Friday, May 30, 2008

சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ் ஸமத் சாஹிப்

காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்



http://www.muslimleaguetn.com

மத்திய அமைச்சர் இ.அஹ்மத் சாஹிப் மற்றும் பனாத்வாலா சாஹிப் ஆகியோருடன் பேராசிரியர்



தகவல் : நர்கிஸ் பெண்கள் மாத இதழ்

aneesnargis@hotmail.com

காயிதெ மில்லத் தபால்தலை



தகவல் : அப்துல் ரஹ்மான்

ibnuthalabathi@yahoo.co.in

மணிச்சுடர் தமிழ் நாளிதழ்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் பிரச்சாரக்கூட்டம்

Tuesday, May 20, 2008

ஊடகங்களில் பேராசிரியரின் அமீரக நிகழ்வுகள்

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=570&Country_name=Gulf&cat=new


http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=546&Country_name=Gulf&cat=new

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=544&Country_name=Gulf&cat=new

http://www.satrumun.com/

http://www.satrumun.com/localnews

http://satrumun.com/localnews/?p=373

http://www.muslimleaguetn.com/


http://www.muduvaihidayath.blogspot.com/

http://www.quidemillathforumuae.blogspot.com/

http://www.aimantimes.blogspot.com/

துபாய் அமீரக காயிதெ மில்லத் பேரவை நிகழ்வு புகைப்படங்கள்



















Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

Sunday, May 18, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!


அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை

தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.


முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.

கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.

திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.

தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.


தளபதி உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.

ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.

பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.

மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.

1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.

யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.

சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.

காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.


நூல் வெளியீடு

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா

அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.

இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.

பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.

போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.

கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.


மீண்டும் இயக்கப் பாடல்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.

காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா

முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,

பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.

முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.

தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.

முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.

தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.

எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.

எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.

இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

துபாயில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

துபாயில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

துபாய்க்கு 14.05.2008 புதன்கிழமை அதிகாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகைபுரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அபுதாபி அய்மான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா, அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒரு வாரப் பயணமாக பேராசிரியர் கே. எம்.காதர் மொகிதீன் எம்.பி., மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் அமீரகம் வருகை புரிந்துள்ளனர்.

விமான நிலையத்தில் அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் கீழக்கரை காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ மற்றும் நிர்வாகிகள் சம்சுதீன் சாஹிப், சிட்டிசன் அப்துல் மஜீது ,ஹமீதுர் ரஹ்மான், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, பொருளாளர் அப்துல் கத்தீம், தளபதி ஏ. முஹம்மது தாஹா, யஹ்யா முஹ்யித்தீன், காயல் நூஹு சாஹிப், ஏகத்துவ மெய்ஞான சபையின் எம்.ஜே. அப்துல் ரவூஃப், ஷாஜஹான், அஹமத் இம்தாதுல்லாஹ், முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.

அமீரகத்தில் பேராசிரியருடன் தொடர்பு கொள்ள காயிதே மில்லத் பேரவை நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளவும். 00971 50 644 04 15

அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா

அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா 15.05.2008 (ஹிஜ்ரி 1429 ஜமாதுல் அவ்வல் பிறை 10) வியாழன் மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டல்
அல் ஷலீலா ஹால், 3வது மாடி,ஹம்தான் ரோடு, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத். பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன் M.P மற்றும் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி அய்மான் சங்கத்தின் முழக்கமாவது :

அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!



மேலதிக விபரம் பெற :

hameedsac@gmail.com
050 581 88 76

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு


அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

துபாய் - அமீரக காயிதேமில்லத் பேரவை நிகழ்வு புகைப்படங்கள்