அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 13ஆம் ஆண்டுவிழா தஞ்சையில் நடைபெற்றது. ஆன்மீக அரங்கத்திற்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஹாஜி 'மெஹர்' ப.யு.அய்யூப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அரசு காஜியார் அல்ஹாஜ் டி.சைய்யத் காதர் ஹுசைன் புகாரி ஆலிம் முன்னிலை வகித்தார்.
வவ்வாலடி 'அன்னை கதீஜா' இதழ் துணை ஆசிரியர் தமிழ்மாமணி ஹாஜி அ. ஹபீப் முஹம்மது இஸ்லாமியப் பாடல் இசைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான்
சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது :
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.
தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.
அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.
முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.
முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
-இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் பேசினார். நிகழ்ச்சியில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக துணைத்தலைவர் அதிரை அருட்கவி முஹம்மது தாஹா மதனீ, பாபநாசம் ராஜகிரி தாவூத் பாட்சா கலைக்கல்லூரி அரபி மொழிப் பேராசிரியர் ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன், ஆகியோர் உரையாற்றினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label தளபதி ஷபீகுர் ரஹ்மான். Show all posts

Saturday, April 11, 2009
Friday, August 22, 2008
அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்

அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் பல செய்தவர்கள் உலமா பெருமக்கள். அந்த தியாகங்கள் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் கூறினார்.
பரங்கிப்பேட்டை நகரில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை வகித்தார்.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லானா அப்துஸ் ஸமத்ரஸாதி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மவ்லானா ஏ.மஃசூக் ரஹ்மான் தாவ+தி தேசிய கீதம் பாடினார். மவ்லானா முஹம்மது ஃபாரூக் பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மலாஹிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.ய+னுஸ், பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா மத்ரஸா ஆசிரியர் மவ்லானா சீத்தீக் அலி பாகவி, பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் எம்.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
நம் இந்திய திருநாட்டின் 61ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அனைத்து மக்களாலும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் உலகெங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
பரங்கிப்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபையினரால் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும்.
நம் இந்திய திருநாட்டில் 200 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து வெள்ளையர்கள் நம் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரும் ஹிந்து சமுதாயத்தினரும் கிறிஸ்துவ-சீக்கிய சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.
வெள்ளையர்களைப் போன்று இந்தியர்களுக்கும் சலுகைகள் வேண்டுமென்று நம் நாட்டு தலைவர்கள் கேட்ட போது, சலுகைகள் மட்டுமல்ல@ வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். வெளியேற்றபட வேண்மென்று முழங்கியவர்கள் நம் நாட்டு தலைவர்கள்.
வெள்ளையர்களை வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியதற்காக நம் நாட்டு உலமாக்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்... செத்து மடிந்தார்கள். சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப் பட்டார்கள். அத்தனை கொடுமைகளையும் சகித்து வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் வரை போராடியவர்கள் நம் உலமாக்கள்.
உ.பி.யிலுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நிறுவனர் மவ்லானா காஸிம் நானூத்தவி அவர்களையும் அறிவுலக மேதை, ஆன்மீகத்தென்றல் மவ்லானா ஹீஸைன் அஹ்மத் மதனீ, மவ்லானா இப்ராஹிம் கங்கோஹி, மவ்லானா ரஷீத் அஹ்மத் தஹ்லவி, மவ்லானா இம்தாதுல்லா மஹாஜீர் மக்கி இத்தகைய உலமாக்களின் சேவை மகத்தானதாகும். பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கும், கொடுங்கோள் தனத்துக்கும், தண்டனைக்கும் கொஞ்சமேனும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடியவர்கள் நம் நாட்டு உலமாக்களாகும்.
இத்தகைய மூத்த உலமாக்கள், தியாகச்சீலர்கள் டெல்லி பட்டணத்திலும் தேவ்பந்திலும், லக்னோவிலும் வயது முதிர்ந்த நிலையில் கையில் ஊன்றிச் சென்ற கைத்தடி பிரம்புகளுக்கு வெள்ளை சிப்பாய்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சி நடு நடுங்கியது.
மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் புனித, கஃபத்துல்லாஹ்வில், கருந்திரையை பிடித்து, யா-அல்லாஹ் என்தாய் நாட்டுக்கு சுதந்திரம் கொடு என்று நெஞ்சுருக பிராத்தனைச் செய்தவர்கள்.
திருக்குர்ஆன் ஷரீபுக்கு அற்புதமான விரிவுரை எழுதிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராவார். சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் முதலாவது கல்வி அமைச்சராக பணியாற்றிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருந்தலைவராகவும், இந்தியாவின் முதலவாது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் குருவாகவும் திகழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரராவார்.
அண்ணல் காந்திஜீ அவர்களின் தலைமையில் நம் உலமாக்கள் செய்த தியாகத்தை காந்திஜீ அவர்களே பெரிதும் பாராட்டியுள்ளார்கள். தேவ்பந்து தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நம்நாட்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்து உலமாக்கள் ஆந்நியதியாகத்தை போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.
நம் நாட்டின் சுதந்திர தின விழாவை நாடெங்கும் நம் நாட்டு உலமாக்கள் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, பேசினார்.
நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மவ்லானா லியாகத்அலி மன்பஈ நன்றி கூறினார்.

Subscribe to:
Posts (Atom)