Showing posts with label Muslim League. Show all posts
Showing posts with label Muslim League. Show all posts

Friday, September 24, 2010

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )

Thursday, May 27, 2010

Muslim League

Dear Brothers...

I am happy to see the healthy discussion in the net about bringing in all the community youth and intellectuals into one fold for the sake of community service.
It is needless to say that IUML is the one and only social, community and political organisation which is responsible for the Muslims of India living today with self respect. No other organisation in this country can claim credit for the same. There are more than 100 organisations claiming to be working for the betterment of the community. But the net result what we have witnessed is that the youth were sent to jails and their families were thrown into streets. No organisation came forward to take the responsibility. But they were busy in "Fund Raising".

The youth are very vigourous and emotional who want to see instant results like fast food. They don't know the history of this country (India).

Muslim League is the only party which was founded by the sons of the soil with a noble cause of liberating this country from the clutches of slavery.
They fought the British. During kilafath movement they not only faught against Englishmen, but also boycotted the education through English language.
They boycotted higher education, convent education and any thing offered by British and their language. The consequenses are even now visible where the Sachar Commission in it's report says that the Muslim community's literacy level is far below than the scheduled caste community of this country. It reflects in their economic conditions. The leaders and cadres without any distinction have sacrificed their life, future and prosperity for the sake of this country.
But some parties founded by the agents of British claim that they are the freedom fighters.

The same party which is having the legacy of leading freedom movement without any compromise is now leading the movement to safeguard the freedom we have achieved. I will storngly recommend all of you to first of all read the "MUSLIM LEAGUE NOOTRAANDU VARALAARU" written by Ezhuththarasu Janab.Haneef and published by the Muslim League publications. It is not mere history of Muslim League. It is the History of the freedom movement led by one and only party in India which is a standing example for patriotism. Till date IUML is guided only by patriotism. Its leaders are known for their simplicity, self lessness, hard work, and cordial approach.

Being part of Muslim League will itself mould a Man into a Gentleman. Let us teach the youth to be "Gentlemen" rather than mere "Men".

Regards
V.Jeevagiridharan

Sunday, April 18, 2010

தொடர்ந்து முழங்குங்கள்

தொடர்ந்து முழங்குங்கள்
-திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com

“முஸ்லிம் லீக்”
பேரியக்கம்
தொடங்கியவர் பெயரில்
ஓர் பேரவை – அது யு.ஏ.இ
காயிதே மில்லத் பேரவை !

தாய்ச் சபையின்
அறுபத்து இரண்டாம் ஆண்டு
தொடக்க விழா
தாயகம் கடந்து
யு.ஏ.இ. துபையில் !

முஸ்லிம் லீக் – இது
கொடிகள் உயர்வதற்காக
பாடுபடும் கட்சியல்ல – நாட்டின்
குடிகள் உயர்வதற்கு
பாடுபடும் கட்சி

மந்திரங்கள் முழங்க
தொடங்கப்பட்ட கட்சிகளுண்டு,
இது – நாட்டின்
சுதந்திரத்திற்காக முழங்கிய
கட்சி இது !

இந்திய
சுதந்திரத்திற்கு பாடுபட்ட
முஸ்லிம்
அன்னியனாய் பார்க்கப்பட்ட போது,
உரிமைகளை வென்றெடுக்க – இந்திய
யூனியன் முஸ்லிம் லீக்
ஆரம்பிக்கப்பட்டது !

“இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு”
முழங்கினார் உறுதியோடு
கவ்மின் காவலர்
காயிதே மில்லத்

இது
சலுகைகளை கேட்கும்
சமுதாயமல்ல
உரிமைகளை கேட்கும்
சமுதாயம்
உணர்வோடு ஒலித்த தலைவர்
நமது
அப்துஸ்ஸமது.

”பொது சிவில் சட்டம்”
ஐநூறுக்கும் மேற்பட்டோர்
அங்கு (பாராளுமன்றத்தில்)
அமைதியாக இருந்த போது
ஐயமற எடுத்து வைத்தார் ஒருவர்

“ஷரீஅத் சட்டம் தான்
சரியான சட்டம்
உயிரினும் மேலான
உயர்வான சட்டம்” – அவர்தான்
நெஞ்சம் துவளா
குலாம் மஹ்மூத் பனாத்வாலா !

“தீன் இஸ்லாம்
தமிழகத்திற்கு வந்த மதமல்ல – அது
தமிழகத்தின் சொந்த மதம் “
ஆதாரங்களோடு நிரூபித்த,
பேராசிரியர் காதர் மொய்தீன்

நாடாளுமன்றத்தில்
நம் உரிமைகளுக்கு
குரல் கொடுத்தும் – பிறை மேடையில்
சமூக பெருமைகளை
எடுத்து வைத்தும் வரும்
அப்துர் ரஹ்மான். எம்.பி !

நான்
பொய் சொல்லவில்லை,
உங்கள் எண்ணிக்கை
குறைவுதான் !
உண்மையை சொல்கிறேன்
உங்கள் பணி எனக்கு
மனநிறைவுதான் !

திராவிட முன்னேற்ற கழகத்துடன்
இணைந்து,
தீனோரின் முன்னேற்றத்திற்காக
பாடுபடும் நீங்கள்

சமூக உரிமைகளுக்கு
தொடர்ந்து முழங்குங்கள்
உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும்
உறுதுணையாய் இருப்போம் நாங்கள் !

( 25.03.2010 வியாழக்கிழமை துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை )

Presently he is working in Qatar

Thursday, December 31, 2009

http://moulanathalabathy.blogspot.com/

assalamualaikkum brothers,this

http://moulanathalabathy.blogspot.com/

new blogspot for my great father & your thalabathy sahib.plz visit send us your opinion to ibnuthalabathi@yahoo.co.in & hajiasa.lpt@gmail.com

http://moulanathalabathy.blogspot.com/

Abdul Rahman
Secretary, AIMAN Sangam
Member of Muslim League Publication committee
Abu Dhabi,
U.A.E
Mob: +971502821852

Wednesday, December 30, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே!

காயல்பட்டினம் நகர மக்கள் வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹ்மத் முழக்கம்!!


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று காயல்பட்டினம் வருகை தந்தனர். காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பாளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத்தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம்பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமாஅத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்களின் முன்னிலையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்றமைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயிதெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண்டன் என்ற முறையிலும்தான் எனக்கு இந்த வரவேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத்தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டுகிறது. மலபார் பகுதிக்கும் காயல்பட்டினத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை இது நிரூபித்துவிட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவிக் கிடக்கின்றனர். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற்றார். இப்படிப்பட்ட சர்வதேச தொடர்புள்ளவர்களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற்பின் மூலமாக, கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்னமும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது நாடாளுமன்றத்திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறினார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதையில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ்வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் முஸ்லிம்களுக்கு அதிகமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவதற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக்களுக்கு தவறான வழிகாட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்திவிட்டனர். ஆனால் நாங்களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லாமியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந்தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் - மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டிலேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறைகளையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக்கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட்டித்தந்த வழியில் உறுதியுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்திலும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப்பும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக்குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற காரணத்தினால்தான், முஸ்லிம்களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்@ குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் - அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக்கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங்கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மத் ஸாஹிப் பேசினார்.