Wednesday, August 12, 2009

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம

http://muslimleaguetn.com/news.asp?id=999

இந்திய அரசியல் வானில் கண்ணியத்தின் சின்னமாய் மின்னிய முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் பற்றி ஹகண்ணியத் தமிழர்| என்ற ஆவணப்படம் தயாரிக்கப் பட இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் நேர்த்தி யுடனும், உயர் தொழில் நுட்ப தரத்துட னும் தாயரிக்கப்பட உள்ள இந்த படத்தில் காயிதெ மில்லத் பற்றிய வர லாற்றுச் சுவடு களும், அவரைப் பற்றிய மூத்த அரசியல் தலைவர் களின் கருத்துக்களும் இடம் பெற உள்ளன.

இந்த ஆவணப்பட தயாரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த 8-8-2009 வியாழன் அன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள சவேரா ஓட்ட லில் நடைபெற்றது.

ஆவணப்படத்தின் இயக்குநர் ஆளுர் ஷா நவாஸ், ஆவணப் படத்தை தாயரித்து வெளியிடும் எஸ்.டி. கூரியர் நிறுவனத் தலைவர் கே.அன்சாரி, பேராசிரியர் அ. மார்க்ஸ், தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆவணப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் கூறியதா வது-

ஒரு மணி நேரம் ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதோடு, முதலில் தமிழ் மொழியி லும் பின்னர் மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படும்| என்றும் தெரிவித்தனர். காயிதெ மில்லத் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தனர்.

இந்த ஆவணப்படம் டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்த ஆளுநர் ஷாநவாஸ், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, காயிதெ மில்லத் வாழ்க் கையை திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் காயிதெ மில்லத் பற்றி எந்தப் பதிவும் இல்லையென்றால் அது வரலாற்றுப் பிழையாகி விடும் என்பதாலேயே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து

கண்ணியத் தமிழர் ஆவணப்பட இயக்குநர் ஆளுர் ஷானவாஸ் 10-8-09 மாலை முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லுக்கு வருகை தந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆவண படம் குறித்த விவரங்களை ஆளுர் ஷானவாஸ் 65139, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை, கணேன் டிரா வல்ஸ், எழும்பூர், சென்னை 600 008 செல்-9444976476 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.