அல்லாஹ்வை தவிர எந்த சக்திக்கும் அஞ்சாமல் அறவழியில் ஒப்பிலா ஒழுக்க அரசியல் நடத்திய ஆன்மீக அரசியல்ஞானி !
நாம் ஒன்றுபடாதவரை நமக்கு வாழ்வு இல்லை. நாம் ஒன்றுபட்டு விட்டால் நமக்கு இணை யாருமில்லை என்று ‘ஒற்றுமை கீதம்’ இசைத்த ஒப்பற்ற தலைவர் !
இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ மட்டுமல்ல, ஆளவும் உரிமையுண்டு என்று முழக்கமிட்ட தீன்குலத்தலைவர் !
வீழ்த்தப்பட்ட சமுதாயத்தை தட்டி எழுப்பிய உரிமைக்குரல் முழங்கி, வீறுநடை போட வழித்தடம் அமைத்த மனிதப் புனிதர் !
ஈட்டிகள் கூட்டணியாக வந்து தாக்கியபோது ஈமான் என்ற கேடயம் ஏந்தி போரிட்ட சமுதாய தளபதி !
கனிவு, துணிவு, தெளிவு கொண்டு தூய்மையான எளிய வாழ்வு வாழ்ந்த ஏந்தல் !
கண்ணியம் என்ற சொல்லுக்கு புண்ணியம் சேர்த்து கவ்மின் கண்ணியம் காத்த கவ்மின் காவலர் !
அசைக்க முடியாத இறை நம்பிக்கை கொண்டு அரசியல் களத்தில் வீறு நடை போட்ட ஆன்மீகத் தலைவர் !
அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் கண்ணியத்திற்குரிய தலைவர் என்று போற்றப்பட்ட ஒரே ஒரு தலைவர் !
வாழ்ந்த காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக எந்த தலைவர் வீட்டு கதவையும் தட்டாதவர். ஆனால் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தனது வீட்டு கதவை தட்ட வைத்தவர் பெருந்தலைவர் !
தன் நாவசைத்தால் இந்த நாடசையும் என்பதை செயலில் காட்டிய தவச்சீலர் !
ஒன்றுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் அனைவரும் பிறைக்கொடியின் கீழ் உலாவர, தன் வாழ்வை தியாகம் செய்த முஜாஹித் !
நம் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வழித்தடம் அமைத்து தம் விழித்தடம் மூடிவிட்ட சமுதாயத் தந்தை !
இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் இடையில் நல்லெண்ணமும், ஒற்றுமையும் ஓங்கச் செய்த சமூக நல்லிணக்க வரலாற்று நாயகர் !
மூச்சிருக்கும் வரை அந்த தலைவர் வழி நடப்போம் !
பேச்சிருக்கும் வரை அவர் புகழ்பாடுவோம் !
( குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லா )
நன்றி : மணிச்சுடர் 5/6 ஜுன் 2010
Abdul Katheem
dateTue, Jun 22, 2010 at 4:13 AM
subjectRe: காயிதே மில்லத் புகழ் ஜிந்தாபாத் !
என்ன ஒரு புகழ் மாலை, மாஷா அல்லாஹ். எந்த ஒரு சொல்லும் உயர்வுநவிற்சி இல்லை. கண்ணியமிக்க தலைவருக்கு ஒரு கனமான பா மாலை.
கவிஞர் வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லாவுக்கு மனமார்ந்த பாராட்டு!!
அன்புடன்
அப்துல் கதீம்