துபாயில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு
துபாய்க்கு 14.05.2008 புதன்கிழமை அதிகாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகைபுரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி அய்மான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா, அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒரு வாரப் பயணமாக பேராசிரியர் கே. எம்.காதர் மொகிதீன் எம்.பி., மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் அமீரகம் வருகை புரிந்துள்ளனர்.
விமான நிலையத்தில் அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் கீழக்கரை காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ மற்றும் நிர்வாகிகள் சம்சுதீன் சாஹிப், சிட்டிசன் அப்துல் மஜீது ,ஹமீதுர் ரஹ்மான், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, பொருளாளர் அப்துல் கத்தீம், தளபதி ஏ. முஹம்மது தாஹா, யஹ்யா முஹ்யித்தீன், காயல் நூஹு சாஹிப், ஏகத்துவ மெய்ஞான சபையின் எம்.ஜே. அப்துல் ரவூஃப், ஷாஜஹான், அஹமத் இம்தாதுல்லாஹ், முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.
அமீரகத்தில் பேராசிரியருடன் தொடர்பு கொள்ள காயிதே மில்லத் பேரவை நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளவும். 00971 50 644 04 15