தமிழ்ச் சமுதாயத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்
அது 1971-ம் ஆண்டு கால கட்டம். பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்த சமயம். ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சி பிழம்பாக இருந்தது. இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடை காட்டி மதவெறி உணர்வுகளை தூண்டி வன்முறைக்கு வித்திட கயவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில இஸ்லாமிய தலைவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்கி கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும், தாய்நாட்டுக்கு ஆதரவாகவும் ஓங்கி குரல் கொடுத்தவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கண்ணியமிகு காயிதெமில்லத்.
ஹஇந்தியாதான் எங்கள் தாய்நாடு. பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய எனது ஒரே மகனை போர்க்களத்துக்கு அனுப்பத் தயார்| என்று உணர்ச்சி பிழம்பாக முழங்கினார். அவரது இந்த ஒரு அறிக்கை நாட்டின் அனைத்து இஸ்லாமியத் தலைவர்களையும் ஓர் அணியில் திரளச் செய்தது. இஸ்லாமியர்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கிய நாடறிந்த பெருந்தகை கண்ணியமிகு காயிதெ மில்லத்துக்கு இன்று 115-வது பிறந்த நாள். அவர் பிறந்த நாளில் அவரை நாம் நினைவுகூறுவோம். ஹகாயிதெ மில்லத்| என்ற அரபி சொல்லுக்கு ஹமக்களின் வரிகாட்டி| என்பதே பொருள் ஆகும்.
இளமைப் பருவம்
காயிதெ மில்லத்திற்கு பெற்றோர் சூட்டிய பெயர் முஹம்மது இஸ்மாயில், தந்தை கே.டி. மியாகான் ராவுத்தர். திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் 1896-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பிறந்தார்.
காயிதெ மில்லத்தின் தந்தை மதத் தலைவராகவும் (மவ்லவி) விளங்கினார். பெரும் வணிகராக இருந்த இவர் திருவாங்கூர் அரச குடும்பத்திற்கு துணிகள் விற்கும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கினார்.
காயிதெ மில்லத் சிறுவனாக இருந்தபோதே தந்தை மறைந்து விட்டார். பின்னர் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். தாயார் அரபு மொழியையும், மத நூல்களையும் கற்றுத் தந்தார்.
ஹவிளையும் பயிர் முளையிலேயே தெரியும்| என்பது போல் தனது 9-வது வயதிலேயே அதாவது 1909-ம் ஆண்டு தான் வசித்த பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர் அமைப்பை தொடங்கி சமுதாய பணியில்
1920 கால கட்டத்தில் மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பள்ளிப்படிப்பை நெல்லை எம்.டி.டி. இந்துப் பள்ளியில் முடித்த காயிதெ மில்லத், திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கல்லூரி படிப்பை பயின்றார்.
அப்போது 1920-ம் ஆண்டு காலக்கட்டம். மகாத்மாகாந்தி தலைமையில், வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருந்தது. பட்டம் பெற 2 மாதங்களே இருந்த நிலையில் தாய்மண் மீது பாசம் கொண்டு காயிதெ மில்லத்தும் சுதந்திர போராட்டத்தில் குதித்தார். திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஹஒத்துழையாமை இயக்கத் தீர்மானம்| பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற உறுதுணையாக நின்றார்.
அரசியல் பணி
ஒன்றுபட்ட இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்காக 1906-ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்| என்ற கட்சி தொடங்கப்பட்டது. பின்னர் இன்றைய பாகிஸ்தானின் தந்தையாக போற்றப்படும் முஹம்மது அலி ஜின்னா இதன் தலைவர் ஆனார்.
1947 இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை தொடங்கி இதன் தலைவராக காயிதெ மில்லத் பொறுப்பேற்றார். அவருடன் போக்கர் சாஹிப், மகப+ப் அலி பெய்க் சாகிப், கே.டி.எம். அஹமது இப்ராஹீம் சாஹிப் உள்ளிட்ட தலைவர்கள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.
இக் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணம்
1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் காயிதெ மில்லத்தின் திருமணம் நடந்தது. மனைவி ஜமால் ஹமீதா பீவி. பின்னர் அரசியல் பணியுடன் தந்தை வழியில் தொழில் துறையிலும் காயிதெ மில்லத் கவனம் செலுத்தினார். சிறந்த தொழில் அதிபராகவும் உயர்ந்தார். 1946-ம் ஆண்டு பழைய சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அவரது முஸ்லிம் லீக் கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காயிதெ மில்லத்தும் வெற்றி பெற்று 52-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். அவர் கட்சி 28 இடங்களில் வென்றதால் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக விளங்கியது.
பின்னர் 52-ம் ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மேல்சபை உறுப்பினராக பணி யாற்றினார். சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையிலும் உறுப்பினராக இடம் பெற்றார்.
மாநிலங்களுக்கு அதிக ஆட்சி உரிமை வழங்கப்படுவது அவசியம் என்று அப்போதே ஓங்கி குரல் கொடுத்தார். மத்திய அரசில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால் மக்களுக்கு நன்மை குறைவு என்று வாதிட்டார். ஹஅதிகாரம் வழங்கப்படாத மாநிலங்கள் நகராட்சிகளுக்கு சமமானவை| என்று காட்டமாக எடுத்துரைத்தார். இதனால் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டன.
இதேபோல நாட்டின் ஹதேசிய மொழி| ஆகும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்றும், அதற்குரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அரசியில் நிர்ணய சபையில் வலியுறுத்தினார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரிய பங்கை பெ ற்றுத் தந்தார்.
1956-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கேரள அரசியலில் அதிக கவனம் செலுத்தினார். அம் மாநில இஸ்லாமிய மக்களின் அன்புக்கு பாத்திரமானார். 1962-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளாவில் உள்ள மஞ்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொகுதிக்கு பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறும் அளவுக்கு தொகுதி மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். பின்னர் 1967, 71 ஆகிய மக்களவை தேர்தலிகளிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இடையில் 1962-ம் ஆண்டு காயிதெ மில்லத்தின் மனைவி ஹமீதா பீவி காலமானார். இத் தம்பதியரின் ஒரே மகன் ஜமால் மியாகான். பின்னர் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியை கைப்பற்ற காயிதெ மில்லத் முக்கிய பங்காற்றினார். மத்தியிலும், மாநிலத்திலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நட்பாக விளங்கினார்.
ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, லால்பகதூர் கட்சி சாஸ்திரி, ஜாகிர் உசேன், பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, இன்றைய முதல்வர் கலைஞர், நிதியமைச்சர் அன்பழகன், ராசாராம், மறைந்த எம்.ஜி.ஆர்., நெடுஞ் செழியன், சி.பா. ஆதித்தனார், என்.வி. நடராசன், அப்போதைய மேல் சபை தலைவர் சி.பி. சிற்றரசு. மபொ.சி. பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு என அனைவருடனும் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.
அன்பு, அடக்கம், ஆற்றல் மற்றும் நற்பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக காயிதெ மில்லத் விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
தொழில்துறை
அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.
சென்னை மாநில மட்டன் விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் கமிட்டித் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இஸ்லாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.
அரசு அங்கீகாரம்
காயிதெ மில்லத்தை கவுரப்படுத்தும் வகையில் 1972-ம் அண்டு அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹநாகை காயிதெ மில்லத்| மாவட்டம் என பெயரிட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு சாதி, மதத்தின் பெயரால் வன்முறை தலையெடுத்ததையடுதது மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டன. அப்போது காயிதெ மில்லத் பெயரும் நீக்கப்பட்டது.
அவரது பணிகளை கவுரவப்படுத்தும் வகையில் தி.மு.க. அரசு காயிதெ மில்லத்திற்கு மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கி உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளுக்கு காயிதெ மில்லத் பெயர் சூட்டப்பட்டது.
மறைவு
1972-ம் ஆண்டு மார்ச் மாதம் காயிதெ மில்லத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவரைதிராவிடக் கழகத் தலைவர் பெரியார், அப்போதைய முதல்வர் கலைஞர், அமைச்சர் சாதிக் பாட்சா, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் ஆகியோர் அவரை பார்த்தனர். 5-ம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மறைந்தபோது காயிதெ மில்லத்துக்கு 76 வயது ஆகும். பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள கல்லூரி கலையரங்கில் வைக்கப்பட்டது.
முதல்வர் கலைஞர், அமைச்சர் நெடுஞ்செழியின், என்.வி. நடராசன், சாதிக் பாட்சா, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், மாதவன், சத்தியவாணிமுத்து, ராசாராம், மன்னை நாராயண சாமி, ராமச்சந்திரன், ஓ.பி. ராமன் மற்றும் ஏராளமான தலைவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் காமராஜர், மேல்சபை தலைவர் சிற்றரசு, மா.பொ. சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், ராஜாராம் நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் பெசன்ட் ரோடு வழியாக திருவல்லிக்கேணி சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜிதை அடைந்தது. அங்கு இஸ்லாமிய முறைப்பட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கும், மறக்க முடியாத தலைவராக விளங்கியவர் காயிதெ மில்லத் ஆவார்.
(நன்றி : மாலைமுரசு, சென்னை 05-06-2010)