Showing posts with label தொகுதி. Show all posts
Showing posts with label தொகுதி. Show all posts

Sunday, October 24, 2010

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.

1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.

நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.

பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.

இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

Saturday, December 26, 2009

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. கலந்து கொள்கிறார்

சென்னை, டிச.26-

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.இன்பசேகரன் போட்டி யிடுவார் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள் ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பென்னாகரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறி முக செயல்வீரர்கள் கூட்டம், பென்னாகரத்தில் உள்ள அண்ணா திடலில் காலை 9 மணிக்கு நடை பெறுகிறது.

இந்த கூட்டத்துக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தன கோடி தலைமை தாங்கு கிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றுகிறார். மற்றும் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம். எல்.ஏ., விவசாய தொழி லாளர் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார், அருந்ததியர் மக்கள் கட் சித்தலைவர் வலசை ரவிச் சந்திரன், தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல். ஏ., எம்.பி.க்கள் இ.ஜி. சுகவனம், ஆர்.தாமரைச் செல்வன் ஆகியோர் பேசு கிறார்கள்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Saturday, May 16, 2009

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி


வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் சுமார் 1,05,393 வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் த‌ன்னை எதிர்த்துப் போட்டியிட்ட‌ அதிமுக‌ வேட்பாள‌ரை விட‌ அதிக‌ வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹ‌ம்துலில்லாஹ் )

மொத்த‌ வாக்க‌ளார்க‌ள் : 7,23,529

எம். அப்துல் ர‌ஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற‌ வாக்குக‌ள் 3,60,474

அதிமுக‌ வேட்பாள‌ர் பெற்ற‌ வாக்குக‌ள் 2,53,081

சுமார் 50 ச‌த‌வீத‌த்திற்கும் அதிக‌மான‌ வாக்குக‌ள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ர‌ஹ்மான்.

வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.

தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.

கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.

கடந்த தேர்தல் நிலவரம்

காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது ‍ முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் ‍ முஸ்லிம் லீக்

முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)

இத்த‌கைய‌ வெற்றிக்காக‌ பாடுப‌ட்ட‌ அனைவ‌ருக்கும் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் ந‌ன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.

எல்லாப் புக‌ழும் இறைவ‌னுக்கே !

Friday, May 1, 2009

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு

http://www.muslimleaguetn.com/news.asp?id=829

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.

அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.

வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு

29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Saturday, April 11, 2009

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

kalam kadir
dateSat, Apr 11, 2009 at 7:58 PM
subjectFw: [AIMAN Times] FLASH NEWS : வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

Salamun alaikkum

I am so glad to hear and see the news about My Dear Friend and my near by-town's
son of soil, Mr.Abdurrahman's selection to put up on Vellore in this year forthcoming election. Most recently we had had good friendship and he is one of fans for my KAVITHAI. Particularly the kavithai which I wrote on conference "muslim league" at tanjore. He admired me so much that I shall have never heard from anyone else. More over, he is also brother-in-law for my dearest friend Mr. Habibullath (muthupet) who is running 'TAMIL NADU UNAVAGAM' in Dubai. As soon as I saw him in the TV yesterday with Our CM,I was so happy and then I started to supplicate THE ALLAH for his big victory in the election competition. Insha Allah, he will win, I am sure.


"kavianban"KALAM
00*71-50-8351499