Saturday, August 1, 2009

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !

-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்