Thursday, July 3, 2008

குவைத்தில் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008

கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.

அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.

தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.

சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.

தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்



குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!



குவைத் 28.06.2008

நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).

ktic.kuwait@gmail.com