Thursday, January 22, 2009

முகவை தென்மண்டல மாநாட்டில் சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் அணிவகுக்க ஏற்பாடுகள்! களைகட்டுகிறது முகவை!!

முகவை தென்மண்டல மாநாட்டில் சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் அணிவகுக்க ஏற்பாடுகள்! களைகட்டுகிறது முகவை!!



வரும் ஜனவரி 24, சனிக்கிழமை இராமநாதபுரத்தில் நடைபெறும் தென்மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் லீக் தொண்டர்கள் இராமநாதபுரத்திற்கு வருகை தரவள்ளனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் சிங்க நடையில் அணிவகுக்கின்றனர்.

தென்மண்டல மாநாடு:
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில், பெரியகுளம் தியாகி அப்துல் ரஹ்மான் நினைவு மேடையில் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகல் 11.30 மணிக்கு அதே மேடையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. முகவை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ்.சவுக்கத் அலி தலைமையில், மாவட்ட துணைத்தலைவர்கள் வரிசை முஹம்மது, ஏ.பி.சீனி அலியார், ஏ.கமருஜ்ஜமான் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், மாநில செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், கவிஞர் நாகூர் ஜபருல்லா, நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், ஆலிம்கள் அணி அமைப்பாளர் மௌலானா ஹாமித் பக்ரீ ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

பிறைக்கொடி பேரணி:
பிற்பகல் 3 மணிக்கு இராமநாதபுரம் சின்னக்கடை பாசிப்பட்டறை தெரு கே.கே.எஸ்.ஏ.பஜ்ருதீன் நினைவு திடலிலிருந்து சீருடையணிந்த முஸ்லிம் லீக் வீரர்களின் மாபெரும் பிறைக்கொடி பேரணி நடைபெறுகிறது. மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் ஏ.அப்துல் ரவூஃப் துவக்கி வைக்கும் இப்பேரணிக்கு நெல்லை மாவட்ட செயலாளர் டி.இ.செய்யது முகம்மது தலைமை ஏற்கிறார். ஒன்பது மாவட்டங்களின் பொருளாளர்களும், முகவை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், எம்.எஸ்.எஃப். அமைப்பாளர் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைக்கின்றனர்.

மாநாடு நிறைவு விழா:
மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் அமைந்துள்ள எம்.எஸ்.அப்துர்ரஹீம் நுழைவு வாயிலில், பனைக்குளம் முபாரக் ஆலிம் நினைவு மேடையில் மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமை ஏற்கிறார்.

தென்மண்டல 9 மாவட்டங்களின் தலைவர்களும் கவுரவ புரவலர்கள் மெஜஸ்டிக் கரீம் காக்கா, எஸ்.எம்.சேக் நூர்தீன், சித்தார்கோட்டை தஸ்தகீர், மாநில துணைத் தலைவர் எஸ்.கோதர் முகைதீன் (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தென்மண்டல மாநாடு மேலிட பார்வையாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் வரவேற்று பேசுகிறார்.

மாநில தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி.ஜீவகிரிதரன் மற்றும் தென் மண்டல மாவட்டங்களின் செயலாளர்கள் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

சிறப்புரை:
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ரண்டதாணீ எம்.எல்.ஏ., தமிழக அமைச்சர்கள் சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஹஸன் அலி, முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், எச்.அப்துல் பாஸித், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், பவானி இராஜேந்திரன் எம்.பி., காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

இம்மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் லீக் தொண்டர்கள் இராமநாதபுரம் வருகை தருகின்றனர். பிறைக்கொடி தோரணங்கள், அலங்கார பதாதைகளால் இராமநாதபுரம் களைகட்டியுள்ளது.

இம்மாநாடு தென்மாவட்டங்களின் முஸ்லிம் லீகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.