Thursday, August 26, 2010

திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்



திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்
சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்றனர்

திருநெல்வேலி, ஆக.26‍

திருநெல்வேலி மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், நெல்லை ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி ஆகியவை இணைந்து இஃப்தார் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தின. இதில் சமுதாயப் பிரமுகர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு ஜும்ஆ பள்ளியில் நடை பெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகரும், ஷிபா மருத்துவமனை அதிபரு மான டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ். கோதர் முகைதீன், மாவட்ட துணைத் தலை வர் வி.எஸ். டி. சம்சுல் ஆலம், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி, முஸ்லிம் அனாதை நிலைய செய லாளர் எம். கே.எம். கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா வரவேற்றுப் பேசினார். மாநில அமைப் புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில மாணவர் அணியின் அமைப்பாளரும், மாவட் டச் செயலாளருமான எல். கே.எஸ். மீரான் முகைதீன், மேலப்பாளையம் உஸ்மா னியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லானா பி.ஏ. ஹாஜா மொய்தீன் ஹஸ ரத், எஸ்.எம்.எஸ். ஹபீப் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நெல்லை லாட்ஜ் அச துல்லா, கோஸ் கனி, கலீல், எம்.கே.எம். முஹம்மது நாசர், அப்துல் கரீம், மஹபூப் அலி, மாவட்டச்செயலாளர் கடையநல்லூர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்ட அமைப்புச் செயலாளர் கவிஞர் வீரை ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர் எம்.சி., அம்பை அமா னுல்லா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான சமுதாயப் பிரமுகர்கள் பல நூற்றுக்கணக்கான ஜமா அத்தார்கள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திருநெல் வேலி சுற்று வட்டார பிரை மரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை சந்திப்பு ஜும்ஆ பள்ளி இமாம் முஹம்மது இப்ரா ஹீம் ஹஸரத் கிராஅத் ஓதினார். பள்ளிவாசல் செயலாளர் வரிசைமைதீன் நன்றி கூறினார்.

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி


http://muslimleaguetn.com

http://mudukulathur.com



தமிழக அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரை வில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு வட்டாரத்தின் இந்த தகவலானது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசின் மற்றொரு ரமளான் பரிசாக அமைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கான சட்ட முன் வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு 2009 ஜூலை 29ம் தேதி விவாதத்திற்கு வந்தது. சட்ட முன்வடிவில் தெரி விக்கப்பட்டிருந்த விவரங் கள் முஸ்லிம்களின் தனி யார் சட்டத்திற்கு மாற்ற மாக அமைந்திருந்ததுடன் ஷரீஅத் சட்டத்திற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்ப தாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சிகள்

அதன் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டபோதே இந்திய யூனிய‌ன் முஸ்லிம் லீக் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
மேலும், இது தொடர் பாக ஆலோசனைக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட் டில் 2009 ஜூலை 7ம் தேதி தமிழ்சாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலை மையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னி லையில் முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகை யில் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் தமிழக அரசின் இந்த சட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய அரசை கேட்டு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஜூலை 21ம் தேதி சட்டமுன்வடிவு குறித்த விவாதத்தில் பங் கேற்று பேசிய அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி ஹெச். அப்துல் பாசித் ஆகி யோர் வெட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.

தமிழக சடட அமைச்சர் துரை முருகன் இந்த சட் டத்தின் மூலமாக முஸ்லிம் களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்று உறு தியளித்ததுடன் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய இரண்டு வருட காலம் அவகாசம் அளிக் கப்படும் என்றும் உறுதிய ளித்திருந்தார். இதனடிப் படையில் வெட்டுத் தீர்மா னங்கள் திரும்பப் பெறப் பட்டன.
இந்த சட்டம் தொடர் பாக முஸ்லிம் சமுதாயத் தில் குறிப்பாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தீர்மானங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரிவித்து வந்தது.

முதல்வர் கலைஞர் அறிவிப்பு

கடந்த 2010 பிப்ரவரி 3ம் தேதி பேரறிஞர் அண்ணா வின் நினைவு தினத்தை யொட்டி செய்தியாளர் களுக்கு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.

அப்போது, தமிழக அரசின் திருமண பதிவு சட்டம் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி யினை மணிச்சுடர் நிருபர் ஹமீது முதல்வர் கலைஞரி டம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாக வும் இந்த சட்டத்தால் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு பாதிப்பு இருக் கிறதா என்பது குறித்து சிறுபான்மை சமுதாய அமைப்புகளின் தலைவர் களுடன் கலந்து ஆலோ சனை நடத்த உள்ளேன் என்று அறிவித்தார்.

அதன்படி, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் சிறுபான்மை சமூக அமைப்புகளின் தலைவர் களை அழைத்து இச்சட் டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்-பிரதிநிதிகள் பலமுறை கூடி இச்சட்டத் தில் செய்யவேண்டிய திருத் தங்கள் குறித்து முன்வரைவு ஒன்றினை தயார் செய்து அரசு துறைக்கு அனுப்பினர்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சட்டத்துறை அமைச்சருடனும் பதிவுத் துறை அதிகாரிகளுடனும் இச்சட்ட திருத்தம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன்விளைவாக தமி ழக அரசின் திருமண கட் டாய பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதற் கான அரசாணை இன்னும் ஓரிருநாளில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
மற்றொரு ரமளான் பரிசு

முதல்வர் கலைஞர் தலைமையில் 5வது முறையாக தி.மு.க. அரசு ஆட்சி யமைத்ததும் முஸ்லிம் களின் நீண்ட நாள் கோரிக் கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். அப்போது அது ரமளான் மாதமாக இருந்ததால் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளித்த ரமளான் பரிசாக அதனை முஸ்லிம்கள் ஏற்று போற்றி மகிழ்ந்தனர்.

தற்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதா யத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் உரிய திருத் தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்படக் கூடிய நிலையும் இந்த ரமளான் மாதத்தில் உருவாகியுள்ள தால் முதல்வர் கலைஞரின் மற்றொரு ரமளான் பரிசாக முஸ்லிம்கள் இதனை கருதுகின்றனர்

முஸ்லிம் லீக் தொடர் முயற்சிக்கு வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்திய உடனேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது

முஸ்லிம் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து முறையிட்டது.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த தாய்ச்சபை தொய்வின்றி தனது கடமையைச் செய்தது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணை முதல்வரை கடந்த 23-ம் தேதி சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினார்.

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., கடந்த இரண்டு மூன்று தினங் களாக தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
இவைகளின் பலனாக தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப் பிக்கப்படுகிறது.

ஆரவாரம் - ஆர்ப்பாட்டமற்ற அமைதி வழியில் காரியம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Thursday, August 19, 2010

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடு அறுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில துணை அமைப்பாளரும், காயிதெ மில்லத் உடல் உழைப்பு தொழி லாளர் நலச்சங்க செயலாளருமான மௌலவி ஏ.ராஜா ஹுசைன் தாவூதி தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாநகராட்சி சார்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரைஅனுப்பானடியில் கடந்த வாரம் திறக் கப்பட்டுள்ளது. இங்கு ஆடுகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து அது மயங்கிய பின் ஆடுகள் அறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதனையறிந்து மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டு செய்முறை விளக்கம் பெற்றனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை.

இதுபோன்று அறுக்கக் கூடாது எனவும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள முறைபடியே அறுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.

Monday, August 16, 2010

பலஸ்தீனம் மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் ……வெ ஜீவகிரிதரன்

பலஸ்தீனம் மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் ……வெ ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/

http://mudukulathur.com/?p=719


சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.

இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008ம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள்நுழைந்தனர்.

இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடைசியாக கடந்த மே மாதம் இவர்களின் படகுகள்மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது ‘மனித நேயம்’ என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ரூம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
காஸா மீனவர்கள்

நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொரு ளாதார சட்டம் பிரிவு 5ன்படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978க்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையி லான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் காசாஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காஸாவின் எண்ணெய் வளம்

இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது. இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.

எரிவாயுதிட்டம்

27.09.2000 அன்று எரிவாயு எடுக்கும் திட்டம் காஸாவின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்கள் தாண்டி கடலிலே யாசர் அரபாத் அவர்களால் தொடங்கியும் வைக்கப்பட்டது. இந்த எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்பது குறித்து பி.ஜி. குரூப் நிறுவனம் அணுகியபோது, பலஸ்தீனத்திலிருந்து எரிவாயுவை வாங்கத் தமக்கு விருப்பமில்லை எனக் கூறி இஸ்ராயில் மறுத்துவிட்டது. எனவே அந்நிறுவனம் எகிப்துடன் பேசி முடிவு செய்து அதன்படி கடலுக் கடியில் குழாய்கள் அமைத்து, அதன் வழியாக எரிவாயுவை எகிப்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து இஸ்ரே லுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்தது. ஆனால், இஸ்ராயீல் அதற்கும் உடன்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்த விவகா ரத்தில் தலையிட்டு பி.ஜி. குரூப் நிறுவனம் இஸ்ரேலுக்கு நேரடியாக எரிவாயுவை அனுப்ப நிர்பந்தித்தார். அதற்கான பேச்சு வார்த்தை இஸ்ராயீ லுடன் நடத்த வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்தார். அதன்படி அந்நிறுவனம் இஸ்ரேலில் தன் அலுவலகத்தை திறந்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. கடைசிவரையிலும் இஸ்ரேல் இழுத்தடிக்கவே பி.ஜி. குரூப் நிறுவனம் தன் இஸ்ரேல் அலுவலகத்தை மூடிவிட்டது. பேச்சு வார்த்தையையும் நிறுத்திக் கொண்டது.
திட்டமிட்ட கலவரம்
இந்த சமயத்தில்தான் ஏரியல் ஷரோன் காட்சிக்கு வருகிறார். பாலஸ்தீனத்திடமிருந்து எரிபொருள் வாங்க முடியாது என சபதமிடுகிறார். 28.09.2000 அன்று ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்துக்கு யாசர் அரபாத் அவர்களின் எச்சரிக்கையையும் மீறிச் செல்கிறார். இந்துத்துவ மத வெறியாளர்களின் ரத யாத்திரை போல திட்டமிட்ட கலவரங்களை விதைக்கிறார். படுகொலைகள் அரங்கேறுகின்றன. நாடு முழுவதும் கலவரம். இதன் பலனாக 2001 பிப்ரவரியில் இஸ்ராயில் பிரதமராக ஷரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே காஸா முற்றுகை ஆரம்பமா னது. அத்தியாவசிய பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் காஸா மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இஸ்ராயீல் கடற்படையின் கப்பல்கள் ஆறு கடல் மைல் தொலைவிலேயே மீன் பிடி படகுகளைத் தாக்கின. கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்கள். 15 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்த னர். இந்த தாக்குதலுக்கு ஹாமாஸ் அமைப்போ அல்லது இஸ்ரேலின் பாதுகாப்போ காரணமல்ல. காஸா கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளம்தான் காரணம்.

எண்ணெய் திருட்டு
இதுதவிர காசாவின் வடக்கு கடல் பகுதியில் இஸ்ராயில் ஒரு எண்ணெய் கிணற்றுக்கான தளம் அமைத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் மூலம் 10,000 அடி முதல் 15,000 அடி வரை பூமிக்குள் சாய்வாக துளையிட்டு காஸாவின் எண்ணெய் வளத்தை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதுதான் அதன் திட்டம். குவைத் இது போலவே தன் நாட்டு எண்ணெய் வளங்களை திருடுவதாக ஈராக் புகார் கூறியது நாம் அறிந்ததே.
சர்வதேச நெருக்கடி
காசாவுக்கான உணவு, மருந்து பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியது, மீனவர்களைப் படுகொலை செய்தது போன்ற இஸ்ராயீலின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டன. பன்னாட்டு நெருக்குதல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தன்னுடைய தூதராக கேதரின் பெர்ட்டினி அவர்களை காசாவுக்கு அனுப்பி வைத்தார். அங்குள்ள மனிதாபிமான தேவைகளை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டார். 2002ரூம் வருடம் ஆகஸ்ட் மாதம் காசாவுக்கு வந்து ஆய்வு செய்த கேதரின் பெர்ட்டினி விரிவான அறிக்கையையும் தன் பரிந்துரைகளையும் ஐ.நா. பொதுச் செயலரிடம் சமர்ப்பித்தார். அந்த பரிந்துரைகளில், காஸா மீனவர்கள் 12 கடல் மைல் எல்லை வரையிலாவது மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், 3 கடல் மைல் தொலைவை கடக்கும்போதே மீனவர்களை இஸ்ராயீல் கடற்படை தாக்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ராயீல் காஸா மீதான தன் பிடியை விலக்கிக் கொள்வதாக 12.09.2005ல் அறிவித்திருந்தது. ஆனால், வான்வழி, தரைவழி, கடல் வழி என காஸாவின் அத்தனை வழிகளையும் இஸ்ரேல் அடைத்துக் கொண்டு நின்றது. ஆதிக்கம் செலுத்தியது.
ஹமாஸ் வெற்றியும் ராணுவ ஊடுறுவலும்
25.1.2006ல் காஸா சட்டமன்ற தேர்தல். மொத்தம் 132 இடங்களில் 76 இடங்களை கைப்பற்றிய ஹமாஸ் இயக்கம் காஸாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உடனே இஸ்ராயீலும், அமெரிக்காவும் ஹமாஸ் இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கம்’ என பிரகடனப்படுத்தின. காஸாவின் அனத்து எல்லைகளையும் இஸ்ரேல் இராணுவம் மூடிவிட்டது. காசாவுக்குள் உணவு மருந்து பொருட்கள் எதுவுமே நுழைய முடியாமல் போனது. காஸா நகர மக்கள் பசி, பஞ்சம், பட்டினியாலும், நோய்களாலும் நூற்றுக்கணக்கில் மாண்டனர்.
மீண்டும் 2008ரூல் இஸ்ராயீல் பி.ஜி. குரூப் எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதே வருடம் ஜூன் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் தன் இராணுவ துருப்புகளை காசாவுக்குள் ரகசியமாக ஊடுருவ உத்தரவிட்டார். 19.06.08ல் இஸ்ராயீலுக்கும் ஹமாஸுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உணவு, மருந்து பொருட்கள் ஒரு நாளைக்கு 900 டிரக்குகள் காசா நகருக்குள் சென்று கொண்டிருந்த நிலை மாறி 70 டிரக்குகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நேரம் அது. இந்த ஒப்பந்தம் மூலம் மீண்டும் பழைய நிலை திரும்பும் என எதிர்பார்த்த ஹமாஸ் இயக் கத்துக்கு பலத்த ஏமாற்றம். 70 டிரக்குகள் வெறும் 90 டிரக்குகளாக உயர்ந்ததுதான் பலன். எனவே பழையபடி சுரங்கப் பாதை மூலமே அத்தியாவசிய பொருட்களை காஸா நகருக்குள் கொண்டு வர ஹமாஸ் இயக்கம் முடிவு செய்தது. இஸ்ராயீல் ராணுவம் இந்த சுரங்க பாதையை தேடுவதாகக்கூறி 6 பலஸ்தீனர்களை படுகொலை செய்தது. 5.11.2008ல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. உடனே ஹமாஸ் பதில் தாக்குதல் தொடுத்தது. 5 வார காலத்தில் சுமார் 237 ராக்கெட்டுகளை இஸ்ராயீல்மீது ஏவியது ஹமாஸ். காஸாவுக்குள்ளான இஸ்ராயீலின் ஊடுருவலுக்கு இந்த தாக்குதல்கள் நியாயம் கற்பித்துவிட்டன.
எகிப்து நீதிமன்றம்
இந்த நிலையில் இஸ்ரேல் எகிப்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. சுமார் 15 வருட காலத்திற்கு 1.7 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்க 2005ல் எகிப்து ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் எகிப்து பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாததால் சட்டப்படி செல்லாது என எகிப்து நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்து வந்த எகிப்து நீதிமன்றம் 18.11.2008ல் இந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டது. எகிப்து எரிவாயுவை வாங்கும் இஸ்ரேலின் திட்டம் நின்று போனதால் எவ்வாறேனும் காஸாவின் எரிவாயு வளத்தை அடைந்தே தீரவேண்டும் என இஸ்ரேல் முடிவு செய்தது. எகிப்து நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே இஸ்ராயீலின் கப்பற்படை கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கின காஸா ஜெரிக்கோ ஒப்பந்தபடி 20 கடல் மைல் தொலைவு வரை காஸா மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்றிருந்தாலும் 7 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருந்த காஸா மீனவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது. மீன்பிடி படகுகள் நாசமாக்கப்பட்டன. மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.

ஆபரேஷன் கேஸ்ட் லீட்
கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ‘‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’’ என்ற பெயரில் காஸா நகரத்தின் மீதே கடுமையான தாக்குதலை 27.12.08ல் தொடங்கியது. காஸா முழுவதும் குண்டு மழை பொழிந்தது. மீண்டும் சர்வதேச சமூகம் இஸ்ராயீலை கண்டித்தது. நெருக்கடிக்குள்ளான இஸ்ரேல் வேறு வழியின்றி 18.1.09ல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், காஸாவின் கடல் பகுதியை தன் ஆதிக்கத்திலேயே இஸ்ரேல் வைத்துள்ளது. 24.1.09ல் காசா கடற்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஒரு தந்தையும் மகளும் இஸ்ராயீல் கப்பற் படையால் சுடப்பட்டனர். கடற்கரைக்குக்கூட யாரும் வரமுடியாத நிலையை இஸ்ராயீல் ருவாக்கியது. இறுதி யாக 14.02.09 அன்று காஸா கடல் பகுதி முழுமையாக தடை செய் யப்பட்ட பகுதியாக இஸ்ராயீல் அறிவித்து விட்டது.
ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் தொலைவு வரை ‘கடல் சார் சிறப்பு பொருளாதார மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து இயற்கை பொருளாதார வளங்களையும் அந்த நாடு யாருடைய தலையீடுமின்றி அனுபவிக்கலாம் என ஐ.நா.வின் ‘கடல் சார் பொருளாதார சட்டம்’ கூறுகிறது. காசாவின் கடற் கரையிலிருந்து 10 முதல் 15 கடல் மைல் தொலைவுக்குள்ளாகவே எண்ணெய் படுகைகளும் அதில் இயற்கை எரிவாயு ஏராளமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸா இன்னொரு துபை என்ற அளவிலே மாற்றம் பெறுவதற்கு இந்த எண்ணெய் வளம் உதவும். இந்த இயற்கை வளத்தை திருடுவதற் காகத்தான் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலையும், முற்றுகையையும் தொடர்கிறது. உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல ஆயிரம் மக்களை படுகொலை செய்து பழக்கப்பட்டது அமெரிக்கா. அதன் ஏவல் நாய் இஸ்ராயீலும் அதே வழியில்...

Thursday, August 12, 2010

உணர்வில் தெளிவு - ஈமானில் உறுதி|| - பிறைமேடை தலையங்கம் : ஆகஸ்ட் 1-16

உணர்வில் தெளிவு - ஈமானில் உறுதி|| - பிறைமேடை தலையங்கம் : ஆகஸ்ட் 1-16

அன்புத் தம்பிக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!
நெடிய சரிதையின் தொடர்ச்சி@

ஆம்@ நம் பேரியக்கமாம் முஸ்லிம் லீக் புதுப் பொலிவோடும் வலிவோடும் சிறந்து விளங்க அவ்வப்போது சில மாற்றங்கள் தேவைதான். இம்மாற்றங்களும் ஆங்காங்கே நிர்வாகிகள் அமையப் பெறுவதில் காணுகிறபோது ஒரு வகையான உற்சாகம். இந்த உற்சாகமும் உத்வேகமும் நம் எல்லோர் மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.
தமிழ்நாடு முழுவதும் பிரைமரி, நகர தேர்தல்கள் முடிவுற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்களும் நடைபெற்று இன்னும் ஒரு சில மாவட்டங்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்ற நிலையில் இருக்கிறோம். தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் அனுபவமிக்க வழிகாட்டுதலில் நமது இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் பொதுச் செயலாளர் அப+பக்கர் அவர்களும், தலைமை நிலையத்தின் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ஆங்காங்கே மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர். அதற்கு முன்னரே அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் கிராம, நகர, மாநகர வார்டு கிளை பிரைமரி தேர்தல்கள் செவ்வனே நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வரும் நம் தாய்ச்சபையில் இந்த முறை ஒரு புதிய பரிணாம மாற்றம் இருப்பதை யாரும் மறுக்கவியலாது.

வயதின் மோச்சத்தால் உடல் நலிவு கண்டவர்கள் இளையவர்களுக்கு வழி தந்திருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையிலும் உணர்வால் குறை காணப்பட இயலாதவர்கள். அந்தந்த பகுதிகளில் சமுதாய மக்களின் பார்வையில் மரியாதை கொண்டவர்கள்@ மூத்தவர்கள். இவர்களை தாய்ச்சபை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கச் செய்வது என்பது மரியாதைக் குறைவை ஏற்படுத்திவிடும் என்று நினைத்துதான் பல பகுதிகளில் நிர்வாகிகள் மாற்றம் காணாது தொடர்ந்து வந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அண்மையில் நடைபெற்று முடிந்த நிர்வாகத் தேர்தல் மூலம் இளைஞர்களை முன்னிறுத்தியிருப்பதைப் பல நகரங்களிலும், பல மாவட்டங்களிலும் காண முடிகிறது. வயதில் மூத்த முன்னாள் நிர்வாகிகள் பலர் இன்றைய நிர்வாகத்திலும் கௌரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தாய்ச்சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்தக்கூடிய வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்நிலையில் நாம் நினைத்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமற்போனதே என்றுகூட நம்மில் சிலர் ஆங்காங்கே நினைக்கலாம். ஜனநாயகப் பார்வையில் இந்த நினைப்பு சகஜமான ஒன்று. இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், நிர்வாகிகளாகத் தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று எண்ணிய சிலர்கூட மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமலும் போனதுண்டு. எது எப்படியானாலும், தாய்ச்சபை முஸ்லிம் லீக் வளர வேண்டும்@ அது வளர்ந்தால் நாம் வாழ முடியும்@ அதில்தான் நம்முடைய சமூக வாழ்வும், அரசியல் அந்தஸ்தும், மரியாதைக்குரிய தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்களுக்கு மாறுபட்ட எந்த எண்ணமும் ஏற்படாது. காலம் காலமாகத் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நமக்கு ஊட்டிய உணர்வு என்பது சுயநலத்திற்கும் சுய கவுரவ கண்ணோட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. அந்த உணர்வில் தெளிவாக இருப்பவர்கள் நடக்கவிருக்கிற தேர்தல்களிலும் விருப்பு வெறுப்பு என்று பாகுபடுத்தாமலும் இனிப்பு, துவர்ப்பு என்று வேறுபடுத்தாமலும் தாய்ச்சபை வளர்ச்சி ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்றும், இதனை இழிவுபடுத்தி கீழான விமர்சனம் செய்வோருக்கு முன்னால் நெஞ்சு நிமிர்ந்து நேரிய நெறிமுறை தவறா உண்மை முஸ்லிம் என்றும் பறைசாற்ற பிறைக் கொடி நெஞ்சே!
உன் சீரிய பணி தொடரட்டும்,
உன் நேரிய வழி பரவட்டும்@

தலைமைக்குக் கட்டுப்படும் தீன் நெறி உன்னில் என்றும் மிளிரட்டும்.

- எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
ஆசிரியர்

Saturday, August 7, 2010

முனீரே மில்லத் பேராசிரியர் பெருந்தகை..............

முனீரே மில்லத் பேராசிரியர் பெருந்தகை
K.M. காதர் முகையதீன் M.A., EX M.P.
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

கோவை செந்தமிழ் மாநாட்டு தங்களின் பேருரை வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
தமிழகத்தில் முஸ்லிம் சிறு குழந்தைகள் பள்ளிவாசலில் நடைபெறும் குர்ஆன் மதரஸாவில் படிப்பதற்காக அரபுத்தமிழில் துஃகபத்துல் அத்பால், என்ற சிறுநூல் கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷாவால் இயற்றப்பட்டதாகும்.

சிம்னு ஸுப்யான் என்ற அரபுத்தமிழ் கிதாபு எல்லா குர்ஆன் மதரஸாக்களிலும் குழந்தைகள் படிக்கின்றன. ரபாத் மாநாட்டுக்கு சிராஜுல் மில்லத் அப்துல் சமது அண்ணன் செல்கின்ற பொழுது காயிதே மில்லத் அவர்கள் சிம்னு ஸுப்யானைத்தான் விடுத்தனுப்பினார்கள். சமது அண்ணன் அவர்கள் சவூதி மன்னரிடம் விடுத்து தமிழக முஸ்லிம்கள் ஷரீஅத்தை தெரிந்து கொள்ள தமிழ் மொழியை அரபி லிபியில் எழுதியிருப்பதை எடுத்துச் சொல்லி மன்னரின் பாராட்டை பெற்றார்கள் அதுவும் அரபுத் தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

துஃகுபத்துஸ் ஸமதிய்யா பீஃலிஸானில் அரபிய்யா என்ற அரபி அரபுத்தமிழ் அகராதி 1913 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் முஹம்மது இபுறாஹிம் ஆலிம் அவர்கள் எழுதி பார்த்திபனூர் முஹம்மது ஹனீபா ஆலிம் அவர்களால் வெளியிடப்பட்டதாகும். பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி மதரஸாவின் முதல்வர் அப்துல் ஜப்பார் ஹஜரத் அவர்களும் பேராசிரியர் அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் அவர்களும் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். எல்லா உலமாக்களிடமும் அந்த அகராதி இருந்து வருகின்றன. இதுவரை யாரும் அரபி மொழிக்கு அரபுத்தமிழில் அகராதி வெளியிடவில்லை. இந்த கிதாபும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டும்.

ஜவாஹிருல் மஸாயில் என்ற நூல் (தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள் போன்ற மாஸாயில்கள்) வீரசோளம் நைனா முகம்மது ஹஜரத் அவர்களால் 1906 ம் ஆண்டு அரபுத்தமிழில் வெளியிடப்பட்டதாகும். இந்த நூலும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம் பெற வேண்டும்.

உலமாக்கள் பலரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்த குறிப்புகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

P.K.N.அப்துல் காதிர் ஆலிம்
மதுரை மவ்லானா
கேம்ப் : துபாய்
04 ஆகஸ்ட் 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது,

2009 10 ஆம் ஆண்டில் முன்பதிவுள்ள ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் 9.84 லட்சம் பேர் சலுகை கட்டணத்தில் பயணம் செய்துள்ளனர்.

சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கழிப்பறை வசதியுடன்கூடிய பிரத்யேக ரயில் பெட்டிகளை ரயில்வே தயாரித்து வருகிறது.

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகள் நடைமேடையில் ஏறி, இறங்கவும், நடைமேடை மாறுவதற்கும் வசதியாக நடைமேடையின் இரு புறமும் சரிவுப்பாதை உள்ளது என்றார்.