Friday, July 4, 2008

சவுதி அரேபிய தமிழக பிரமுகருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது


சவுதி அரேபிய தமிழக பிரமுகருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் தமிழகப் பிரமுகர் அப்துல் மாலிக். இவரது பல்வேறு சமுதாயப் பணிகளைப் பாராட்டி கடந்த ஜுன் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் மணிவிழா மாநாட்டில் சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது, மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் ஜி.எம். பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

அப்துல் மாலிக் அவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன் ஜித்தா தமிழ்ச் சங்கத்தை நிறுவி இன்றளவும் அதன் தலைவர்.அண்மையில் சவுதியில் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ‘சவுதி தமிழ்ச் சங்கம்' எனும் ஒரே அமைப்பாக்கியுள்ளார். முதுநிலைப்பட்டத்துடன் தொழில் மேலாண்மையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 25 ஆண்டுகளாக விளம்பரத்துறையில் வல்லுநராக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். வழிகாட்டி நூல்கள் பல வெளியிட்டவர். கல்லூரியில் மாணவர் சங்க முதல் பொதுச்செயலாளர், தமிழ் மன்றச் செயலாளர் பதவிகளை வகித்தவர். கல்லூரியில் விடுதி இதழ் வெளியிட்டவர்.

ஜித்தாவில் உள்ள சர்வதேசப்பள்ளிக்குழுவின் தேர்வு செய்யப்பட்ட முதல் உறுப்பினர். இவரது பதவிக்காலத்தில் தான் தமிழ் விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சவுதி அரேபியாவில் உள்ள உயர்மட்டக்குழுவின் பெருமைக்குரிய உறுப்பினராய் பணியாற்றும் முதல் இந்தியத் தமிழர் என்கிற கவுரமும் இவரைச் சாரும். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சவுதி கல்வித் துறையாலும், இந்தியத் தூதரகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட பத்து இந்தியப் பள்ளிகள் பல இடங்களில் 50,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு தரமிக்க கல்வியை வழங்குகின்றன.

இந்திய யாத்ரீகர்கள் நல அமைப்பின் நிறுவனர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர், சிறுகதை எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்.

மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பல சமூக மற்றும் கல்வி நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தகவல் : அஹ்மது இம்தியாஸ்


Award for Indian community leader

Indian Union Muslim League recently celebrated its Platinum Jubilee celebrations in Chennai, India. The party recognized outstanding community members and awarded mementoes for their distinguished services. Minister of State for External Affairs E. Ahamed and Minister Rajaa, President of IUML (Late) Banathwala, Vice President Professor Kader Mohideen and Tamil Nadu Cabinet ministers, MPs and MLAs from all parties attended the ceremony.
On that occasion, Abdul Malik was given the title ‘Samudaya Oli Vilakku’ (Torch Bearer of the Community) in appreciation of the community service rendered by non-party cadres
Abdul Malik is an advertising and printing specialist working in the Kingdom for the past 25 years. He is one of the pioneers in introducing directory concept here.
He was the first elected committee member, signatory and acting chairman of International Indian School Jeddah and is currently a member of the higher board, a higher level body to frame and facilitate the functioning of 10 Indian schools affiliated by the Saudi Arabian Ministry of Education and Embassy of India. – SG

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2008062910444


http://www.yahind.com/news/directory.php?id=1359