உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=46
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி அது நிறைவேற்றப்படுவ தற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டது.
2008 ஜுன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இக் கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது.
கடந்த 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் சமுதாயத்தின் முக்கியமான 16 கோரிக்கைகள் தீர்மானமாக முன்மொழியப்பட்டன. அதில் பிரதானமாக உலமாக்கள் நல வாரிய கோரிக்கை முன்மொழியப்பட்டது.
இம்மாநாட்டில் பங் கேற்று நிறைவுறையாற்றிய தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஹஹஇந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கின்ற அரசு|| இந்த தீர்மானங்களை பொறுத்த வரையில் உங்கள் உணர்வோடு நானும், உரிமை யுடன் முதல்வரிடம் முறையாக எடுத்துச் சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில், உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
சொன்னதைச் செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்|| என்ற கலைஞரின் வாக்குறுதிக்கேற்ப இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனி கவனம் செலுத்துவதற்காக சிறுபான்மைனருக்கான தனி இயக்குனரகம் சிறப்பாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்களுக்காக தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றோம்.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கும் சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணை புரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் உள்ள சங்கைக்குரிய உலமா பெருமக்கள் முஸ்லிம் லீகின் முன்னனியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றனர்.
வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது சமுதாய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் பள்ளிவாசல் இமாம்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.