூர் 9. மாங்காடு - பட்டூர்
10. நந்தம்பாக்கம் 11. உத்திரமேரூர் 12. பரணிபுத்தூர்
13. கோவ+ர் 14. அனகாபுத்தூர் 15. பம்மல் 16. பொழிச்சலூர்
17. பல்லாவரம் 18. ஆலந்தூர் 19. கொட்டிவாக்கம்
20. பாலவாக்கம் 21. நீலாங்கரை 22. வெட்டுவாங்கேணி
23. 26. கோவளம் 27. புதுப்பட்டினம் 28. கேளம்பாக்கம்
29. திருப்போரூர் 30. மகாபலிபுரம் 31. திருக்கழுக்குன்றம்
32. கருமாரப்பாக்கம் 33. சதுரங்கப்பட்டினம் - மெய்ய+ர்
34. செம்பாக்கம் 35. கூவத்தூர் 36. அடையாளச்சேரி
37. பவுஞ்சூர் 38. பனைய+ர் 39. விளம்ப+ர் 40. கடம்பாக்கம்
41. சித்தாமூர் 42. மறைமலைநகர் 43. லப்பைகண்டிகை
44. எம்.கே.என். கிண்டி 45. மேடவாக்கம் 46. பள்ளிக்கரணை
47. ஜல்லடியான்பேட்டை 48. பெரும்பாக்கம்
49. கருங்குழி 50. தாம்பரம்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்

மாவட்டத் தலைவர் -கே.எம். அப்துல்லா பாஷா, காஞ்சிபுரம்
மாவட்ட செயலாளர்-கே.எஸ். தாவ+த் கூடுவாஞ்சேரி
மாவட்டப் பொருளாளர்-எஸ். அப்துல் ஹலீம் மாடம்பாக்கம்
மாவட்ட அமைப்பு செயலாளர்- எஸ். ஜாஹிர் புதுப்பட்டினம்
மாவட்ட துணைத் தலைவர்கள்- ஏ. சர்தார் பாஷா, செங்கல்பட்டு,
கே. கமால் பாஷா, பல்லாவரம்
ஜே.எம். அப+சாலிஹ் - மேற்கு தாம்பரம்
என்.எம். அப்துல் ஹக் பாலவாக்கம்
ஐ. அசதுல்லாஹ் மதுராந்தகம்
ஏ. ஹபீபுல்லாஹ்,
விளம்ப+ர்மாவட்ட துணைச் செயலாளர்கள்- ஐ. அப்துல் ரஷீது மேற்கு தாம்பரம்
ஏ.அப+ சாலிஹ், எம்.சி., கோவளம்
எச். நியமத்துல்லாஹ் சதுரங்கப்பட்டினம்
பி. ஏஜாஸ், பி.ஏ., மதுராந்தகம்
எஸ். அமானுல்லாஹ் நந்தம்பாக்கம்
ஏ. சம்சுதீன் சோழிங்கநல்லூர்
காயிதெ மில்லத் பேரவை மாவட்ட அமைப்பாளர்
-முஹம்மது காஸிம்-ஆலந்தூர்
காயிதெ மில்லத் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் - எம். முஹம்மது இப்ராஹீம் நந்தம்பாக்கம்
மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் - பி. ஜம்ரூத் பஷீர், பனைய+ர்
மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் - எஃப். ஃபாத்திமா பானு, மாங்காடு
இளைஞர் அணி-எஸ். முஹம்மது இக்பால் மாவட்ட அமைப்பாளர் கூடுவாஞ்சேரி
இளைஞர் அணி- எம். முஹம்மது ய+னுஸ் மாவட்ட துணை அமைப்பாளர் - பனைய+ர்
தொழிலாளர் அணி-எச். அசேன் பாஷா- மாவட்ட துணை அமைப்பாளர்பம்மல்
தொண்டர் அணி-ஆர்.டி. முஹம்மது சித்தீக் மாவட்ட அமைப்பாளர் நீலாங்கரை
தொண்டர் அணி - ஏ. கவுஸ் பாஷா மாவட்ட துணை அமைப் பாளர், மதுராந்தகம்
வர்த்தகர் அணி- எஸ். ஷேக். அப்துல் காதர் மாவட்ட அமைப்பாளர் செம்பாக்கம்
வர்த்தகர் அணி-ஜே.எஸ். முபாரக் அலி மாவட்ட துணை அமைப்பாளர் காஞ்சிபுரம்
மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்
கே.எம். அப்துல்லா பாஷா கூடுவாஞ்சேரி
கே.எஸ். தாவ+த்
எஸ். அப்துல் அலிம்
ஏ. சர்தார் பாஷா
கே. கமால் பாஷா
ஏ. அபுசாலி எம்.சி.,
கே. அமானுல்லா
புரசை எஸ். முஸ்தபா
ஏ. அப்துல்காதர்
எம். யஹ்யா சித்திக்
எஸ். ஜாஹிர்
ஏ. அஸ்லம் பாஷா
மாநில பொதுக் குழு சிறப்பு அழைப்பாளர்கள்
ஐ. அப்துல் ரஷீத்
எஸ்.எம்.எஸ். இப்ராஹிம்
ஜே.எம். அபுசாலிஹ்
பி. ஏஜாஸ்

2009 பிப்ரவரி 28 சனி தஞ்சை திலகர் திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநாடு தஞ்சை அழைக்கிறது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள்

2009 பிப்ரவரி 28 சனி தஞ்சை திலகர் திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநாடு தஞ்சை அழைக்கிறது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள்

- காயல் மகப+ப்

http://www.muslimleaguetn.com/news.asp

அல்லாஹ் மிகப் பெரியவன் முஸ்லிம்கள் ஒற்றுமை ஓங்குக! ஆம்! அல்லாஹ{ அக்பர்| முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! இந்த சமுதாயம் ஆண்டாண்டு காலமாய் உச்சரித்து வரும் முழக்கங்கள்!

முன் பிருந்தவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்ததும் வரும் தலைமுறைக்கு நாங்கள் கற்றுக் கொடுப்பதும் இந்த வார்த்தைகளைத்தான்!

அல்லாஹ்வை முன்னிருத்தி முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது -எங்கள் கொள்கையில் மட்டுமல்ல, முழக்கத்திலும்தான்!

இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் இயக்கம் தேவை என சமுதாயம் உணர்ந்த போது மலர்ந்தது முஸ்லிம் லீக்!

இதை உருவாக்கியவர்கள் சாதாரணமானவர்களல்லர் சரித்திரம் சமைத்தவர்கள்@ சமூகம் அமைத்தவர்கள் அறிஉலக மேதைகள்! அன்பார்ந்த தலைவர்கள்!

ஓரிருவர் அல்லர் மூன்றாயிரம் பேர் ஒன்று திரண்டு உருவாக்கிய இயக்கம் அது! 1906 டிசம்பர் 30ல் தாகாவில் மலர்ந்த தாய்ச்சபை!

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமென்பதை முதல் லட்சியமாக கொண்டு உழைத்த இயக்கம்! நீதித்துறையிலும் நிர்வாக அமைப்பிலும் முஸ்லிம்களுக்கு இடம் பெற்றுத் தந்த இயக்கம்!

மத்திய மாநில சட்ட மன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு தனித் தொகுதி பெற்றுத் தந்த இயக்கம்! இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகங்கள் செய்த இயக்கம்!

1947 ஆகஸ்ட்15-நாட்டுப் பிரிவினைக்குப் பின் முஸ்லிம் என்று சொல்லவே அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் அஞ்சாதீர்! அல்லாஹ் நம்மோடிருக்கிறான் அந்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள்||! என அறைகூவல் ஒலித்தது இந்த தமிழகத்தில்தான்!!

முஸ்லிம் என்ற பெயர் தாங்கி இனி கட்சி நடத்த முடியுமா என கலவரப்பட்ட நேரத்தில் 1948 மார்ச் 10-ல் அரசினர் தோட்டத்திலேயே கூட்டம் நடத்தி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற பெயரால் இயக்கம் தொடரும் என அறிவித்தவர் காயிதே மில்லத்

மிரட்டல் உருட்டல்களுக்கு துறவரம் போகவில்லை பட்டம் பதவிகளுக்காக மதம்| துறக்கவில்லை ஊனிலும் உணர்விலும் முஸ்லிம்|| என்ற பெயர் இருந்தே தீரும் என உறுதியாக அறிவித்தது முஸ்லிம் லீக்||

அன்றைக்கு முஸ்லிம் லீக் இல்லையென்றால் இன்றைக்கு பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் பாங்கின் ஓசை கேட்டிருக்காது திருமணங்கள் பள்ளிவாசல் பதிவேட்டில் நிறைவேறியிருக்காது இறந்தவர் உடல் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்வதற்கு பதில் தகனம் அல்லவா செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்!.

பொது சிவில் சட்டத்தின் குரல் வளையை நசுக்கியதும் ஷரீஅத் சட்டத்தை காப்பாற்றியதும் முஸ்லிம் லீக்! உர்து மொழிக்கு அந்தஸ்தும் முஸ்லிம் உணர்வுகளுக்கு மதிப்பும் கிடைக்கச் செய்தது முஸ்லிம் லீக்

பிற்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்கள்-தமிழ் பேசும் லெப்பைகள் மட்டுமல்ல உருது பேசும் தக்னிகளும் அதில் உள்ளடக்கம் என உரிமை பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக்!

சிறு பான்மையினருக்கு தனி அமைச்சரகம் நீதியரசர் ராஜேந்திர சச்சார் பரிந்துரை அமல்படுத்தப்படவும் நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் அமையவும் காரணமான இயக்கம் முஸ்லிம் லீக்!

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு நாடு முழுவதும் கலை அறிவியல் கல்வி கூடங்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என சமுதாயத்திற்கு கிடைத்த நன்மைகளுக்கெல்லாம் காரணம் முஸ்லிம் லீக்!

சாதனைகளை முஸ்லிம் லீக் வெளிச்சம் போட்டு காட்டியதில்லை செய்ததை சொல்லிக் காட்டி காசு பார்த்ததும் இல்லை!

தகர்க்கப்பட்ட மஸ்ஜிதுக்காக சமுதாய பெண்களை வீதியில் இறக்கி வேடிக்கை காட்டாமல் சட்டப் ப+ர்வ காரியங்களை சந்தடியில்லாமல் செய்தது முஸ்லிம் லீக்!

உணர்ச்சிகளை தூண்டிவிட்டு எதிர்காலக் கனவுகளை பாழ்படுத்தி இளைஞர்கள் எவரையும் சிறைக்கனுப்பவில்லை முஸ்லிம் லீக்!

மார்க்கத்தின் பெயரால் சமுதாயத்தின் அணிவகுப்பை சீர்குலைக்காத பேரியக்கம் முஸ்லிம் லீக்!

அதனால்தான் சங்கைக்குரிய உலமாக்களும் சமுதாய புரவலர்களும், பள்ளிவாசல் இமாம்களும் முத்தவல்லிகளும் இந்த இயக்கத்தை ஆசிர்வதிக்கின்றனர் தாய்ச்சபை என அழைக்கின்றனர்.

இந்த சிறப்புமிக்க தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநாடுதான் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சையில் நடக்கிறது! அஞ்சி மனம் சேர்ந்தவர் வாழ்ந்ததே இல்லை என விஞ்சு புகழ் சேர்க்க நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள்! நீங்கள் கையில் ஏந்தி வர வேண்டிய கொடி பசுமை வண்ணம்! இரு முனையும் கூர்மையான இளம் பிறை நம் சமூகச் சின்னம்! கூன் பிறை பிச்சை பாத்திரமல்ல@ ப+ரண சந்திரன்@ அதில்தான் புதைந்து கிடைக்கிறது!

நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக் கொடி நம் சமுதாயக் கொடி! உலமாக்களும் உமராக்களும் சத்திய சீலர்களும் சமுதாயத் தலைவர்களும் உயர்த்திப் பிடித்த கொடி!

இதன் வண்ணமும் சின்னமும் சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து விட்டவை மதிப்பிற்குரிய நன் மக்களின் உழைப்பிற்கு இறைவன் சொர்க்கத்தில் தரும் பரிசு பச்சைப் பட்டாடைகள்தான் (அல்குர்ஆன் 76:21,22)

|அத்தாரிக|; |அந்நஜ்மு| நட்சத்திரங்கள் இறைவனின் அத்தாட்சிகள்! இந்த பெருமை மிக்க பச்சிளம் பிறைக் கொடியை கரங்களில் ஏந்தி வாருங்கள்! தக்பீர் முழக்கத்தை உரத்த குரலில் ஒலித்து வாருங்கள்! சுற்றத்தையும் நட்பையும் ஒரு சேர அழைத்து வாருங்கள்!

பிப்ரவரி இருபத்தி எட்டு தஞ்சையில் சங்கமிப்போம் உரிமைகளை வென்றெடுப்போம்! வாரீர்!

Friday, February 6, 2009

டி.ஜே.எம் ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத்

abubacker
toabdul rahim mohamed iqbal

ccabdul rahman ,
Muduvai Hidayath

dateFri, Feb 6, 2009 at 2:19 PM
subjectRe: டி.ஜே.எம் ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள்

hide details 2:19 PM (-87707 minutes ago) Reply


Dear Mr.Iqbal,
Assalamualaikum[warah...
I spoked to TJM Hajrath,he is not participating in that TMMK Conference.Detail news will be updated in our website on 8th Feb09.
Keep in touch.
Best regards,
Abubacker
H.Q.Secretary : IUML
----- Original Message -----
From: abdul rahim mohamed iqbal
To: info@muslimleaguetn.com
Sent: Thursday, February 05, 2009 7:56 PM
Subject: டி.ஜே.எம் ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நன்றி! நன்றி!
என் பெயர் முகமது இக்பால் - வடக்கு மாங்குடி, தஞ்சை மாவட்டம். வசிப்பது துபை
டி.ஜே.எம் ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தமுமுக வின் அரசியல் கட்சி துவக்க விழாவில் வாழ்த்துரை வழங்குதாக வந்த செய்தி தவறானது

Monday, February 2, 2009

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது உலாமாக்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது உலாமாக்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு


சென்னை, பிப்.2-

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் ஆட்சி

தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலாமாக்கள் மாநாடு நேற்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர்மொய்தீன் எம்.பி. தலைமையில் நடந்தது. மாநாட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இருக்கக்கூடிய உறவு, தொப்புள் கொடி உறவாக எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பலரும் இங்கே கூறினார்கள். நானும் அதைத்தான் வழிமொழிய விரும்புகிறேன்.

எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய சிலர், குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆட்சியை விமர்சனம் செய்கின்ற போதெல்லாம் இது மைனாரிட்டி ஆட்சி என்று கூறிவருகிறார். இதனை முதல்-அமைச்சர் குறிப்பிடுகிற போது இது மைனாரிட்டி ஆட்சி தான், சிறுபான்மையினருக்காக இருக்கக்கூடிய ஆட்சிதான் என்றார்.

நிறைவேற்ற பாடுபடுவேன்

சிறுபான்மையினர் உரிமைகளை பெற இந்த மாநாடு நடைபெற்று, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கருணாநிதி தலைமையில் நடைபெறுகிற ஆட்சி. தீர்மானம் போட்டு எடுத்து வந்தால் தான் இந்த அரசு நிறைவேற்றும் என்பதல்ல. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கிற அரசு, இந்த அரசு.

இந்த தீர்மானங்களை பொறுத்தவரையில் உங்கள் உணர்வோடு நானும் உரிமையுடன் முதல்-அமைச்சரிடம் முறையாக எடுத்துச்சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில் உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன்.

முஸ்லிம்களுக்கு ஆற்றியவை

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த சமுதாயத்தினருக்காக என்னென்ன பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என எண்ணிப்பார்க்க வேண்டும். 69-ல் மிலாது நபிக்கு அரசு விடுமுறை விடப்பட்டது. 2001-ல் அதனை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ரத்து செய்தார். பின் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

73-ல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். 74-ல் அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது. 98-ல் ஓய்வூதியம் பெற்ற உலாமாக்கள் 2 ஆயிரம் பேராக இருந்ததை 2200 ஆக உயர்த்தினோம். 2008-ல் 2400 ஆக உயர்த்தியுள்ளோம். 98-ல் மதுரை வக்பு வாரிய கல்வி நிறுவனங்களை பராமரிக்க ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

பராமரிப்புக்கு ரூ.40 லட்சம்

99-ல் வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்க ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது. ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பித்த அனைவருக்கும் அந்த வசதியை செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. 2000-ல் உருது அகாடமி தொடங்கப்பட்டது. 2001-ல் காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. 2007-ல் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கால கட்டங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதி எண்ணிப்பார்க்க முடியாத எவ்வளவு சாதனைகளை சிறுபான்மை சமுதாயத்திற்காக நிறைவேற்றியிருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தட்டாமல் திறக்கும் அரசு, கேட்காமல் தருகிற அரசு இந்த அரசு. உங்கள் உரிமைகளுக்காக உங்களோடு இருந்து நானும் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தீர்மானங்கள்

சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், உலாமா நல வாரியம் அமைக்க வேண்டும். உலாமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், மசூதிகள் கட்டவும், பழுதடைந்தவற்றை புதுப்பிக்கவும் அனுமதி வேண்டும். தர்கா, ஜியாரத் வழிமுறையில் நம்பிக்கை இல்லாதவர் வக்பு வாரிய தலைமை பொறுப்பில் இருப்பதும், அவர் சார்ந்த கொள்கை உடையவர்களை மசூதி நிர்வாகங்களில் திணிப்பதும் தமிழக முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இதற்கு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் சையது சத்தார், பொருளாளர் செய்யது அகமது, உலாமா சபை தலைவர் அப்துர் ரஹ்மான், தமிழக அரசு தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அïப், எம்.எல்.ஏ.க்கள் கலிலூர் ரஹ்மான், அப்துல் பாசித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.