
ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் கேட்டால், பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும் என சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் குலாம் மஹ்முது பனாத்வாலா அவர்களுக்கு இரங்கல் கூட்டம் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மணிமாடத்தில் அமைந்துள்ள அரசியல் சாசன அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச்செயலாளருமான இ.அகமது தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்தீகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சகாபுதீன், டெல்லி பத்தேப+ர் மஸ்ஜித் இமாம் மௌலானா முஃப்தி முகர்ரம், ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் மௌலானா ஷபீர் முனீஸ், அஹ்லே ஹதீஸ் ஜமாஅததி;ன் சார்பில் மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி, நாடாளுமன்ற மக்களவை செயலாளர் பி.டி.ஆச்சாரி, டெல்லி பிரதேஷ் முஸ்லிம் லீக் தலைவர் மர்கூப் ஹூசைன் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் பேராசிரியர் ரியாஸ் உமர், ~இக்னோ~ அமைப்பின் துணைவேந்தர் டாக்டர் பஷீர் அகமத்கான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் பனாத்வாலா ஸாஹிபின் தன்னலமற்ற சமூக சேவையையும், சிறுபான்மை சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், நாடாளுமன்றத்தில் அவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர்.
மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது, கடந்த ஒருவாரமாக நான் தனிமையில் வாடுவதாக உணருகிறேன்... மகத்தான தலைவர் பனாத்வாலா ஸாஹிப் என குறிப்பிட்டார்.
மத்தியகனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியான பனாத்வாலாவின் தியாகங்கள் போற்றத்தக்கவை என புகழஞ்சலி செலுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
பனாத்வாலா ஸாஹிப் என்னோடு கொண்டிருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்குரியது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நானும், அவரும் ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டோம்... சட்டமன்றத்திலேயே அவரது செயல்பாடு சிறப்பானது.
அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது நான் சபாநாயகராக இருந்தேன். அவரை மதிப்பிற்குரிய ஒரு நாடாளுமன்றவாதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும்@ ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் யாராவது கேட்டால் தயக்கமின்றி பதில் சொல்வேன் பனாத்வாலாவைப் போல் இருக்க வேண்டுமென்று! அந்த அளவிற்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் அவர்...
இவ்வாறு சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டார்.
இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரின் மறு உலக நன்மைக்கு பிராத்தனை செய்யப்பட்டது.
http://www.muslimleaguetn.com/news.asp?id=84
http://wwwlalpetcom-deen.blogspot.com/2008/07/blog-post_04.html