Friday, August 22, 2008

அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்

அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்



அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் பல செய்தவர்கள் உலமா பெருமக்கள். அந்த தியாகங்கள் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் கூறினார்.

பரங்கிப்பேட்டை நகரில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை வகித்தார்.

மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லானா அப்துஸ் ஸமத்ரஸாதி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மவ்லானா ஏ.மஃசூக் ரஹ்மான் தாவ+தி தேசிய கீதம் பாடினார். மவ்லானா முஹம்மது ஃபாரூக் பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மலாஹிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.ய+னுஸ், பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா மத்ரஸா ஆசிரியர் மவ்லானா சீத்தீக் அலி பாகவி, பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் எம்.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

நம் இந்திய திருநாட்டின் 61ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அனைத்து மக்களாலும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் உலகெங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

பரங்கிப்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபையினரால் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும்.

நம் இந்திய திருநாட்டில் 200 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து வெள்ளையர்கள் நம் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரும் ஹிந்து சமுதாயத்தினரும் கிறிஸ்துவ-சீக்கிய சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.

வெள்ளையர்களைப் போன்று இந்தியர்களுக்கும் சலுகைகள் வேண்டுமென்று நம் நாட்டு தலைவர்கள் கேட்ட போது, சலுகைகள் மட்டுமல்ல@ வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். வெளியேற்றபட வேண்மென்று முழங்கியவர்கள் நம் நாட்டு தலைவர்கள்.

வெள்ளையர்களை வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியதற்காக நம் நாட்டு உலமாக்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்... செத்து மடிந்தார்கள். சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப் பட்டார்கள். அத்தனை கொடுமைகளையும் சகித்து வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் வரை போராடியவர்கள் நம் உலமாக்கள்.

உ.பி.யிலுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நிறுவனர் மவ்லானா காஸிம் நானூத்தவி அவர்களையும் அறிவுலக மேதை, ஆன்மீகத்தென்றல் மவ்லானா ஹீஸைன் அஹ்மத் மதனீ, மவ்லானா இப்ராஹிம் கங்கோஹி, மவ்லானா ரஷீத் அஹ்மத் தஹ்லவி, மவ்லானா இம்தாதுல்லா மஹாஜீர் மக்கி இத்தகைய உலமாக்களின் சேவை மகத்தானதாகும். பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கும், கொடுங்கோள் தனத்துக்கும், தண்டனைக்கும் கொஞ்சமேனும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடியவர்கள் நம் நாட்டு உலமாக்களாகும்.

இத்தகைய மூத்த உலமாக்கள், தியாகச்சீலர்கள் டெல்லி பட்டணத்திலும் தேவ்பந்திலும், லக்னோவிலும் வயது முதிர்ந்த நிலையில் கையில் ஊன்றிச் சென்ற கைத்தடி பிரம்புகளுக்கு வெள்ளை சிப்பாய்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சி நடு நடுங்கியது.

மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் புனித, கஃபத்துல்லாஹ்வில், கருந்திரையை பிடித்து, யா-அல்லாஹ் என்தாய் நாட்டுக்கு சுதந்திரம் கொடு என்று நெஞ்சுருக பிராத்தனைச் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் ஷரீபுக்கு அற்புதமான விரிவுரை எழுதிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராவார். சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் முதலாவது கல்வி அமைச்சராக பணியாற்றிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருந்தலைவராகவும், இந்தியாவின் முதலவாது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் குருவாகவும் திகழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரராவார்.

அண்ணல் காந்திஜீ அவர்களின் தலைமையில் நம் உலமாக்கள் செய்த தியாகத்தை காந்திஜீ அவர்களே பெரிதும் பாராட்டியுள்ளார்கள். தேவ்பந்து தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நம்நாட்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்து உலமாக்கள் ஆந்நியதியாகத்தை போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.

நம் நாட்டின் சுதந்திர தின விழாவை நாடெங்கும் நம் நாட்டு உலமாக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, பேசினார்.

நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மவ்லானா லியாகத்அலி மன்பஈ நன்றி கூறினார்.