Saturday, August 1, 2009

வெற்றி வெகு தூரத்தில் இல்லை

வெற்றி வெகு தூரத்தில் இல்லை
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்

“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)

நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !

உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !

வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது

நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது

நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்

எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !

அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்

பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !

முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !

ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !

ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !

நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !

அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !

அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !