மத்திய - மாநில அரசுகளின் சிறுபான்மை நலத்திட்டங்களை வலியுறுத்தி
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில்
விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்
பள்ளப்பட்டியில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேட்டி
அரவக்குறிச்சி, மே 20-
காயிதே மில்லத் 115-வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்டம், பள்ள பட்டியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில், கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகிற ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்.
இந்த மாநாடு தொடர் பான ஆலோசனைக் கூட் டம் பள்ளபட்டியில் கட்சியின் மாவட்டத் தலைவர் டி.ஏ.எம்.முபாக் பாட்சா தலைமையில் புதன்கிழமை நடைபெற் றது.
ஆலோசனைக் கூட்டத் திற்குப் பிறகு முஹம்மது அப+பக்கர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி யுடனும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. வுடனும் தோழமையுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல் பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டிருந்தது. நிக ழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், சிறுபான் மையினர் நலன் கருதி ரூ. 2600 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
மேலும்,இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சிறுபான் மையினர் நல அமைச்சகம் ஏற்படுத்திக் கொடுத்துள் ளது பாராட்டக்குரியது.
இந்த அமைச்சகம் மூலம் சிறுபான்மையின ரின் நல்வாழ்வுக்காக கல்வி, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் இஸ்லாமியர்கள் உயர் வான நிலை அடைய பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இஸ்லா மியர்களின் உணர்வு களுக்கு மதிப்பு அளித்து, சிறுபான்மையினர் நல ஆணையத்திற்கு அரசு சட்டப்ப+ர்வமான அங்கீ காரம் அளித்துள்ளது. சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, தமிழ்நாட் டில் பொருளாதார மேம் பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின மக் களின் மேம்பாட்டுக்காக கல்விக்கான உதவிகள், சிறுதொழில், மகளிர் சுய உதவிக் குழு என பல்வேறு நிலைகளில் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத் திற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து வருகின்றன.
இதுபோன்ற திட்டங் கள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக,இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், விழிப் புணர்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன.
வருகிற ஜூன் 9-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர் தலைவர் காயிதே மில்லத் தின் 115-வது பிறந்த நாளை, கல்வி விழிப்புணர்வு மாநாடாக பள்ளபட்டி யில் நடத்த உள்ளோம். இதில், கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே இணை அமைச் சருமான இ. அஹமது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டில் சமச்சீர் கல்வி முறையால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். உருது, தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்கும் சமு தாயத்தினரையும் பாதிக் காத வகையில் அரசை வலியுறுத்தினோம். கட்சி யின் கரூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடை பெறும். ஜூலை மாதம் மாநிலப் பொறுப்பாளர் கள் தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, வருகிற அக்டோபர் மாதம் சென் னையில் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் கலைஞர் கலந்து கொள்கிறார். அவருக்கு இந்த மாநாட்டில் நல்லி ணக்க நாயகர் விருது வழங்கப்பட உள்ளது.
மேலும், வருகிற சட்டப் பேரவை தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் என்றார் அவர்.
பேட்டியின் போது, அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ் மான், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாட்சா, மாவட்டச் செயலாளர் மஹப+ப் அலி, தேனி மாவட்ட துணைச் செயலாளர் நசீர் அகமது, பள்ளபட்டி நகரத் தலை வர் கே.ஏ கமால் பாட்சா, செயலாளர் வி.ஏ. அபுதா ஹீர், மாவட்டப் பிரதிநிதி எஸ்.டி.எம். புர்கானுல் லாஹ், நகரத் துணைச் செயலாளர் வி.எம். முகம்மது இப்ராஹீம், என்.எஸ். லியாகத் அலி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு வரவேற்பு குழு கூட்டம்
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பிறைக்கொடி ஏற்றி மாநாட்டு பணிகளை துவக்கி வைத்தார்
பள்ளப்பட்டி, மே.21-
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு வரவேற்புக் குழு கூட்டத் தில் கலந்து கொண்டு பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு பணிகளை துவக்கி வைத் தார் மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர்.
காயிதெ மில்லத் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வரும் ஜூன் 9ம் தேதி பள்ளப்பட்டி மக்கள் மன்ற திருமண கூடத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுப் பணிகளின் துவக்க நிகழ்வாக கடந்த 19.5.2010 புதன் கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும் அரவை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் மாவட்டத் தலைமையகத் தில் பச்சிளம் பிறைக் கொடி ஏற்றி மாநாட்டுப் பணிகளை துவக்கி வைத் தார்.
பள்ளப்பட்டி ஹாஜி எஸ்.எம். அப்துல் ஜப்பார் இல்லத்தில் மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் நடைபெற்றது. வாங்கல் நக்காதி ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். கரூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி டி.எம்.ஏ. முபாரக் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஏ. மஹப+ப் அலி வர வேற்புரையாற்றினார். மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., கூட் டத்தின் நோக்கத்தை விரி வாகப் பேசி மாநாட்டின் நடைமுறைகளையும் விளக்கிப் பேசினார்.
மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்ற விபரங் களையும் ஆலோசனை களையும் வழங்கி விரிவாக பேசினார். நிறைவாக மாநாட்டின் வேலைகளை பல குழுக்கள் அமைத்து வேலைகளை பகிர்ந்து கொள்வது என்று தீர்மா னிக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட
குழுக்களின் விபரம்
வரவேற்புகுழு, மாநாட்டு அரங்க அமைப்பு குழு, உணவு தயாரிப்பு மற்றும் பரிமா றும் குழு, காவல்துறை-அரசு துறை- மீடியா ஒருங் கிணைப்பு குழு, தகவல் தொடர்பு குழு, அண்டை மாவட்ட அழைப்பு குழு, நிதிக்குழு, தொண்டர் அணி ஒருங்கிணைப்புக் குழு, தலைவர்கள் உப சரிப்பு குழு, மகளிர் அணி ஒருங்கிணைப்புக் குழு ஆகிய குழுக்கள் அமைத்து தலைவர்கள், பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்ட னர்.
புதிதாக தேர்வு செய்யப் பட்ட பள்ளப்பட்டி, கேர்நகர், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், கரூர், பெரியகுளத்துப் பாளை யம், வாங்கல், வெங்கமேடு, குருணிகுளத்துப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மயி லம்பட்டி, தோகைமலை, நெய்தலூர், ஈசந்தம், ஜமீன் ஆத்தூர், குளித்தலை ஆகிய முஸ்லிம் லீக் பிரைமரி தலைவர்களும் செயலாளர் களும் மற்றும் மாநாட்டு வரவேற்பு குழு உறுப் பினர்களும் கலந்து கொண் டனர்.
சிறப்பு விருந்தினர் களாக திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் அல்தாப் உசேன், தேனி மாவட்ட துணைச் செய லாளர் அப்துல் நசீர் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர். திருச்சி மண்டல அமைப்பாளர் காஜா மைதீன் கூறினார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாபெரும் எழுச்சி
தேனி மாவட்ட சுற்றுப்பயணத்தில் பேராசிரியருக்கு உற்சாக வரவேற்பு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. அம் மாவட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஊர்கள்தோறும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி
6-ம் தேதி காலை தேவதானப்பட்டியில் நகர முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் வரவேற்றனர். பேராசிரியருடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, தேனி மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, செயலாளர் ஏ.எம். சாயபு, துணைத் தலைவர் எம். எஸ். மீரா மைதீன், பொருளாளர் எஸ். இமாம், துணைச்செயலாளர் ஆர்.எம். அப்துல் நஸீர், துணைச் செயலாளர் அப்துல் சமது, நகரத் துணைத் தலைவர் முஹம்மது அனீபா, பொருளாளர் அப்துல் காதர், மாணவர் அணி அமைப்பாளர் அப்துல் பாசித், இளைஞர் அணி அப்துல் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் லீகர்களும் உடன் சென்று பொம்மிநாயக்கன்பட்டி நகரத் தலைவர் சையது அபுதாஹிர், செயலாளர் பிச்சைக்கனி, பொருளாளர் மீரான் மைதீன், முன்னாள் தலைவர்கள் மைதீன் பிச்சை, முஹம்மது அனிபா, மூத்த முஸ்லிம் லீகர் அப்துல் லத்தீப் மற்றும் கூடிய ஜமாஅத்தார்களின் வரவேற்புடன் பிறைக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
உடன் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் பேசும்போது முஸ்லிம் லீக் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. மத்திய ஆட்சியில் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் அமைச்சராக பொறுப்பு வகிப்பதுடன் கூட்டணியில் நாம் இருப்பதால் சமுதாயத்தின் மேம் பாட்டுக்கு நீதியரசர் ராஜேந்திர சச்சார், நீதியரசர், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இடஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும், சிறுபான்மை யினர்களுக்காக வழங்கப்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. ரோட்டுக்கும், கோர்ட்டுக்கும் போகாது முஸ்லிம் லீக் தமிழக கோட்டைக்கும, டெல்லி பாராளுமன்றத்திலும் கலந்து சமுதாய தேவைகளை பெற்றுத் தருவதில் ஒருபோதும் தயங்கியதும் இல்லை. சுணங்கியதும் இல்லை. சமுதாயத்தினர் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுவதால் மேலும் சமுதாயம் பெரும் பயன்பெறும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம் லீகை பலப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆண்டிப்பட்டி
அடுத்ததாக ஆண்டிப்பட்டி ஜமாஅத் சார்பாக வரவேற்பும், பிறைக்கொடி ஏற்றமும் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றது. ஜமாஅத் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவருமான மக்தூம், செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் முஹம்மது அலி ஜின்னா, மாவட்டப் பிரதிநிதி ஹ{மாய+ன் கபீர், இளைஞர் அணி ஆகியோர்களுடன் பள்ளியில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நகரத் தலைவர் மக்தூம் பேசும்போது, எங்கள் ஜமாஅத்துக்கான கபரஸ்தான் இடம் மாவட்ட முஸ்லிம் லீகின் தொடர்முயற்சியால் அரசாங்கத்திடம் பெறப்பட்டு அதற்கு சுற்றுச்சுவர் கட்டிட ஜே.எம். ஹாரூண் எம்.பி.யிடமும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. மூன்று லட்சம் பெற்று ஜமாஅத்தும் ரூ. இரண்டு லட்சம் போட்டும், கட்டிட பணி நிறைவுபெற சுமார் ரூ. இரண்டு லட்சம் அளவிற்கு குறையுள்ளது. ஆகவே, தாங்கள் அதனை பார்வையிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதை ஏற்று அனைவரும் பார்வையிடச் சென்றோம்.
கட்டிடத்தை பார்வையிட்ட தலைவர் காண்டிராக்டர் சாகுல் ஹமீதுவை பாராட்டினார். மேலும் குறையுள்ள கட்டிடப் பணி தொடர்பான திட்ட மதிப்பை மாநிலத் தலைமைக்கு அனுப்பும்படி கூறினார். பின்னர் தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் பொன்ராஜ் கொந்தாளம் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று ஜும் ஆ பேரூரை நிகழ்த்தி னார்.
தனது உரையில் முஸ்லிம் லீக் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் அவர்களின் காலம் தொட்டு வந்த தலைவர்களைப் பின்பற்றி, அவர்கள் காட்டி வந்த வழியில் அமைதியாக சக சமுதாயங்களுடன் சௌஜன்யமாக நமக்கென உள்ள ஷரீஅத் சட்டங்களுக்கு ஊறு ஏற்படாமல், ஜனநாயக நடை முறைகளை பின்பற்றி அறவழியில் அறப்பணி ஆற்றி வரும் பேரியக்கம் தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், அரசியலும் சமுதாயத்திற்கு மிகத் தேவையென்று ஜமாஅத் தலைவர் குறிப்பிட்டாலும் கூட அதுபற்றி திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளபடி யார் நற்செயல்கள் புரிந்து இறைப்பொருத்தத்தை பெற்றோர்களோ அவர்களே அழகிய முஸ்லிம் என்று கூறி, ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்றோ, எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமென்றோ செயல்பட்டு வரவில்லை. வாழ்க்கை முறையில் பேணப்பட்டு வரும் ஷரீஅத் சட்டங்களை தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு இடைய+று ஏற்படாவண்ணம் பாதுகாப்பது, சகோதர சமுதாயங்களுடன் இணக்கமாக இருப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் நமது பிரதிநிதிகள்தான் ஷரீஅத் பற்றியும், சமுதாயம் பற்றியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
தாய்ச்சபையை மேலும் பலப்படுத்துவதால் கூடுதல் நன்மைகளை பெற முடியும். மேலும் 1150 மார்க்குகளுக்கு மேல் பெற்று கல்லூரிகளில் இடம் கிடைத்தும், படிக்க வசதி குறைந்தவர்கள் மாவட்ட முஸ்லிம் லீகை அணுகினால் அவர்களின் கல்விக்கு தாய்ச்சபை உதவி செய்யும் என்றார். தொழுகைக்குப் பின் தேனி நகர நிர்வாகிகள் தலைவர் திவான் மைதீன், செயலாளர் டாக்டர் பி.கே. ஜவஹர்தீன், பொருளாளர் கே.டி.சி. அப்துல் ரஹீம், முன்னாள் தலைவர் கே.எம். சம்சுதீன், செயலாளர் ஜம்கி பாட்சா, பொருளாளர் ஷர்புதீன், பி.சி. பட்டி நிர்வாகிகள் காஜா கமாலுதீன், முஹம்மது அப்துல் காதர், அப்பாஸ், சாகுல் ஹமீது, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளை பாராட்டி பேசி உங்களின் சேவைகளை சமுதாயம் பெரிதும் எதிர் பார்க்கிறது. மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை கல்வி உதவித் தொகை விபரங்களை தெரிவிப்பதுடன் அனைத்து உதவிகளையும் சமுதாயம் பெற்றிட பாடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
சீலையம்பட்டி
இதன்பின் சீலையம்பட்டியில் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து நகரத் தலைவர் நயினார் தலைமையில் ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்று பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று காண்பித்து 4 வழிச் சாலையால் இருபுறமும் ஏராளமான வீடுகளும், பள்ளிவாசலின் முன்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று வழிப்பாதை வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். தலைவரும் ஆவன செய்வதாக கூறினார். பின்னர் சின்னமனூரில் சாமிகுளம் பகுதி பள்ளிவாசலுக்கும் அன்னை கதீஜா (ரலி) அரபிப் பாடசாலையில் நடைபெற்ற சுன்னத் வைபவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அரசு மருத்துவர் டாக்டர் சையது சுல்தான் இப்ராஹீம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சாகுல் ஹமீது, மௌலவி முஹம்மது ஆதம், அன்வர்தீன், ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகள் சுல்தான் மைதீன், ஜாஹீர் உசைன், முஹம்மது பாருக், மஹப+ப் அலி, முஹம்மது ருக்மான் மற்றும் ஸ்கீம் கமிட்டி நிர்வாகிகளும் தலைவரை வரவேற்று உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
தலைவர் பேசும்போது, இஸ்லாம் சுன்னத் ஆக்கிவைத்த இந்த சுன்னத் கல்யாணம் என்பது முஸ்லிம்கள் மட்டுமில்லாது, நமது நாட்டிலே தேவர் சமுதாயத்தினர்களும் செய்து வருகின்றனர். பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்சிங் கூட விஞ்ஞானரீதியாக இச் செயல் பால்வினை நோய்கள், புதுப்புது நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இதை அனைவரும் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். சென்னையில் கூட முஸ்லிம் லீக் சார்பாக 200 குழந்தை களுக்கு செய்து வைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் லீகினரும் சுன்னத் வைபவங்களையும், கல்விப் பணிகளையும் செய்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் முன்பாக தலைவர் கொடியேற்றி வைத்து பின்னர் க. புதுப்பட்டி ஜமாஅத் சார்பாக பள்ளிவாசல் தலைவர் எஸ். முஹம்மது நயினார் வரவேற்று உபசரித்தார்.
பாளையம் டி.ஆர். காலனியில் இயங்கி வரும் அல்ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரியும், ஆண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியும் நடத்தி வரும் நாடறிந்த பேச்சாளர் கம்பம் பி.ஏ. பீர் முஹம்மது பாக்கவி அவர்களின் கல்லூரிக்கு தலைவரையும், உடன் சென்றவர்களையும் வருகை தரக் கேட்டுக் கொண்டதன்படி கலந்து கொண்டோம். வரவேற்று பேசிய பாக்கவி, நானும் பேராசிரியரும் ஏராளமான ஊர்களில் மீலாது விழாக்களில் கலந்துகொண்டதையும், பால்ய நினைவு களையும் விளக்கிப் பேசினார். தலைவர் பேசும் போhது பாக்கவி அவர்கள் இங்கு இருப்பார் என்றும் சந்திப்போம் என்றும் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இங்கே தான் இருக்கிறார் என்று மாவட்டத் தலைவர் சொன்னபோது கூட கல்லூரிக்கு வருவதற்காக சொல்கிறார் கள் என்று தான் நினைத்தேன். வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலை மாறி இன்று வெளிநாட்டிலுள்ளவர்களையும் அழைக்கக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டோம். பாக்கவி அவர்களின் சிறப்பான கல்விச் சேவையை முழு மனதார பாராட்டுகிறேன் என்று பேசிய பின் நினைவுப் பரிசாக புத்தகங்களும், நறுமணமும் கொடுத்து, தேநீர் விருந்தும் கொடுத்தும் அனைவiயும் உபசரித்தார்.
கோம்பை
பின்னர் கோம்பை பள்ளிவாசலில் ஜமாஅத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர், செயலாளர் ஏ. அப்துல் ரஜாக் மற்றும் ஜமாஅத்தார்களின் வரவேற்பை ஏற்று மக்ரிப் தொழுது விட்டு தலைவர் பேசும் போது, ஆட்சியை பிடிப்பதற்காக முஸ்லிம் லீக் செயல்படவில்i. நமது ஷரீஅத்தை, தனித் தன்மையை பாதுகாக்கவே காயிதெ மில்லத் காலந்தொட்டு இணக்கமானவர்களுடன் கூட்டணி வைத்து நாமும், நமது உரிமைகளை பெற்று வருகிறோம். திருமணப் பதிவுச் சட்டம் வந்தபோது கூட ரோட்டிலே நின்று நாம் பேசவில்லை. உரியவர்களை உரிய முறையில் சந்தித்து எடுத்துக் கூறினோம். தமிழக முதல்வரும் ஏற்று உரிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். அது போன்று சிறுபான்மை கமிஷனுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். உடனடி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட் டுள்ளது. இது போன்று அகில இந்திய அளவிலும், தமிழகத் திலும் முஸ்லிம் லீக் அறப்பணி சிறப்பாக ஆற்றி வருகிறது. கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து உண்மையிலேயே வசதி குறைந்தவர்கள் என ஜமாஅத் சான்றளிக்கும் பட்சத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் மூலமாக தெரிவித்தால் மாநில முஸ்லிம் லீக் தேவையான உதவிகளைச் செய்யும் என்றார்.
சுற்றுப்புற ஊர்களான தேவாரம் முஸ்லிம் லீக் தலைவர் அபுபக்கர், கரையான்பட்டி (எ) மல்லிங்காபுரம் அப்துல் ரஜாக், போடி காதர் ஒலி, கோம்பை பிரைமரி தலைவர் ஜெய்னுலாப் தீன் மற்றும் முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டார்கள்.
கம்பம்
பின்னர் கம்பம் கல்வத்து நாயகம் தைக்கா அருகில் திரண்டிருந்த முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் வரவேற்று ஊர்வலமாக சென்று புதுப்பள்ளிவாசல் அருகில் பிறைக்கொடியை ஏற்றி வைத்து உடனிருந்த நகரத் தலைவர் ஐ. முஹம்மது ஷரீப், செயலாளர் ஹனபி, இளைஞர் அணி ஜுனைது, அமானுல்லா, கமாலுதீன், மிர்ஜா இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஷம்ஷ{ல் ஹ{தா, அப்துல் ரஜாக், அஜ்மல், ராஜிக் சேட், ஷாஜஹான், வர்த்தகர் அணி ஷேக் ஒலி, ஜமாஅத் தலைவர் கே.எம். அப்பாஸ், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, சாகுல் ஹமீது, சுரபி ஷெரீப், தரகு சாகுல் ஹமீது ஆகியோர்களுடன் உரையாடியபின் மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் அப்துல் ரவ+ப் சாலிஹ் அவர்களின் அறக்கட்டளைக்கு சென்று உரையாடி விட்டு இறுதி நிகழ்ச்சியாக கூடலூர் சென்றார். கூடலூர் ஜமாஅத் தலைவர் ஷேக் அப்துல் காதர், முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹபீப், பொருளாளர் அமீர் அமானுல்லாஹ், செயலாளர் கே.எச். அமீர் சுல்தான் மற்றும் ஜமாஅத்தார்களும் வரவேற்று பள்ளிவாசல் அருகில் பிறைக்கொடி ஏற்றி வைத்து உடனிருந்தோரிடம் உரையாடி விடைபெற்ற முதல் நாளின் சூறாவளி சுற்றுப் பயண நிகழ்ச்சி முடிந்தது.
வைகை அணையில்...
மறுநாள் 8-ம் தேதி காலை 11.00 மணியளவில் வைகை அணையில் செயல்பட்டு வரும் ஜாமிஆவுல் அஷ்ரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு ஆலிம் பட்டமளிக்கும் விழாவும், பெரியகுளம் - மதுரை நெடுஞ்சாலை இ.புதுப்பட்டி அருகில் கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அரபிக் கல்லூரி பேராசிரியர் பி.எஸ்.பி. ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மதுகான் பாகவி, முன்னாள் அமைச்சர் ராஜா முஹம்மது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹாரூண் ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பேராசிரியர் வாழ்த்துரை வழங்கினார். பெரியகுளம் பெண்கள் அரபிக் கல்லூரியின் தாளாளரும், தேனி மாவட்ட முஸ்லிம் லீக் ஆலிம்களின் அணி அமைப்பாளருமான சையது முஹம்மது சாதிக் கல்லூரிக்கு வருகை தந்தார். அங்கு கல்வி பயிலும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பெண்களின் கல்வி மிக அவசியம். தலைமுறை தலைமுறையாக உயர் கல்வி பெற பேருதவியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பின ராக பெண்களை முஸ்லிம் லீக் போட்டியிட வைக்குமா? என்ற கேள்விக்கு நிச்சயமாக கூடுதல் இடம் பெற திட்டமிட்டுள் ளோம். இன்ஷா அல்லாஹ் அதில் அவசியம் முஸ்லிம் பெண் இடம் பெறுவார் என உறுதியளித்தார்.
மாலை பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் அருகிலும், தென்கரை பள்ளிவாசல் அருகிலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு நகரத் தலைவர் எம். ஜான்பா தலைமை தாங்கினார். தலைவர் பேராசிரியரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கெங்குவார்பட்டி
பின்னர் கெங்குவார்பட்டியில் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து மக்ரிப் தொழுகைக்குப் பின் உரையாற்றும் போது முஸ்லிம் லீக் தாய்ச்சபை என்பதை விளக்கும் போது போர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் செய்து ரோட்டுக்கும், கோர்ட்டுக்கும் சென்றவர்கள் பின் கைதிகளானவுடன் அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. சிறைவாசி களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியது டன் அவர்களை வெளிக் கொணர்வதில் தாய்ச்சபை தான் தொடர்ந்து முயற்சித்து ஏராளமானவர்களின் விடுதலைக்கு பாடுபட்டது முஸ்லிம் லீக் தான். மீதமுள்ள சிறைவாசிகளின் விடுதலைக்கும் தொடர்ந்து பாடுபடும். சமூக நல்லிணக்க விருதுகளை சகோதர சமுதாயத்திற்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆகவே, சமுதாய வளர்ச்சிக்கும், மேம் பாட்டுக்கும் தாய்ச்சபையின் வளர்ச்சியுடன் வலுவும் உறு துணையாக அமையும்.
ஆகவே, அனைவரும் முஸ்லிம் லீகை பலப்படுத்த கேட்டுக் கொண்டார். நகரத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் ரஹ்மான் சேட், பொருளாளர் நாசர், ஜி. கல்லுப் பட்டி, தலைவர் இஸ்மாயில், இமாம் ஜாபர் சாதிக் ஆலிம் மற்றும் ஜமாஅத்தார்களிடம் விடைபெற்று 2-ம் நாள் சூறாவளி சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இயக்கத்தின் வளர்ச்சியும், செயல்பாடும் திருப்தியாக இருக்கிறது என பேராசிரியர் பெருமிதம் அடைய, பிரியா விடையாக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நாரே தக்பீர், முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் முழக்கத்துடன் வழியனுப்பி வைத்தார்கள்.