நெல்லை வரும் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், செயலாளருக்கு உற்சாக வரவேற்பு: மாவட்டக் கூட்டத்தில் முடிவு!
http://www.muslimleaguetn.com/news.asp?id=516
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் 03.01.09 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக்கோயில் ஹாஜி வி.ஏ. செய்யதுபட்டாணி, கடையநல்லூர் ஏ.இ. அப்துல் காதர், ஏர்வாடி பீர்முகம்மது, நெல்லை பேட்டை வீ.ம.திவான் மைதீன், ரவணசமுத்திரம் ஆர்.எம். ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், புளியங்குடி ஜப்பான் கே. உதுமான், கடையநல்லூர் முகம்மது அலி, பாம்புக் கோவில் வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், கவிஞர் வீரை ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ஷிப்லி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர் ஆகியோர் பேசினார்கள்.
சமீபத்தில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் இந்திய தேசிய லீகிலிருந்து விலகி தாய்ச்சபையில் இணைந்த மேலப்பாளையம் ஜே. ஷாகுல் ஹமீதுக்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பை மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா பொதுக்குழு வில் அறிவித்தார் அதை பொதுக் குழு அங்கீகரித்தது.
மேலும், வருகிற 18ந் தேதி ஞாயிறு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது,தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அன்று காலை 10.மணிக்கு தென்காசி அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா நடைபெறுகிறது, கட்டிடத்தை திறந்து வைத்து தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
அன்று மாலை 6.மணிக்கு கடையநல்லூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது, இரவு 7 மணிக்கு புளியங்குடி மேலத் தைக்கா திடலில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர், தேசிய பொதுச்செயலாளர், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதிலிருந்து திரளாக கலந்துகொள்வது என்றும். ராமநாதபுரத்தில் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் தென்மண்டல முஸ்லிம் லீக் மாநாட்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முதலியார்பட்டி எம். பஸ்லுர் ரஹ்மான், வி.கே.புரம், கானகத்தி மீரான், கடையநல்லூர் எஸ்.எ. ஹைதர் அலி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹிம் ஆலிம், திருநெல்வேலி நகர தலைவர் பி.எஸ். காதர் மஸ்தான், செயலாளர் எம்.ஏ. முகம்மது இப்ராகீம், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், கடையநல்லூர் நகர தலைவர் இ.ஏ. முகம்மது காசிம், வீரவநல்லூர் நகரச் செயலாளர் அ.ஷேகு ஒலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் செய்யது முகம்மது நன்றிகூற, வீரவநல்லூர் ஷேக் மீறான் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.