Thursday, August 21, 2008

அமர்நாத்: அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

அமர்நாத்: அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்


தென்காசி, ஆக. 20: அமர்நாத் நில விவகாரத்தை மதப் பிரச்னையாக்க வேண்டாம் என, அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எம். காதர்மொய்தீன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம் மாதம் 30-ம் தேதி சேலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற மணிவிழா மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைபடுத்துவது குறித்து இக் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

அமர்நாத் நில விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இது அந்த மாநிலப் பிரச்னை.

தேர்தலுக்காக அமைதியைக் கெடுத்துவிடக் கூடாது. இது மக்களைப் பாதிக்கும். மதப் பிரச்னையாக உருவெடுத்துவிடும் என்றார் அவர்.