Thursday, August 19, 2010

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடு அறுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில துணை அமைப்பாளரும், காயிதெ மில்லத் உடல் உழைப்பு தொழி லாளர் நலச்சங்க செயலாளருமான மௌலவி ஏ.ராஜா ஹுசைன் தாவூதி தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாநகராட்சி சார்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரைஅனுப்பானடியில் கடந்த வாரம் திறக் கப்பட்டுள்ளது. இங்கு ஆடுகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து அது மயங்கிய பின் ஆடுகள் அறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதனையறிந்து மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டு செய்முறை விளக்கம் பெற்றனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை.

இதுபோன்று அறுக்கக் கூடாது எனவும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள முறைபடியே அறுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.