Sunday, July 6, 2008

பேர்ணாம்பட்டு சம்பவம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

பேர்ணாம்பட்டு சம்பவம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

வாணியம்பாடி, ஜூலை 5: பேர்ணாம்பட்டில் மின்தடையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளதற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.டி. நிஸôர் அகமது கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பேர்ணாம்பட்டு பகுதியில் 3 தினங்களாக அடிக்கடி ஏற்படும் மின் தடையை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் சில விஷமிகள் கல்வீச்சு, ஆசிட் வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய வன்முறைகளை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் ஆதரிக்காது. மக்கள் பிரச்னைக்காக போராடுவதாகக் கூறி வன்முறையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறையினர் எடுக்க வேண்டும்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பெயரை சொல்லி வன்முறை கும்பலோடு எவரேனும் தொடர்பு வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.