பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு....
ஈரான் - ஆக்கிரமிப்பு.....
- வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
http://www.muslimleaguetn.com/news.asp
http://mudukulathur.com/?p=1951
உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் -ம் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கி விட்டன. இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சுதந்திரமான, ஜனநாயக, குடியரசாக பலஸ்தீனம் இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மலர்ந்து விடும் என ஜிகினாக்கள் தூவப்பட்டுள்ளன.
பல ஆண்டு காலமாக மத்திய கிழக்கு பகுதியிலே இருந்து வந்த மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் - பலஸ்தீன பதட்டங்களை தணிக்க அமெரிக்கா முன் நின்றுள்ளதாக சில அரபு நாடுகளும் பெருமை கொள்கின்றன. காரணம் அமெரிக்காவுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் உள்ள நெருக்கம் நியாயப்படுத்தப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது என்பதுதான்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கும் முன்னர் அமெரிக்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாக, சமாதானத்துக்கான நேர்மையான தூதுவனாக காட்டிக் கொள்ளவே இந்த நாடகம் ஆரம்பமாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உண்மை தன்மையும் இல்லை. கிழக்கு ஜெருசலேமில் ய+தர்களை குடியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறையவில்லை. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலேமிலும் புதிய யூத குடியிருப்புகளை நிறுவுகின்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறுத்தாமல் பேச்சு வார்த்தை துவங்க முடியாத என பலஸ்தீனம் அறிவித்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் மேலும் 1,600 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் பலஸ்தீனத்தின் கழுத்திலே கை வைத்து தள்ளி கொண்டு வந்து பேச உட்கார வைத்துள்ளது அமெரிக்கா. தன்னை ஒரு பக்கம் ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம் ஈரானை விழுங்குவதுதான் அமெரிக்காவின் சதித்தனம். இதில் அரபு நாடுகளில் சிலவற்றையும் தன்னுடன் இணைத்து கொள்வதே அதன் நரித்தனம். இதற்கு சுன்னத்தி-ஷியா அரசியலை பகடைக்காயாக உருட்டுகிறது.
ஈரான் மீது ராணுவ தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியத்தை இஸ்ரேல் பல ஆண்டுகளாகவே வலியுறுத்துகிறது. அதற்கு அரபு நாடுகளின் துணையும தேவை என்பதை உணர்ந்தே உள்ளது. சன்னி முஸ்லிம் அரபு நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஷியா முஸ்லிம் நாடான ஈரானுக்கு எதிராக களத்தில் இறக்க அமெரிக்கா அனைத்து ஆயத்தங்களையும் செய்துள்ளது. அதற்காக அந்நாடுகளிலெல்லாம் அபரிமிதமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.
சவூதி அரேபியாவுடன் 60 பில்லியன் டாலர் பெறுமான ஆயுத பேரத்தை முடித்துள்ளது அமெரிக்கா. இந்த வருடம் மட்டும் ரேடார் மற்றும் ஏபுகணை எதிர்ப்பு வசதிகளுடன் உள்ள 84 நவீன எஃப்.-15 ஜெட் விமானங்கள், 70 யூ.எச்.-60 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள், 60 லாஸ்பௌ அபாச்சே ஹெலிகாப்டர்கள், 2742 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றுடன் பல்வேறு உபகரணங்களையும் சவ+திக்கு அமெரிக்கா விற்றுள்ளது.
சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஜோர்டான் நாட்டுக்கு 220 மில்லியன் டாலர்கள் பெறுமான 80 நவீன ரக ராக்கெட் லாஞ்சர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 338 மில்லியன் டாலர்கள் பெறுமான 1808 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இருட்டிலும் இயங்கக் கூடிய 162 லாஞ்சர்கள் ஆகியவற்றையும் விற்றுள்ளது.
அமீரகத்துடன் 290 மில்லியன் டாலர் பெறுமான ஆயுத விற்பனைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் முலம் 1600 லேசர் வெடிகுண்டுகள், 800 ஒரு டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், 400 பதுங்கு குழி வெடிகுண்டுகள் ஆகியவை சப்ளை செய்யப்படும்.
எகிப்துடன் இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 3.2 பில்லியன்
டாலர்கள் பெறுமான 24 எஃப்.16 ஜெட் விமானங்கள், போர்க்கப்பல்களை தகர்க்கும் அதிநவீன ஹார்ப்ப+ன் பிளாக் -2 ஏவுகணைகள், ஏவுகணைகளை தாங்கி அதிவேகமாக செல்லும் 4 நவீன படகுகள், 450 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை களையும மற்றும் 750 மில்லியன் டாலர் பெறுமான எஃப்.16 ஜெட் விமானங்களுக்கான 156 ஜெட் என்ஜின்களும் விற்கப்பட்டுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எகிப்து அனுமதி இருநதால் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஜூன் மாதம் ஒரு இஸ்ரேலிய போர்க்கப்பலும், 11 அமெரிக்க போர்க் கப்பல்களும் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல எகிப்து அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஈரானுக்கு வைக்கப்பட்டுள்ள குறி என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அரபு நாடுகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமை அமெரிக்க காங்கிரசில் அறிக்கை தாக்கல் செய்யும் போது “இது மத்திய கிழக்கு பகுதியிலே வலுவான தளத்தை ஈரானுக்கு எதிராக உருவாக்க அவசியமான ஒன்று"- என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரபு நாடுகளுக்கான ஆயுத பேரங்களை எதிர்த்துள்ளது. தன்னை விட ராணுவ ரீதியில் பலமான மத்திய கிழக்கு பகுதியிலே இன்னொரு நாடு உருவாகி விடக் கூடாது என்பதிலே அது உறுதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலை சமாதானப்டுத்தும் முகமாக அரபு நாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களை விடவும் நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. உலக பேட்டை ரவுடி அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியின் பேட்டை ரவுடியாக இஸ்ரேல் நீடிக்க தேவையான உறுதியை இஸ்ரேலுக்கு தந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு விற்கப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளோ, மற்ற நவீன ஆயுதங்களோ கிடையாது. ஆனால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ள எஃப்-35 என்ற மிக நவீன போர் விமானம் ரோடர் கண்களிலேயே மண்ணைத் தூவி, விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் ஏமாற்றி விட்டு இலக்கு நோக்கி சென்று திரும்பும் வசதிகள் கொண்டதாக உள்ளது. இது மட்டுமல்லாது இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும், போயிங் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் ஏரோ-3 ஏவுகணை எதிர்ப்பு குறுக்கீட்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 100 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணை உருவாககும் இஸ்ரேலின் அயர்ன் டோம்-க்கு 205 மில்லியன் டாலர்கள் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12-06-2010 அன்று லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் செய்தி இதழ் அமெரிக்க ராணுவ அதிகாரி அளித்துள்ள செய்தி ஒன்றினை வெளியிட்டுளளது. அதில் ரியாத் - தன் நில எல்லை மீது இஸ்ரேல் போர் விமானங்கள், வெடிகுண்டு வீச்சு விமானங்கள் பறந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலை நிலைகளின் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு இந்த அனுமதி ரியாத்தால் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் பெற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘ஈரான் ஆக்கிரமிப்பு| என்பது அமெரிக்காவின் திடீர் திட்டமல்ல. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஈரான் 3-வது இடத்தில் உள்ளது. இதை விழுங்க அமெரிக்கா 1995-லேயே திட்டம் தீட்டி விட்டது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப் பிரிவின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி 1995லேயே முதலில் ஈராக் பின்னர் ஈரான் என ஆக்கிரமிப்புகள் திட்டமிடப்பட்டு விட்டன. முதலில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு பதட்டத்தை - ராணுவரீதியிலான பதட்டத்தை - உருவாக்கி, பின்னர் ராணுவ துருப்புகளை குவித்து ராணுவ தீர்வே வழி எனக் கூறி உள்ளே நுழைவது அமெரிக்காவின் திட்டம். முதலில் ஈராக் பின்னர் ஈரான் அதைத் தொடர்ந்து சிரியா மற்றும் லெபனான் அதனுடைய உடனடி இலக்குகள், வட கொரியா, சீனா, கிய+பா மற்றும் ரஷ்யா ஆகியவை அமெரிக்காவின் நீண்ட கால இலக்குகள்.
2005-ம் ஆம் வருடத்திலிருந்தே அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை மிக நவீன ஆயுதங்களை குவிப்பதும், இவை வான் வழி பாதுகாப்பிலே ஒருங்கிணைந்து செயல்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள அரபு நாடுகள் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்ப+ர், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவையும் இதில் பங்கு பெறுகின்றன.
சூயஸ் கால்வாய் வழியாக போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை எகிப்து கவனித்துக் கொள்கிறது. பெர்சிய வளைகுடாவின் தென்மேற்கு கரைப்பகுதி, ஓமன் வளைகுடா பகுதிகளை சவூதி அரேபியாவும், மற்ற அரபு நாடுகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - என்ற பெயரிலே அரபு நாடுகளில் மிக நவீன ஆயுதங்கள் அமெரிக்காவால் குவிக்கப்பட்டு விட்டன.
கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் நாட்டுக்கு எதிராக பல்வேறு தடைகளை - கடுமையான பொருளாதார தடைகள் உட்பட- விதித்துள்ளது. காசாவுக்கு நிவாரணப் பொருள் கொண்டு சென்ற படகை சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அதில் சென்ற சமூக ஆர்வலர்களை கொலை செய்த இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் இயற்ற மறுத்த சில நாட்களுக்குள்ளாகவே ‘ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள்’ தீர்மானத்தை இக் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எந்த ஒரு ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் அரசுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். வியட்நாம் போர், ஆப்கன் போர், ஈராக் போர் என அனைத்து போர்களையும் அமெரிக்க மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். 2006-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கருத்து தெரிவித்தனர் - எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க அரசு ஊடகங்களின் மூலம் தொடர்ந்து ஈரான் பற்றிய விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஈரானின் அணு ஆயுதங்களால் சராசரி அமெரிக்காவின் வாழ்வு பறிபோகப் போவதாக தன் மக்களை நம்ப வைத்தது. ராணுவ தீர்வு ஒன்றே வழி என கருத்து திணிப்பை நடத்தியது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் ராய்ட்டர் - ஜோக்பி நடத்திய கருத்துக் கணிப்பில் 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இணைந்து ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என கருத்து தெரிவிததுள்ளனர். ஈராக், ஜப்பான் ஆக்கிரமிப்பு களுக்கெதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று ஈரான் விஷயத்தில் நழுவுகின்றனர். யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் கூட அமெரிக்க அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பலியாகி விட்டன.
ஈரான் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இஸ்ரேல் - பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கு தரகனாக தன்னை முன்னிறுத்தி சமாதான தூதுவனாக அரிதாரமிடுவது மட்டுமல்லாமல், ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகளையே தயார் செய்து வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தின் ஊடகங்கள் எல்லாம் அமைதி தவழும் பூங்காவாக பலஸ்தீனம் மலரப் போகிறது என பயாஸ் கோப்பு காட்டிக் கொண்டிக்கும் வேளையில் சத்தமில்லாமல் மொத்தமாக ஈரானை விழுங்கப் போகிறது அமெரிக்கா. இந்த ஏகாதிபத்தியத்தின் யானைப் பசிக்கு ஈரான் ஒரு சோளப் பொறி மட்டுமே. இன்று ஈரான்......நாளை ....????
Thanks : Manisudar Tamil Daily
அன்பார்ந்த சகோதரர் அவர்களுக்கு,
நலம்.... நலத்திற்கு இறைஞ்சுகிறோம்...
வலைதளத்தில் உலா வரும்
தங்கள் கட்டுரைகள்...
அறிவுமுத்துகளை நாடி
முக்குளிப்பவர்களுக்கு நல்லதோர்
பொக்கிஷமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையிலும்
தங்கள் உழைப்பின் வியர்வைப்
பனித் துளிகள் மின்னுகின்றன.
சக மனிதனுக்காகப் போராடும்
தங்கள் கருத்துகள் உணர்ச்சிப்
பிழம்பாகப் பீறிடுகின்ற வகை
மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மனம் நிறைந்தும் இசைந்தும்
தங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்..
தங்கள் பணி மென்மேலும்
தொடரவும் உரிய பயன் அளிக்கவும்
வாழ்த்துகிறோம்.....
வாழ்க...... வளர்க...
நன்றி,
அன்பு,
சேமுமு.
prof_semumu@yahoo.com
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label பலஸ்தீனம். Show all posts

Thursday, September 9, 2010
Monday, August 16, 2010
பலஸ்தீனம் மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் ……வெ ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/
http://mudukulathur.com/?p=719
சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.
இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008ம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள்நுழைந்தனர்.
இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடைசியாக கடந்த மே மாதம் இவர்களின் படகுகள்மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது ‘மனித நேயம்’ என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ரூம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
காஸா மீனவர்கள்
நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொரு ளாதார சட்டம் பிரிவு 5ன்படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978க்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையி லான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் காசாஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
காஸாவின் எண்ணெய் வளம்
இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது. இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.
எரிவாயுதிட்டம்
27.09.2000 அன்று எரிவாயு எடுக்கும் திட்டம் காஸாவின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்கள் தாண்டி கடலிலே யாசர் அரபாத் அவர்களால் தொடங்கியும் வைக்கப்பட்டது. இந்த எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்பது குறித்து பி.ஜி. குரூப் நிறுவனம் அணுகியபோது, பலஸ்தீனத்திலிருந்து எரிவாயுவை வாங்கத் தமக்கு விருப்பமில்லை எனக் கூறி இஸ்ராயில் மறுத்துவிட்டது. எனவே அந்நிறுவனம் எகிப்துடன் பேசி முடிவு செய்து அதன்படி கடலுக் கடியில் குழாய்கள் அமைத்து, அதன் வழியாக எரிவாயுவை எகிப்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து இஸ்ரே லுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்தது. ஆனால், இஸ்ராயீல் அதற்கும் உடன்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்த விவகா ரத்தில் தலையிட்டு பி.ஜி. குரூப் நிறுவனம் இஸ்ரேலுக்கு நேரடியாக எரிவாயுவை அனுப்ப நிர்பந்தித்தார். அதற்கான பேச்சு வார்த்தை இஸ்ராயீ லுடன் நடத்த வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்தார். அதன்படி அந்நிறுவனம் இஸ்ரேலில் தன் அலுவலகத்தை திறந்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. கடைசிவரையிலும் இஸ்ரேல் இழுத்தடிக்கவே பி.ஜி. குரூப் நிறுவனம் தன் இஸ்ரேல் அலுவலகத்தை மூடிவிட்டது. பேச்சு வார்த்தையையும் நிறுத்திக் கொண்டது.
திட்டமிட்ட கலவரம்
இந்த சமயத்தில்தான் ஏரியல் ஷரோன் காட்சிக்கு வருகிறார். பாலஸ்தீனத்திடமிருந்து எரிபொருள் வாங்க முடியாது என சபதமிடுகிறார். 28.09.2000 அன்று ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்துக்கு யாசர் அரபாத் அவர்களின் எச்சரிக்கையையும் மீறிச் செல்கிறார். இந்துத்துவ மத வெறியாளர்களின் ரத யாத்திரை போல திட்டமிட்ட கலவரங்களை விதைக்கிறார். படுகொலைகள் அரங்கேறுகின்றன. நாடு முழுவதும் கலவரம். இதன் பலனாக 2001 பிப்ரவரியில் இஸ்ராயில் பிரதமராக ஷரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே காஸா முற்றுகை ஆரம்பமா னது. அத்தியாவசிய பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் காஸா மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இஸ்ராயீல் கடற்படையின் கப்பல்கள் ஆறு கடல் மைல் தொலைவிலேயே மீன் பிடி படகுகளைத் தாக்கின. கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்கள். 15 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்த னர். இந்த தாக்குதலுக்கு ஹாமாஸ் அமைப்போ அல்லது இஸ்ரேலின் பாதுகாப்போ காரணமல்ல. காஸா கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளம்தான் காரணம்.
எண்ணெய் திருட்டு
இதுதவிர காசாவின் வடக்கு கடல் பகுதியில் இஸ்ராயில் ஒரு எண்ணெய் கிணற்றுக்கான தளம் அமைத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் மூலம் 10,000 அடி முதல் 15,000 அடி வரை பூமிக்குள் சாய்வாக துளையிட்டு காஸாவின் எண்ணெய் வளத்தை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதுதான் அதன் திட்டம். குவைத் இது போலவே தன் நாட்டு எண்ணெய் வளங்களை திருடுவதாக ஈராக் புகார் கூறியது நாம் அறிந்ததே.
சர்வதேச நெருக்கடி
காசாவுக்கான உணவு, மருந்து பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியது, மீனவர்களைப் படுகொலை செய்தது போன்ற இஸ்ராயீலின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டன. பன்னாட்டு நெருக்குதல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தன்னுடைய தூதராக கேதரின் பெர்ட்டினி அவர்களை காசாவுக்கு அனுப்பி வைத்தார். அங்குள்ள மனிதாபிமான தேவைகளை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டார். 2002ரூம் வருடம் ஆகஸ்ட் மாதம் காசாவுக்கு வந்து ஆய்வு செய்த கேதரின் பெர்ட்டினி விரிவான அறிக்கையையும் தன் பரிந்துரைகளையும் ஐ.நா. பொதுச் செயலரிடம் சமர்ப்பித்தார். அந்த பரிந்துரைகளில், காஸா மீனவர்கள் 12 கடல் மைல் எல்லை வரையிலாவது மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், 3 கடல் மைல் தொலைவை கடக்கும்போதே மீனவர்களை இஸ்ராயீல் கடற்படை தாக்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ராயீல் காஸா மீதான தன் பிடியை விலக்கிக் கொள்வதாக 12.09.2005ல் அறிவித்திருந்தது. ஆனால், வான்வழி, தரைவழி, கடல் வழி என காஸாவின் அத்தனை வழிகளையும் இஸ்ரேல் அடைத்துக் கொண்டு நின்றது. ஆதிக்கம் செலுத்தியது.
ஹமாஸ் வெற்றியும் ராணுவ ஊடுறுவலும்
25.1.2006ல் காஸா சட்டமன்ற தேர்தல். மொத்தம் 132 இடங்களில் 76 இடங்களை கைப்பற்றிய ஹமாஸ் இயக்கம் காஸாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உடனே இஸ்ராயீலும், அமெரிக்காவும் ஹமாஸ் இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கம்’ என பிரகடனப்படுத்தின. காஸாவின் அனத்து எல்லைகளையும் இஸ்ரேல் இராணுவம் மூடிவிட்டது. காசாவுக்குள் உணவு மருந்து பொருட்கள் எதுவுமே நுழைய முடியாமல் போனது. காஸா நகர மக்கள் பசி, பஞ்சம், பட்டினியாலும், நோய்களாலும் நூற்றுக்கணக்கில் மாண்டனர்.
மீண்டும் 2008ரூல் இஸ்ராயீல் பி.ஜி. குரூப் எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதே வருடம் ஜூன் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் தன் இராணுவ துருப்புகளை காசாவுக்குள் ரகசியமாக ஊடுருவ உத்தரவிட்டார். 19.06.08ல் இஸ்ராயீலுக்கும் ஹமாஸுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உணவு, மருந்து பொருட்கள் ஒரு நாளைக்கு 900 டிரக்குகள் காசா நகருக்குள் சென்று கொண்டிருந்த நிலை மாறி 70 டிரக்குகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நேரம் அது. இந்த ஒப்பந்தம் மூலம் மீண்டும் பழைய நிலை திரும்பும் என எதிர்பார்த்த ஹமாஸ் இயக் கத்துக்கு பலத்த ஏமாற்றம். 70 டிரக்குகள் வெறும் 90 டிரக்குகளாக உயர்ந்ததுதான் பலன். எனவே பழையபடி சுரங்கப் பாதை மூலமே அத்தியாவசிய பொருட்களை காஸா நகருக்குள் கொண்டு வர ஹமாஸ் இயக்கம் முடிவு செய்தது. இஸ்ராயீல் ராணுவம் இந்த சுரங்க பாதையை தேடுவதாகக்கூறி 6 பலஸ்தீனர்களை படுகொலை செய்தது. 5.11.2008ல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. உடனே ஹமாஸ் பதில் தாக்குதல் தொடுத்தது. 5 வார காலத்தில் சுமார் 237 ராக்கெட்டுகளை இஸ்ராயீல்மீது ஏவியது ஹமாஸ். காஸாவுக்குள்ளான இஸ்ராயீலின் ஊடுருவலுக்கு இந்த தாக்குதல்கள் நியாயம் கற்பித்துவிட்டன.
எகிப்து நீதிமன்றம்
இந்த நிலையில் இஸ்ரேல் எகிப்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. சுமார் 15 வருட காலத்திற்கு 1.7 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்க 2005ல் எகிப்து ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் எகிப்து பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாததால் சட்டப்படி செல்லாது என எகிப்து நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்து வந்த எகிப்து நீதிமன்றம் 18.11.2008ல் இந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டது. எகிப்து எரிவாயுவை வாங்கும் இஸ்ரேலின் திட்டம் நின்று போனதால் எவ்வாறேனும் காஸாவின் எரிவாயு வளத்தை அடைந்தே தீரவேண்டும் என இஸ்ரேல் முடிவு செய்தது. எகிப்து நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே இஸ்ராயீலின் கப்பற்படை கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கின காஸா ஜெரிக்கோ ஒப்பந்தபடி 20 கடல் மைல் தொலைவு வரை காஸா மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்றிருந்தாலும் 7 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருந்த காஸா மீனவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது. மீன்பிடி படகுகள் நாசமாக்கப்பட்டன. மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.
ஆபரேஷன் கேஸ்ட் லீட்
கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ‘‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’’ என்ற பெயரில் காஸா நகரத்தின் மீதே கடுமையான தாக்குதலை 27.12.08ல் தொடங்கியது. காஸா முழுவதும் குண்டு மழை பொழிந்தது. மீண்டும் சர்வதேச சமூகம் இஸ்ராயீலை கண்டித்தது. நெருக்கடிக்குள்ளான இஸ்ரேல் வேறு வழியின்றி 18.1.09ல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், காஸாவின் கடல் பகுதியை தன் ஆதிக்கத்திலேயே இஸ்ரேல் வைத்துள்ளது. 24.1.09ல் காசா கடற்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஒரு தந்தையும் மகளும் இஸ்ராயீல் கப்பற் படையால் சுடப்பட்டனர். கடற்கரைக்குக்கூட யாரும் வரமுடியாத நிலையை இஸ்ராயீல் ருவாக்கியது. இறுதி யாக 14.02.09 அன்று காஸா கடல் பகுதி முழுமையாக தடை செய் யப்பட்ட பகுதியாக இஸ்ராயீல் அறிவித்து விட்டது.
ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் தொலைவு வரை ‘கடல் சார் சிறப்பு பொருளாதார மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து இயற்கை பொருளாதார வளங்களையும் அந்த நாடு யாருடைய தலையீடுமின்றி அனுபவிக்கலாம் என ஐ.நா.வின் ‘கடல் சார் பொருளாதார சட்டம்’ கூறுகிறது. காசாவின் கடற் கரையிலிருந்து 10 முதல் 15 கடல் மைல் தொலைவுக்குள்ளாகவே எண்ணெய் படுகைகளும் அதில் இயற்கை எரிவாயு ஏராளமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸா இன்னொரு துபை என்ற அளவிலே மாற்றம் பெறுவதற்கு இந்த எண்ணெய் வளம் உதவும். இந்த இயற்கை வளத்தை திருடுவதற் காகத்தான் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலையும், முற்றுகையையும் தொடர்கிறது. உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல ஆயிரம் மக்களை படுகொலை செய்து பழக்கப்பட்டது அமெரிக்கா. அதன் ஏவல் நாய் இஸ்ராயீலும் அதே வழியில்...

Subscribe to:
Posts (Atom)