இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான்!
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவருமான முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி வரும் அவர் காலை 9 மணிக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி 49வது வட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கு மூன்று சக்கர தள்ளுவண்டிகளை வழங்குகிறார்.
அன்று இரவு 9மணிக்கு நெல்லிக்குப்பம் தைக்கால் தெரு ஷேக்சாகிப் தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்தும் இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
16ஆம் தேதி சனிக்கிழமை காலை இந்திய முஸ்லிம் அயோஸியேஷன் ஒருங்கி ணைப்பாளர்களுடன் கல்வி உதவி தொகை பற்றி ஆலோசிக்கிறார். அன்று மாலை முத்துப் பேட்டையில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தை திறந்து வைத்து, திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.