Tuesday, June 1, 2010

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் இரு உயர் கோபுர மின்விளக்குகள் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., தொடங்கி வைத்தார்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் இரு உயர் கோபுர மின்விளக்குகள் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., தொடங்கி வைத்தார்


வாணியம்பாடி, மே.25-

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் தனது தொகுதி பாராளுமன்ற நிதியிலி ருந்து வாணியம்பாடி நகரம் 23.வது வார்டுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப் பீட்டில் இரண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து கொடுத்தார்.

இதன் திறப்பு விழா காதர்பேட்டை மஸ்ஜித் அருகிலும், ஜின்னா சாலை யும், பி.ஜே.என். சாலையும் (ஜின்னாபாலம்) இணையும் இடத்திலும் நடைபெற் றது.

இந்த விழாவில் வாணி யம்பாடி நகராட்சி தலைவர் சிவாஜி, வாணி யம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், நகராட்சி துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. பாருக், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி. நிசார் அஹமது மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா வில் கலந்து கொண்டவர் களை 23-வது வார்டு கவுன் சிலர் என். முஹம்மது நயீம் வரவேற்றார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் விழாவில் பங் கேற்று இரண்டு உயர் கோபுர மின்விளக்குகளை யும் இயக்கி வைத்தார்.