முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் இந்திய சுதந்திர தின விழா!
15-08-2008 வெள்ளி காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஸிலில் இந்திய சுதந்திர தினவிழா நடைபெறும்.
மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
மாநிலப் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது இனிப்பு வழங்குவார். மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
வடசென்னை, தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்குமாறு வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.