ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Saturday, August 1, 2009
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு முஹம்மது தங்கள் வஃபாத்து
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு முஹம்மது தங்கள் வஃபாத்து
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்கள் அவர்கள் 01.08.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும்.
பேரா. கே.எம்.கே. சகோதரி வஃபாத்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களது அக்கா 01.08.2009 சனிக்கிழமை காலை திருச்சியில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
காயிதேமில்லத் பேரவை இரங்கல்
அமீரக காயிதேமில்லத் பேரவையின் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை மாலை துபாயில் நடைபெற்றது. கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்கள் மறைவுக்கும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சகோதரி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அன்னார்களது மறுமைப் பேருக்காக துஆச் செய்யப்பட்டது
இக்கூட்டத்தில் அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, பொருளாளர் எம். அப்துல் கத்தீம், செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், இணைச்செயலாளர் காயல் முஹம்மது யஹ்யா, ஏ. ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Labels:
தலைவர்,
பானக்காட்டு,
முஸ்லிம் லீக்,
முஹம்மது தங்கள்,
வஃபாத்து