Tuesday, September 28, 2010

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..


பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது.

1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் - வாதங்கள் - வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் எரிச்சல்படுகிறார்கள்.

கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வழக்கை ரோட்டுக்கு கொண்டு வந்து, மக்களை அவதிக்கு உள்ளாக்கும் சக்திகளை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பட்ட இந்த பாரத நாட்டு மக்களில் பெரும்பாலான நல்லுள்ளங்கள், நீதிமன்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பேசப்படவும் விவாதிக்கப் படவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பற்றி பொது மக்கள் மத்தியில் விவாதிப்பது கூடத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றன.

இத்தகைய உணர்வும், போக்கும், அணுகுமுறையும் எல்லா மதங்களிலும் உள்ள நன்மக்களிடம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால், தங்களின் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு பிரச்சினை கிடைக்காதா? அதை ஊதிப் பெரிதாக்கி மக்கள் மத்தியில் விரோத குரோதங்களை உருவாக்க முடியாதா? என்று காத்துக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகள் எல்லா சமுதாயங்களிலும் இன்றைக்கு உருவாகியுள்ளன.

அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு நாளை வரவிருக்கும் பாபரி மஸ்ஜிது தீர்ப்பு ஒரு காரணமாகி விடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக அனைத்து வழிகளிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு தருவது கட்டாயக் கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை யில் 1989-ம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜிது பிரச்சினை குறித்துத் தெரிவித்து வரும் கருத்து இதுதான்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது, சொத்துரிமை சம்பந்தப்பட்டது. இந்த வழக்குகளை சமுதாயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ, சமயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ கருதுவது மாபெரிய தவறாகும். வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு எதுவோ அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்க மறுப்பவர்கள் நீதிமன்றம் ஏன் சென்றார்கள்? ஆக, சிவில் வழக்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பாரையும் கட்டுப் படுத்தும் தீர்ப்பாகும் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்தோ, ஆதரித்தோ ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டங்கள் எதுவும் பிரச்சினைனைத் தீர்க்காது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்போம் - அமைதி காப்போம் - இவ்வாறுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறோம்.

கோர்ட்டு தீர்ப்பை மதிப்போம், அனைவரும் அந்தத் தீர்ப்பை ஏற்க அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்போம்.

தமிழகம் என்றும் அமைதிப் பூங்கா என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபிப்போம்.

செப்டம்பர் 30 - அருமையான தருணம். நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கிடைத்துள்ள நல்ல தருணம்.

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்!

Friday, September 24, 2010

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தகவல் உதவி :

வடக்கு மாங்குடி பி. சகதுல்லா

shahadullah@yahoo.com

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )

Wednesday, September 22, 2010

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்
( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது )
ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை.
இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு – இருந்தும் அல்லாஹ்வுக்காக அவன் கட்டளை என்பதற்காக உணவையும் நீர் அருந்துவதையும் கூட ஒதுக்கி வைத்துவிட்டு பசித்திருப்பதென்பது அறவழி பண்பாட்டில் வந்த ஓர் அற்புதமான பயிற்சியாகும்.
ரமலான் மாதத்தில் இயற்கையான வாழ்க்கை முறையிலேயே கூட அழுத்தமான ஓர் மாற்றம் ஏற்படுகிறது.
உழைப்பினை நல்கி வருவாயைத் தேடி உண்டு மகிழ்ந்திட பகலையும், உறங்கி களைப்பாறி இன்பந் துய்த்திட இரவையும் இயற்கையாக பெற்றுள்ள முஸ்லிம்கள் பகலை பசித்திருக்கவும் இரவை விழித்திருந்து அவனை வணங்கி இசைப்பாடி துதித்து கழித்திருக்கவுமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழிக்காத இடும்பை கூர் வயிற்றை ஒரு மாத காலம் பகற்போதுகளில் பட்டினி கிடக்கச் செய்கிறார்கள். இது ஓர் அற்புத சாதனை அல்லவா ?
இஸ்லாமிய நெறியில் இந்தப் பயிற்சி இன்றியமையாத ஒரு கடமையானாலும், வாழும் மனித சமுதாயத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக வறுமைக் கோட்டின் கீழே வாழுபவர்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் புரிந்து, அவர்கள் மீது கழி விரக்கம் கொண்டு, தம்மிடம் உள்ளதைத் தேவைப்பட்ட மற்றவர் களுக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பை இந்தக் கடமை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த அறநெறிப் பண்பு உலகெலாம் தழைக்க மற்றவர்களும் இந்த பயிற்சியை கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லும் அதிகாரம் யாருக்காவது கிடைக்குமானால், அது வரவேற்கத்தக்கதே .
நோன்புப் பெருநாள் ஒரு கடுமையான பயிற்சியை, தானே மனமுவந்து – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக மேற்கொண்ட விசுவாசிகளுக்கு – அற்புத சாதனையாளர்களுக்கு பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் வழங்கும் ஒரு சன்மானமாகும்.
மனிதர்களாக இருந்து கொண்டே அறவாழ்வின் அடிப்படையில் புனிதர்களாகத் தம்மை உயர்த்திக் கொண்ட அந்தத் திருவாளர்கள் அடையும் சன்மானம், பெருநாளின் மகிழ்ச்சியில் உலக மக்களும் பங்கு கொள்கிறார்கள்.
நம்மிடம் ஆயுதம் ஏந்தும் கரங்கள் உண்டு. ஆனாலும், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆயுதங்கள் இல்லை.
எனவே, நம்முடைய கோடானு கோடி கரங்களை அந்தக் கருணையாளனின் நினைவில் உயர்த்துவோம்.
“இறைவனே ! உன்னுடைய வலிமை யாராலும் தடுக்க முடியாதது. அந்த வலிமையால் கொடுமைகள் இழைக்கப்பட்ட அனைவருக்கும் உன்னுடைய கருணையால் – அபயம் தந்தருள்வாயாக ! கொடு மனம் கொண்ட கயவர்களால் சூழப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு நல்குவாயாக !
“உலகெங்கும் அமைதியை நிலை பெறச் செய்வாயாக ! சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மனிதர்களிடையே நிலை நாட்டுவாயாக ! உன்னுடைய அளப்பரிய கொடையாலே மனித சமுதாயம் செழித்து சுபிட்சமுடன் வாழச் செய்வாயாக.
“கருணை மிக்கவனே ! உன் கட்டளைக்கேற்ப நோன்பு நோற்ற புண்ணியவான்களின் சாதனையை முன்னிலைப்படுத்தி உன் திருத்தூதர் காட்டிச் சென்ற வழிமுறைக்கொப்ப இரவெல்லாம் உன்னைப் புகழ்ந்தேத்தி – வணங்கி, வாழ்த்திய அந்த மனிதப் புனிதர்களின் தவநிலையின் அடிப்படையில் உன்னிடம் உளந்திறந்து பணிவோடு பிரார்த்திக்கின்றோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றருள்வாயாக. ஆமீன் ! ஈத் முபாரக் !!
( நன்றி – ‘மணி விளக்கு’ ஜுலை 1982 )

( மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2010 ன் மறுபிரசுரத்திலிருந்து )

Saturday, September 18, 2010

கொலைக்களம் குவாண்டனாமோ!

கொலைக்களம் குவாண்டனாமோ!
- வெ. ஜீவகிரிதரன்


அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்��-பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம். ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.

அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா. ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்�� தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493-எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434பேர் இதற்கு பதிலனுப்பினர்.

தங்கள் பதிலில் தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதி காரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பிஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது. 2004-டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை

அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.

சித்ரவதைகள்
இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பதுhன். அவை யாவை?

1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)

2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.

3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.

4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.

5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.

6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54-நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).

7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.

8.அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)

9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் ஹஹலேப் டான்ஸ்�� எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.

10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-

11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.

12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).

13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.

14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.

15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.

இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.

அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34-52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?

1. ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.

2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.

3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.

4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.

5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.

6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.

7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.

8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.

இந்த உதிகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது. அக்கிரமங்கள் மூடி மறைப்பு!

இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.

1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.

2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.

3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.

இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.

இன்றுவரை அச்சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை 13.8.2010ல் தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!



Wednesday, September 15, 2010

இப்னு தளபதி

இப்னு தளபதி


http://ibnuthalabathi.wordpres.us/2010/04/in.html

Monday, September 13, 2010

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

நோன்புப் பெருநாள் நிறைவுற்று, புதிய வாழ்க்கை துவங்குகிறது நோன்பின் மாண்பால் புவனம் முழுவதிலும் சுவன சுகமும் இன்பமும் பெருகிட வேண்டும் என்றே நோன்பாளிகள் வேண்டினர். எதையும் மறந்து எண்ணங்களைத்துறந்து இதயம் திறந்து இறைவனிடம் முறையிடும் போது அதற்குரிய பலனும் பயனும் நிச்சயமாகவே கிடைக்கவே செய்கிறது.
நோன்பாளிகள் வாழ்த்துக்கு உரியவர்கள். இதனை கவிஞர் தா. ஜெய்புன்னிஷா தனது கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இகபர சுகமெலாம் ஈந்திடும் நோன்பினை
இனிதுற நோற்பவர் நுழைவர்நல் சுவனமே
செகமிதில் எண்ணம் சொல் செயல்பாடுயாவிலும்
சேர்ந்திடும் நன்மையால் சிறப்புறும் புவனமே||
புவனத்தைப் புனிதப்படுத்தும் நோன்பிருந்து எங்களுக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கிய அத்துணை நன்னெஞ்சங்களுக்கும் நமது இதய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்தாம் எத்தனை வகை? அடடா, இப்படி யெல்லாம் வாழ்த்து கூற முடியுமா? என்று வியப்புற்று அதிசயிக்கச் செய்யும் அற்புத வாசகங்கள்! அடுக்கு மொழிகள்! உள்ளத்தைத் தொட்டிழுக்கும் கவிதை வரிகள்! அவை யாவும் சொற்செண்டுகள் மட்டுமா? தெவிட்டாத கற்கண்டுகள்!
இறையருள் எல்லோருக்கும் நிறைக!
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு ஈடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளன. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும் என்னும் வேணவா ஏற்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.
இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, எங்களின் கல்பில் - இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
வாழ்த்துச் செய்திகளில் வந்த வைர வரிகளைப் பார்த்தபோது, அவற்றில் தலை சிறந்தவற்றுக்கு விருதும், பரிசும் வழங்கி வரிசைப்படுத்தினால் என்ன என்னும் சிந்தனை கூடப் பிறந்தது. இந்திய மாநிலங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புகள் தினம் தினம் ப+த்த வண்ணமாக உள்ளன. புதிய புதிய தலைவர்கள் - நிர்வாகிகளாகப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்று எழுதுவோரும், ஏகடியம் பேசுவோரும் எங்கும் உள்ளனர். ஆனால், இந்த அந்த விமர்சனக்காரர்கள் பெரும் வியப்படைந்தவர்களாக மாறி விடுவார்கள்.
நோன்பு மனதுக்கு இதம் சேர்த்தது@ உடலுக்கு புதிய தெம்பைத் தந்தது@ சமூகத்திற்குப் புதிய சிந்தனையைத் தந்தது@ தேசத்துக்கு புதிய உறவுப் பாதையை வழங் கியது@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு இதுவரை இல்லாத தொரு புதிய வரலாற்றையே இந்த ஆண்டு ரமளான் தந்திருக்கிறது.
வார்த்தைகளில் வந்த வாழ்த்துச் செய்திகளே!
நாளைக்கு செயல்பாடுகளால் வந்த வெற்றிகளாக
மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
வாழ்த்தாக வந்ததை வெற்றிக்கு இறைவன் தந்த விதையாக ஏற்போம்! புதிய சரித்திரம் படைப்போம்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=1843

Thursday, September 9, 2010

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

இஸ்லாமிய கொள்கை என்பது புதிதாக வந்த ஒன்றல்ல ஆதியில் இருந்தே இருந்து வரும் கொள்கை யாகும் இன்று உலகில் உள்ள பல்வேறு மதங் களின் அடிப்படை தத்து வம் ஏகத்துவமே. ஆனால், அதனை மற்றவர்கள் மறந்து விட்டார்கள். இன் னும் சிலர் அந்த தத்து வத்தை மறைத்துவிட்டார் கள். அதனை நினைவ+ட்டி ஏகத்துவ கொள்கையை உறுதியாக வெளிப்படுத்து வது இஸ்லாம் மார்க்கம்.
இதனை அனைத்து மக் களுக்கும் தெரியப்படுத் துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அது இன் றைய அவசிய தேவையாக வும் இருக்கிறது என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைமை அலுவல கத்தில் 2.9.2010 அன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் சிறப்புரையாற்றும் போது குறிப்பிட்டதாவது
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் என்பது இந்தியா வில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இன் னும் சொல்லப்போனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் இயக்க மாகும். இந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது தேசிய ஒருமைப்பாடு, சமூக நல் லிணக்கம், சிறுபான்மையி னரின் குறிப்பாக முஸ்லிம் களின் கலாச்சார தனித் தன்மை பாதுகாப்பு என் பதே ஆகும்.
இந்த கொள்கைகளை எவரெல்லாம் ஏற்று அதனை மேலோங்க செய்ய யாரெல்லாம் பாடு படுகிறார்களோ அவர்க ளெல்லாம் முஸ்லிம் லீகி னர்தான். அந்த வகையில் நமது சமுதாயத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் பல நல்ல காரியங்களை ஆற் றிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் லீகை பொறுத் தவரை எந்த சமுதாய அமைப்பையும் நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எல் லோரையும் அரவணைத்து சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல முறையில் பயன்படுத் தவே விரும்புகின்றோம். நாங்கள் எல்லோரையும் ஊக்குவித்து வளர்க்க செய்ய விரும்புகின்றோமே தவிர எவரையும் அழிப்ப தற்கு விரும்பியதில்லை.
என்னிடம் பலமுறை பத்திரிகையாளர்கள் கேட்டகேள்வி இன்றும் கூட கேட்டுக் கொண்டி ருக்கும் கேள்வி எதுவென் றால் சிறுபான்மை சமுதா யமான உங்கள் சமுதாயத் தில் நிறைய அமைப்புகள் உள்ளனவே? இதனால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாதா? என்பது தான். நான் அவர்களுக்கு அளிக்கக் கூடிய பதில், ஹஹஎங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒரு சில காரணத்தால் கருத்து வேறுபாடு கொண்டவர் களாக, தனித்தனியாக புது புது அமைப்புகளை தொடங்கி நடத்துவது அவர்களின் சமுதாய ஆர் வத்தையும், ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத் திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவர் களின் விருப்பத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அவர்கள், மற்ற சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனோடு கரைந்து போகாமல் தாங் கள் பிறந்த, வளர்ந்த சமு தாயத்திற்கு சேவையாற் றும் நோக்கத்துடன் சமு தாய அமைப்புகளை தொடங்குவது பாராட்டுக் குரியதுதான். எல்லோரும் ஓர்நாள் ஒன்றிணைந்து செயல்படும்நாள் வரத்தான் செய்யும். அப்போது அத னால் விளையும் பயன்கள் அதிகமாக இருக்கும்|| என்று பதிலளித்தேன்.
எங்களைப் பொறுத்த வரையில், சமுதாய அமைப்புகள் குறித்த எண்ண ஓட்டம் இவ்வாறு தான் இருக்கிறது. அந்த வகையில்தான், நீங்கள் அழைத்த இஃப்தார் நிகழ்ச் சியிலும் கலந்துகொள்ள வந்துள்ளேன்.
இன்று, இஸ்லாமிய சமு தாயம் அதிலும் இந்தியா வில் உள்ள முஸ்லிம்கள் மூன்று அடிப்படையான விஷயங்களைசெய்ய வேண் டிய நிலையில் உள்ளனர்.
ஒன்று, அவர்கள் தங்கள் மார்க்கம் குறித்த தெளி வான புரிதலை உடைய வர்களாக ஆக வேண்டும்.
இரண்டாவது, தங்களின் மார்க்கத்தை, அதன் தனித் தன்மை, கலாச்சார அடை யாளங்களை அன்றாட வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும்.
மூன்றாவது, தங்களின் மார்க்கம் குறித்து, அதன் சிறப்புகள் குறித்து தங் களை சுற்றியுள்ள சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தை பொறுத்தவரை அது பிரச்சாரம் செய்யக்கூடிய மார்க்கமாக அமைந்துள் ளது. திருக்குர்ஆனும், திருத் தூதர் நபி (ஸல்) அவர் களின் வாழ்வும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அதன்பால், மக்களை அழைக்க வேண்டும் என் பதை அடிப்படைநோக்க மாக கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
இதில், எந்த சமரசத்திற் கும், விட்டுக் கொடுத்தலுக் கும் இடமே இல்லை. இந் தியாவை பொறுத்தளவில் இன்று இந்தப் பணி மிகவும் தேவையாக இருக்கிறது. நாம் அந்தப் பணியை சரி யாக, முறையாக செய்யாத நிலையிலும் கூட ஏராள மான மக்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு தங்களை முஸ்லிம்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டு களில் மொத்த இந்தியாவும் முஸ்லிம் மயமாகிவிடும் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களால் பரப்பப்படுகின்றன. அதன்காரணமாக, அவர்கள் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பல பொய்யான தகவல்களை, உண்மையல் லாத நிகழ்வுகளை வெறுப் ப+ட்டும் செய்திகளை வேக மாக பரப்பிக் கொண்டிருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப் பைச் சேர்ந்த கங்காதர் நந்தா என்பவர் எழுதி யுள்ள ஒரு புத்தகத்தில், இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் இஸ்லாம் மயமாகிவிடும் என குறிப் பிட்டுள்ளார். அந்த நூலைத் தொடர்ந்து வெளிவந்த பல நூல்களும் இவ்வாறான செய்திகளை கொண்டிருக்கின்றன. அவர்களின் அச்சம் தேவையில்லத ஒன்றாகும்.
இஸ்லாம் என்பது ஏதோ புதிதாக வந்த கொள்கை போன்றும், அது எங்கோ இருந்து இங்கு இறக்குமதி செய்வது போன்றும் அவர்களின் பிரச்சாரங்கள் அமைந் திருக்கின்றன.
ஆனால், இஸ்லாம் அவர்கள் நம்பும் வேதங் களில் உள்ள உண்மை தத்துவங்களை அவர்கள் மறந்துவிட்ட செய்திகளை இன்னும் சொல்லப் போனால் அவர்களில் சிலர் வேண்டுமென்றே மறைத் துவைத்த வேதங்களின் உண்மை தத்துவங்களை நினைவ+ட்டி வெளிப் படுத்தி அதன்பால் செயல் பட தூண்டுவே இஸ்லாம் மார்க்கமாகும்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது ஏகத்துவ கொள்கையாகும். இந்த கொள்கையை உறுதியாக எந்தவித விட்டுக்கொடுத் தலுக்கும் இடமில்லாமல், சமரசம் செய்துகொள்ளா மல் ஏற்றுக் கொண்டவர் கள் முஸ்லிம்களாக உள்ள னர். இஸ்லாம் எந்த ஒரு மதத்தையும், கலாச்சாரத் தையும் அழிப்பதற்காக வந்த மார்க்கம் அல்ல. அவர்களின் மதங்களில் கலாச்சாரங்களிலும் ஒளிந்து கிடக்கும் புதையல் களை தேடிக்கண்ட டைந்துகொள்ள வழி காட் டும் மார்க்கமாகவே இஸ் லாம் அமைந்துள்ளது. இந்த செய்தியினை எல் லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தௌ;ளத்தெளிவாக எடுத் துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கு இன்று அவசர-அவசிய தேவையாக இருக்கிறது. இதன்பால், செயல்படுபவர் களை நாங்கள் ஊக்குவிக் கிறோம்-பாராட்டுகிறோம்-வரவேற்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கே.எம்.கே.வின் சிறப்பான பணி
முன்னதாக நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமை உரை யாற்றுகையில்,
இந்திய முஸ்லிம்களுக்கு தாய்ச்சபையாக திகழும் முழு தகுதிபடைத்தது இந் திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் என்றும், சிராஜுல் மில்லத் அப்துல் ஸமத் சாஹிப் அவர்களின் மறை விற்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம் லீகிற்கு எதிர் காலம் இருக்காது. அந்த இயக்கம் அழிந்து போய் விடும் என்று பலரும் கருதிய நிலையில் மிகவும் இக் கட்டான சூழ்நிலை யில் அந்த இயக்கத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்ற பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல் வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த இயக்கத்தின் பாரம் பரிய பெருமைகளை தொடர்ந்து காத்துவருவது டன், இன்று அந்த இயக் கம் நல்ல வளர்ச்சியை காணவும் வழிவகை செய்து மிகவும் எளிய தலைவராக, எல்லோருக்கும் வழிகாட் டும் தலைவராக அமைந் துள்ளார் என குறிப்பிட் டார்.
நூல் வெளியீடு
பேராசிரியரின் உரையை தொடர்ந்து ஸாஜிதா பதிப்பகத்தின் ஹஹகலீஃபாக் கள் வரலாறு|| என்ற நூலினை பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முஹம் மது முனீர் வழங்கினார். நூல் வெளியிட்டாளர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.எம். நிஜாமுதீன், ஜலால், அன் வர், முஹம்மது ரபி, ஷெரீப், மணிச்சுடர் ஹமீது உள்ளிட்டஏராள மானோர் கலந்து கொண்டனர்.


--

பிரிந்தால் சரியாச்சொல்..?

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை
நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்
பக்தனை பக்குவப் படுத்திடவே
பாரினில் நீதான் பிறந்துவந்தாய்

சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்
சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்
ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ
அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்
நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிந்தாய்
மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்
மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்
இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்
பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை
நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்

விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்
விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்
அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்
அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்

வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்
உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை
வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்
உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை

நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?
நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?
மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!
வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!

கவியாக்கம்- ஜே.எம்.பாட்ஷா

பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு....

பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு....
ஈரான் - ஆக்கிரமிப்பு.....
- வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/news.asp

http://mudukulathur.com/?p=1951

உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் -ம் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கி விட்டன. இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சுதந்திரமான, ஜனநாயக, குடியரசாக பலஸ்தீனம் இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மலர்ந்து விடும் என ஜிகினாக்கள் தூவப்பட்டுள்ளன.

பல ஆண்டு காலமாக மத்திய கிழக்கு பகுதியிலே இருந்து வந்த மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் - பலஸ்தீன பதட்டங்களை தணிக்க அமெரிக்கா முன் நின்றுள்ளதாக சில அரபு நாடுகளும் பெருமை கொள்கின்றன. காரணம் அமெரிக்காவுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் உள்ள நெருக்கம் நியாயப்படுத்தப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது என்பதுதான்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கும் முன்னர் அமெரிக்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாக, சமாதானத்துக்கான நேர்மையான தூதுவனாக காட்டிக் கொள்ளவே இந்த நாடகம் ஆரம்பமாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உண்மை தன்மையும் இல்லை. கிழக்கு ஜெருசலேமில் ய+தர்களை குடியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறையவில்லை. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலேமிலும் புதிய யூத குடியிருப்புகளை நிறுவுகின்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறுத்தாமல் பேச்சு வார்த்தை துவங்க முடியாத என பலஸ்தீனம் அறிவித்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் மேலும் 1,600 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் பலஸ்தீனத்தின் கழுத்திலே கை வைத்து தள்ளி கொண்டு வந்து பேச உட்கார வைத்துள்ளது அமெரிக்கா. தன்னை ஒரு பக்கம் ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம் ஈரானை விழுங்குவதுதான் அமெரிக்காவின் சதித்தனம். இதில் அரபு நாடுகளில் சிலவற்றையும் தன்னுடன் இணைத்து கொள்வதே அதன் நரித்தனம். இதற்கு சுன்னத்தி-ஷியா அரசியலை பகடைக்காயாக உருட்டுகிறது.
ஈரான் மீது ராணுவ தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியத்தை இஸ்ரேல் பல ஆண்டுகளாகவே வலியுறுத்துகிறது. அதற்கு அரபு நாடுகளின் துணையும தேவை என்பதை உணர்ந்தே உள்ளது. சன்னி முஸ்லிம் அரபு நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஷியா முஸ்லிம் நாடான ஈரானுக்கு எதிராக களத்தில் இறக்க அமெரிக்கா அனைத்து ஆயத்தங்களையும் செய்துள்ளது. அதற்காக அந்நாடுகளிலெல்லாம் அபரிமிதமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.

சவூதி அரேபியாவுடன் 60 பில்லியன் டாலர் பெறுமான ஆயுத பேரத்தை முடித்துள்ளது அமெரிக்கா. இந்த வருடம் மட்டும் ரேடார் மற்றும் ஏபுகணை எதிர்ப்பு வசதிகளுடன் உள்ள 84 நவீன எஃப்.-15 ஜெட் விமானங்கள், 70 யூ.எச்.-60 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள், 60 லாஸ்பௌ அபாச்சே ஹெலிகாப்டர்கள், 2742 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றுடன் பல்வேறு உபகரணங்களையும் சவ+திக்கு அமெரிக்கா விற்றுள்ளது.
சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஜோர்டான் நாட்டுக்கு 220 மில்லியன் டாலர்கள் பெறுமான 80 நவீன ரக ராக்கெட் லாஞ்சர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 338 மில்லியன் டாலர்கள் பெறுமான 1808 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இருட்டிலும் இயங்கக் கூடிய 162 லாஞ்சர்கள் ஆகியவற்றையும் விற்றுள்ளது.

அமீரகத்துடன் 290 மில்லியன் டாலர் பெறுமான ஆயுத விற்பனைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் முலம் 1600 லேசர் வெடிகுண்டுகள், 800 ஒரு டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், 400 பதுங்கு குழி வெடிகுண்டுகள் ஆகியவை சப்ளை செய்யப்படும்.

எகிப்துடன் இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 3.2 பில்லியன்
டாலர்கள் பெறுமான 24 எஃப்.16 ஜெட் விமானங்கள், போர்க்கப்பல்களை தகர்க்கும் அதிநவீன ஹார்ப்ப+ன் பிளாக் -2 ஏவுகணைகள், ஏவுகணைகளை தாங்கி அதிவேகமாக செல்லும் 4 நவீன படகுகள், 450 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை களையும மற்றும் 750 மில்லியன் டாலர் பெறுமான எஃப்.16 ஜெட் விமானங்களுக்கான 156 ஜெட் என்ஜின்களும் விற்கப்பட்டுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எகிப்து அனுமதி இருநதால் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஜூன் மாதம் ஒரு இஸ்ரேலிய போர்க்கப்பலும், 11 அமெரிக்க போர்க் கப்பல்களும் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல எகிப்து அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஈரானுக்கு வைக்கப்பட்டுள்ள குறி என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அரபு நாடுகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமை அமெரிக்க காங்கிரசில் அறிக்கை தாக்கல் செய்யும் போது “இது மத்திய கிழக்கு பகுதியிலே வலுவான தளத்தை ஈரானுக்கு எதிராக உருவாக்க அவசியமான ஒன்று"- என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரபு நாடுகளுக்கான ஆயுத பேரங்களை எதிர்த்துள்ளது. தன்னை விட ராணுவ ரீதியில் பலமான மத்திய கிழக்கு பகுதியிலே இன்னொரு நாடு உருவாகி விடக் கூடாது என்பதிலே அது உறுதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலை சமாதானப்டுத்தும் முகமாக அரபு நாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களை விடவும் நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. உலக பேட்டை ரவுடி அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியின் பேட்டை ரவுடியாக இஸ்ரேல் நீடிக்க தேவையான உறுதியை இஸ்ரேலுக்கு தந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு விற்கப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளோ, மற்ற நவீன ஆயுதங்களோ கிடையாது. ஆனால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ள எஃப்-35 என்ற மிக நவீன போர் விமானம் ரோடர் கண்களிலேயே மண்ணைத் தூவி, விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் ஏமாற்றி விட்டு இலக்கு நோக்கி சென்று திரும்பும் வசதிகள் கொண்டதாக உள்ளது. இது மட்டுமல்லாது இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும், போயிங் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் ஏரோ-3 ஏவுகணை எதிர்ப்பு குறுக்கீட்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 100 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணை உருவாககும் இஸ்ரேலின் அயர்ன் டோம்-க்கு 205 மில்லியன் டாலர்கள் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12-06-2010 அன்று லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் செய்தி இதழ் அமெரிக்க ராணுவ அதிகாரி அளித்துள்ள செய்தி ஒன்றினை வெளியிட்டுளளது. அதில் ரியாத் - தன் நில எல்லை மீது இஸ்ரேல் போர் விமானங்கள், வெடிகுண்டு வீச்சு விமானங்கள் பறந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலை நிலைகளின் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு இந்த அனுமதி ரியாத்தால் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் பெற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘ஈரான் ஆக்கிரமிப்பு| என்பது அமெரிக்காவின் திடீர் திட்டமல்ல. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஈரான் 3-வது இடத்தில் உள்ளது. இதை விழுங்க அமெரிக்கா 1995-லேயே திட்டம் தீட்டி விட்டது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப் பிரிவின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி 1995லேயே முதலில் ஈராக் பின்னர் ஈரான் என ஆக்கிரமிப்புகள் திட்டமிடப்பட்டு விட்டன. முதலில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு பதட்டத்தை - ராணுவரீதியிலான பதட்டத்தை - உருவாக்கி, பின்னர் ராணுவ துருப்புகளை குவித்து ராணுவ தீர்வே வழி எனக் கூறி உள்ளே நுழைவது அமெரிக்காவின் திட்டம். முதலில் ஈராக் பின்னர் ஈரான் அதைத் தொடர்ந்து சிரியா மற்றும் லெபனான் அதனுடைய உடனடி இலக்குகள், வட கொரியா, சீனா, கிய+பா மற்றும் ரஷ்யா ஆகியவை அமெரிக்காவின் நீண்ட கால இலக்குகள்.
2005-ம் ஆம் வருடத்திலிருந்தே அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை மிக நவீன ஆயுதங்களை குவிப்பதும், இவை வான் வழி பாதுகாப்பிலே ஒருங்கிணைந்து செயல்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள அரபு நாடுகள் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்ப+ர், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவையும் இதில் பங்கு பெறுகின்றன.
சூயஸ் கால்வாய் வழியாக போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை எகிப்து கவனித்துக் கொள்கிறது. பெர்சிய வளைகுடாவின் தென்மேற்கு கரைப்பகுதி, ஓமன் வளைகுடா பகுதிகளை சவூதி அரேபியாவும், மற்ற அரபு நாடுகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - என்ற பெயரிலே அரபு நாடுகளில் மிக நவீன ஆயுதங்கள் அமெரிக்காவால் குவிக்கப்பட்டு விட்டன.
கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் நாட்டுக்கு எதிராக பல்வேறு தடைகளை - கடுமையான பொருளாதார தடைகள் உட்பட- விதித்துள்ளது. காசாவுக்கு நிவாரணப் பொருள் கொண்டு சென்ற படகை சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அதில் சென்ற சமூக ஆர்வலர்களை கொலை செய்த இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் இயற்ற மறுத்த சில நாட்களுக்குள்ளாகவே ‘ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள்’ தீர்மானத்தை இக் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எந்த ஒரு ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் அரசுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். வியட்நாம் போர், ஆப்கன் போர், ஈராக் போர் என அனைத்து போர்களையும் அமெரிக்க மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். 2006-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கருத்து தெரிவித்தனர் - எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க அரசு ஊடகங்களின் மூலம் தொடர்ந்து ஈரான் பற்றிய விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஈரானின் அணு ஆயுதங்களால் சராசரி அமெரிக்காவின் வாழ்வு பறிபோகப் போவதாக தன் மக்களை நம்ப வைத்தது. ராணுவ தீர்வு ஒன்றே வழி என கருத்து திணிப்பை நடத்தியது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் ராய்ட்டர் - ஜோக்பி நடத்திய கருத்துக் கணிப்பில் 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இணைந்து ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என கருத்து தெரிவிததுள்ளனர். ஈராக், ஜப்பான் ஆக்கிரமிப்பு களுக்கெதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று ஈரான் விஷயத்தில் நழுவுகின்றனர். யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் கூட அமெரிக்க அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பலியாகி விட்டன.
ஈரான் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இஸ்ரேல் - பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கு தரகனாக தன்னை முன்னிறுத்தி சமாதான தூதுவனாக அரிதாரமிடுவது மட்டுமல்லாமல், ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகளையே தயார் செய்து வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தின் ஊடகங்கள் எல்லாம் அமைதி தவழும் பூங்காவாக பலஸ்தீனம் மலரப் போகிறது என பயாஸ் கோப்பு காட்டிக் கொண்டிக்கும் வேளையில் சத்தமில்லாமல் மொத்தமாக ஈரானை விழுங்கப் போகிறது அமெரிக்கா. இந்த ஏகாதிபத்தியத்தின் யானைப் பசிக்கு ஈரான் ஒரு சோளப் பொறி மட்டுமே. இன்று ஈரான்......நாளை ....????


Thanks : Manisudar Tamil Daily




அன்பார்ந்த சகோதரர் அவர்களுக்கு,

நலம்.... நலத்திற்கு இறைஞ்சுகிறோம்...
வலைதளத்தில் உலா வரும்
தங்கள் கட்டுரைகள்...
அறிவுமுத்துகளை நாடி
முக்குளிப்பவர்களுக்கு நல்லதோர்
பொக்கிஷமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையிலும்
தங்கள் உழைப்பின் வியர்வைப்
பனித் துளிகள் மின்னுகின்றன.
சக மனிதனுக்காகப் போராடும்
தங்கள் கருத்துகள் உணர்ச்சிப்
பிழம்பாகப் பீறிடுகின்ற வகை
மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மனம் நிறைந்தும் இசைந்தும்
தங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்..
தங்கள் பணி மென்மேலும்
தொடரவும் உரிய பயன் அளிக்கவும்
வாழ்த்துகிறோம்.....
வாழ்க...... வளர்க...
நன்றி,

அன்பு,
சேமுமு.

prof_semumu@yahoo.com