Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Wednesday, July 7, 2010

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

காலம் : 08-07-2010 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : பி.எம். தர்கா முதல்தெரு,
இலாயிட்ஸ் சாலை, சென்னை - 5
தலைமை : எஸ்.ஒய். முஹம்மது தமீம்
(தென் சென்னை மாவட்டப் பிரதிநிதி)
வரவேற்புரை: என். நிஸார் அலி (மாவட்டப் பிரதிநிதி)
முன்னிலை : கே.பி. இஸ்மத் பாட்சா
(தலைவர், தென்சென்னை மாவட்டம்) பூவை எம்.எஸ். முஸ்தபா
(செயலாளர், தென்சென்னை மாவட்டம்)
சிறப்புரை : கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர்
(மாநில பொதுச் செயலாளர், இ.யூ முஸ்லிம் லீக்)
காயல் மகபூப்,
(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்)
கே.டி கிஸர் முஹம்மது
(மாநில பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை : வி.ஏ. அமானுல்லா (மாவட்டப் பிரதிநிதி)
நிகழ்ச்சி ஏற்பாடு: 94-வது வட்ட இ.யூ. முஸ்லிம் லீக்
என். ஜாபர் உசேன் (தலைவர்), கே.யூ. இதாயத்துல்லா (செயலாளர்), ஜே. தமீமுன் அன்சாரி (பொருளாளர்),

துணைத் தலைவர்கள் ஏ. காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி. மொய்தீன் அப்துல் காதர்,
துணைச் செயலாளர்கள் எஸ்.கே. மொகிதீன், கே. நாகூர் கனி, முஹம்மது யூனூஸ் மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

Monday, February 1, 2010

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா


ஈரோடு, பிப். 1:

ஈரோடு சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் 61வது குடியரசு தின விழா நடைபெற்றது.

சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் மௌலவி ஏ.ஜாபர் அலி கிராஅத் ஓதினார், நகரத் தலைவர் எம். நூர் சேட் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி தேசிய கொடி ஏற்றிவைத் தார்.

சூரம்பட்டி நகர பொரு ளாளர் எஸ். ஏ. காதர், துணைத் தலைவர்கள் எம். முஹம்மது ய+சுப், ஏ. முஹம்மது ஜின்னா ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். விழாவில் நகர மாணவர் அணி அமைப் பாளர் என். மன்சூர் அலி, துணை அமைப்பாளர் எம். சபீர் ரஹ்மான், கே. முஹம்மது ஜியாவுதீன், பி. நிஜாம் மற்றும் ஏ. இர்ஷாத், என். முஹம்மது ஹாரிஸ், ஜி.காதர் ஷரீப், எஸ். அலாவுதீன், ஜெ. இலியாஸ், சாகுல், சாதிக், என். முஹம் மது யார் அரபாத், அஸ்ரப், சேட், இஷாக், ஜாகீர், ரிபாய் ஆசிக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய் திருந்தனர். பகுதி மக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சூரம் பட்டி நகர துணைச் செய லாளர் பி. முஸ்தபா நன்றி கூறினார்.

காய்கனி மார்க்கெட்

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நடை பெற்றது.

ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம். என்.நூர் சேட் கொடி ஏற்றினார்.

இவ்விழாவில் செயலா ளர் ஆர். ராஜா, பொருளா ளர் வி.எம். சேகர், துணைத் தலைவர் எஸ்.பி. பெரு மாள், துணைச் செயலாளர் எஸ். தனபால், இணைச் செயலாளர்கள் கே.செல் வராஜ், ஏ. மதேஸ்வரன், கே. முருகேசன், சங்க ஆலோச கர் பி. நடேசன், நாச்சி முத்து, கௌரவத் தலைவர் கே.எல். ரமணி உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், வியா பாரிகளும், பொது மக் களும் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்

இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் - தலைமை நிலையத்தில் பேராசிரியர் முன்னிலையில் எழுச்சிமிகு விழா


சென்னை, பிப். 1:

இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களி லிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் இதற்கான எழுச்சி மிக்க விழா நடைபெற்றது.

லால்பேட்டை தேசிய லீக் முன்னாள் செயலாளர் ஏ. முஹம்மது தையிப், காட்டுமன்னார் கோவில் தொகுதிச் செயலாளர் ஏ. அன்வர், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாரூக், முத்தவல்லி ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மது ஹபீப், ஜன்னத்துன் நயீம் பள்ளி முத்தவல்லி மௌலவி அபுல் பைசல், மௌலவி அப்துஸ் ஸமது, மௌலவி ஹாலித், எம் லுத்புல்லாஹ், ஏ. குத்ரத்துல் லாஹ். ஆயங்குடி மௌ லானா நூருஸ்ஸலாம் ஹஜ்ரத்.

லால்பேட்டை மௌ லானா அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்களின் புதல்வர்க ளான மௌலானா ஏ.பி.எப். அப்துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். ரஹ்மத் துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். நூருல்லா பைஜி.

சென்னையைச் சேர்ந்த மௌலவி உபைதுர் ரஹ் மான் ஆமிரி சிராஜி, மௌ லவி கே.கே. முஹ்யித்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி காஜா முயீனுத்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி ஷாஹ{ல் ஹமீது பைஜி, பையாஜி, மௌலவி கரீம் பைஜி, பையாஜி, மௌ லவி ய+சுப் பைஜி, பையாஜி, மௌலவி ஆஷிக் ஆமிரி பிலாலி, மௌலவி இஸ்ஹாக் பைஜி பிலாலி, உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, மாநில துணைத் தலைவர் கள் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார், சேலம் எம்.பி. காதர் ஹ{சைன், திருப்ப+ர் ஹம்சா, மாநிலச் செயலா ளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகப+ப், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுத்தீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ரஷீத்ஜான், பதிப்பக அறக் கட்டளை பொதுச் செய லாளர் மில்லத் இஸ்மா யில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, கவிஞர் ஹ{சைன் தாசன், விழுப்புரம் ஷேக் தாவ+த், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கவிஞர் ஷேக் மதார்,

மாவட்டங்களின் நிர்வா கிகளான திருநெல்வேலி எம்.எஸ். துராப்ஷா, கடலூர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ.சுக்கூர், வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.ஹெச். முஹம் மது இஸ்மாயீல், தென் சென்னை ப+வை. எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளூர் ஏ.கே. சையது இப்ராஹீம், எஸ். குலாம் மைதீன், காஞ்சிபுரம் கே.எஸ். தாவ+த், விழுப்புரம் அன்வர் பாட்சா, திருவண்ணா மலை டி.எம். பீர் முஹம் மது, திண்டுக்கல் அல்தாப் ஹ{சைன், தேனி ஏ.எம். சாஹிபு மற்றும் வாணியம் பாடி நரி நயீம் எம்.சி., கடலூர் மாவட்டதுணைச் செயலாளர் அமானுல்லா, பி.முட்லூர் அப்துல் கப்பார், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஏ.ஆர். ஷபீ யுல்லா, மசூத் அஹமது, பாரத் ரத்னா ஏ.ஆர். அப்துர் ரஷீத், பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயத் துல்லா, மக்சூத் அஹ்மது, மாநில பேச்சா ளர் சல்மான் பாரிஸ், ஏ.எஸ். அஹமது, காயல் அமானுல்லா, மௌலவி ரஹ்மத்துல்லா ஜமாலி உள்ளிட்ட ஏராள மா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Thursday, July 24, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!


எதிர்வரும் 26.07.2008 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி, பாலக்கரை - மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் அருகிலுள்ள சந்தன மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃபின் எழுத்துலக சேவைக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெறவுள்ளன.

விழாவுக்கு துபை காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி எம்.அப்துர் ரஹ்மான் தலைமையேற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.ஃபாரூக் வரவேற்புரையாற்றுகிறார்.

புறநகர் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஷாஜஹான், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் கப+ர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகட்டை, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார் வெளியிட, முதல் பிரதியை துபை காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.லியாகத் அலி, துபை காயிதெ மில்லத் பேரவை ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் பெறுகின்றனர்.

மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், நெல்லை மஜீத், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக், ஜி.எம். ஹாஸிம், முஃப்தி ஏ.உமர் பாரூக், எம். ஜெய்னுல் ஆபிதீன், காயல் மஹப+ப், கமுதி பஷீர், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், கோவை நாஸர் எம்.சி., வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது, மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ.எம். நிஜாமுத்தீன் (எம்.ஏ.எம். கல்லூரி), கே.பி.இஸ்மத் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃப் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழா ஏற்பாடுகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியன இணைந்து செய்துள்ளன.

இதனையே அழைப்பாக ஏற்று தாய்ச்சபையின் முன்னணியினர், சமுதாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தர அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

தகவல்:
எம்.கே.எஸ்.ஜமால்,
மாநகர் மாவட்ட செயலாளர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=113

Sunday, May 18, 2008

அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா

அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா 15.05.2008 (ஹிஜ்ரி 1429 ஜமாதுல் அவ்வல் பிறை 10) வியாழன் மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டல்
அல் ஷலீலா ஹால், 3வது மாடி,ஹம்தான் ரோடு, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத். பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன் M.P மற்றும் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி அய்மான் சங்கத்தின் முழக்கமாவது :

அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!



மேலதிக விபரம் பெற :

hameedsac@gmail.com
050 581 88 76

சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க விழாவில் பேராசிரியர் கேஎம்கே அறைகூவல்

சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க விழாவில் பேராசிரியர் கேஎம்கே அறைகூவல்

சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில துணைத்தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறைகூவல் விடுத்தார்.

அபுதாபி அய்மான் சங்கம் மீலாது விழா, வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டலில் வியாழன் மாலை ( 15.05.2008 ) நடைபெற்றது.

முப்பெரும் விழாவிற்கு அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கி தலைமை தாங்கினார். துவக்கமாக மௌலவி முஹம்மது அஸ்லம் இறைவசனங்களை ஓத, அய்மான் சங்க மார்க்க செயலாளர் பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் தமிழில் விரிவுரையாற்றினார். பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இறைகீதம் பாடினார். செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அய்மான் சங்க தலைவர் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் கடந்த 27 ஆண்டுகளாக அமீரகத் தலைநகர் அபுதாபியில் அய்மான் ஆற்றி வரும் சமூக மற்றும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சியில் அய்மான் மகளிர் கல்லூரி ஏற்படுத்தப்பட்டிருப்பது சங்கப்பணியில் ஒரு மைல்கல் என குறிப்பிட்டார். இத்தகைய பணிகளில் ஆரம்பம் தங்களை இணைத்துக் கொண்டவர்களை நினைவு கூர்ந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் 'தளபதி' மௌலவி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அய்மான் சங்கப் பணிகளைப் பாராட்டினார். 1982 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மதிநா நகரில் மீலாது விழாவை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை வைத்து நடத்திய நிகழ்வினை நினைவு கூர்ந்தார். மீலாது விழாக்களில் பேசிய பலர் தமிழக முதல்வராக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருவதைக் குறிப்பிட்டார்.

அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாஃபர் கடந்த எட்டு வருடங்களாக கல்லூரி செயல்பட்டு வருவதையும் இதுவரை 58 மாணவியர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளதை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு போட்டிகளிலும் கல்லூரி மாணவியர் சாதனை புரிந்து வருவதை விவரித்தார்.

அய்மான் சங்க வெள்ளி விழா மலரை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட தொழிலதிபர் நோபிஸ் மரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.

விழாப் பேருரை நிகழ்த்திய பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் சமூக நல்லிணக்கம் பேண வலியுறுத்தினார். அய்மான் சங்கம் பல்வேறு சமூக மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தூர நோக்குடன் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அய்மான் சங்கம் இன்னும் பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வாழ்த்தினார். எதிர்வரும் ஜும் மாதம் சென்னையில் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் அமீரக மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தார்.

பேராசிரியர் குளச்சல் ஷாகுல் ஹமீது அவர்கள் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், அய்மான் சங்க மலர் குறிஞ்சிப் பூ போல் அரிதாக அரிய பல தகவல்களைக் கொண்டு வெளி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அய்மான் சங்கம் திருக்குர்ஆனை தமிழ் மொழியில் ஒலி நாடாவாக ஆரம்ப காலத்திலேயே வெளியிட்டு சாதனை புரிந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மீலாது விழாக்களில் சகோதர சமுதாய அறிஞர்களும் அமீரக விழாவில் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொழிலதிபர் நோபிள் மரைன் சாகுல் ஹமீது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகள் படைக்க முடியும் என்றார்.

இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன், எஸ்.ஏ.சி. சாகுல் ஹமீது மற்றும் புரவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.