Monday, June 21, 2010

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு

சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.