Sunday, March 7, 2010

க‌வ‌லை ம‌ற‌ந்து சிரிங்க‌..........

க‌வ‌லை ம‌ற‌ந்து சிரிங்க‌..........

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 புதன் கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினமாகும். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடை பெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
தந்தை பெரியார் அவர் களின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பாசத் திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகை யாளர் கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள். சுதந்திர இந்தியாவின் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் தொடங்கிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வதறிந்து மகிழ்கிறேன்.

இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற போது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதெ மில்லத் அவர்கள், அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன்@ இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, ~~வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான எனதருமைத் தாய் மொழியாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்|| என ஆணித் தரமாக முழங்கியதை, தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், ~~உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|| நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவதுடன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன் கிழமை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
மகளிர் கருத்தரங்கு

காலை 9மணிமுதல் பகல் 1மணிவரை மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாதிமா முஸப்பர் தலைமையில் நடைபெறும்
இக்கருத்தரங்கிற்கு நெல்லை மாநக ராட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ரஹ்மத் அப்துல் ரஹ் மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிஸா, கோ.கு. ஜமீலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஏ. ரபீகா, மருத்துவ விழிப்புணர்வு பற்றி டாக்டர் திருமதி எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு குறித்து பேராசிரியை தஸ்ரீப் ஜஹான் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இசையரங்கம்

பிற்பகல் 2மணி முதல் 3.45 வரை இஸ்லாமிய இன்னிசை விருந்து ஆழ்வை உஸ்மான் குழுவினரால் அளிக்கப்படுகிறது.

சமூக நல்லிணக்க பேரணி

மாலை 4மணிக்கு சமூக நல்லிணக்க பேரணி மேலப் பாளையம் அன்னை ஹாஜரா கல்லூரி சாலை யில் உள்ள வி.எஸ்.டி. பள்ளிவாசலிலிருந்து தொடங்குகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஹாமித் பக்ரி தலைமையில் நடைபெறும் இப்பேரணியை டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி துவக்கி வைக்கிறார். சங்கைக்குரிய உலமா பெருமக்களான டி.ஜெ.எம். சலாஹ{த்தீன் ஹஜ்ரத், சதக்கத்துல்லா மிஸ்பாஹி ஹஜ்ரத், பி.ஏ. காஜா முஈ னுத்தீன் பாகவி ஹஜ்ரத், ஹெச்.கே. முஹம்மது முஸ்தபா பாகவி ஹஜ்ரத், பி.ஏ. கே. அப்துல் ரஹீம் பாகவி ஹஜ்ரத், எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத், எம்.ஹெச். ஷம்சுத்தீன் உலவி ஹஜ்ரத், என். எஸ். மீரான் மன்பஈ ஹஜ்ரத், எம்.என்.எம். இல்யாஸ் உஸ் மானி ஹஜ்ரத், ஷாமதார் ஆலிம் ஹஜ்ரத், ஏ.ஒய். முகையதீன் ரஷாதி ஹஜ் ரத், சுலைமான் சேட் ஆலிம் ஹஜ்ரத், அப்துர் ரஹ்மான் ஷிப்லி ஹஜ்ரத், கே.எப். ஜலீல் உஸ்மானி ஹஜ்ரத், சுலைமான் ஆலிம் ஹஜ்ரத் மற்றும் வழக்கறிஞர்கள் எம்.எஸ். முஹம்மது முஸ்தபா, எம்.எம். ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடுp

மாலை 6.30மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநித் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார். மௌலவி எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ஆலிம் கிராஅத் ஓதுகிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டை திறந்து வைக்கிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் மதுரை மௌலவி பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் பச்சிளம் பிறைக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வரவேற்று பேசுகிறார். மு.க.அழகிரி

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தென்மண் டல தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மத்திய உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சருமான அஞ்சா நெஞ்சர் மு.க.அழகிரி பங்கேற்கிறார். தமிழக அமைச்சர் டி.பி. எம். மைதீன்கான், மாநகர மேயர் ஏ.எல். சுப்பிரமணியம், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எம். அப்துர் ரஹ்மான், இ.டி. முஹம்மது பஷீர், எஸ்.எஸ். ராம சுப்பு, சட்டமன்ற உறுப்பினர் கள் வி.கருப்ப சாமி பாண் டியன், என். மாலை ராஜா, எம். கலீலுர் ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித், மாநிலச் செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நாகூர் ஜபருல்லா, எம்.எஸ். ஏ. ஷாஜஹான், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திருப் ப+ர் சத்தார், ஏ.அப்துர் ரவ+ப், வி.எஸ். அமா னுல்லா, மௌலவி ராஜா ஹ{சைன் மற்றும் மௌ லவி ஜஹாங்கீர் அரூஸி, ஜாஹிர் ஹ{சைன், புளியங் குடி அப்துல் வகாப் உள்ளிட்டோர் உரையாற்று கின்றனர்.மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டங் களி,ன் தலைவர், செயலா ளர், பொருளாளர்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது மஹம்மது நன்றி கூறுகிறார்.

விருதுகள்

சிறந்த கல்வியாளருக்கான விருது கீழக்கரை சீனாதான செய்யது அப்துல் காதர் அவர்களுக்கும், சிறந்த சமூக சேவையா ளர் விருது டாக்டர் எம். கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கும், சிறந்த இலக்கியவாதி விருது கவிஞர் வீரை ரகுமான் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த பெண் கல்வியா ளருக்கான விருது பேராசிரியை தஸ்ரீப் ஜஹானுக்கு மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கின் போது வழங்கப் படுகிறது.

சிறப்பான ஏற்பாடுகள்

இம்மாநாட்டிற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தென் மாவட் டங்கள் முழுவதிலும் சுவர் விளம்பரங்களும், பிளக்ஸ் விளம்பர பேனர்களும் செய்யப்பட்டுள்ளன. இம்மாநாட்டையொட்டி தென்மாவட்டங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

Saturday, March 6, 2010

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினமான 2010 மார்ச் 10-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ~சமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கல்வி, பொது நலம், இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் நால்வருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளன.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மேலப்பாளையம் ஜின்னா திடலில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்கான ஏற்பாடு கள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.

சமூக நல்லிணக்க பேரணி

காலையில் நடை பெறும் மகளிர் விழிப் புணர்வு கருத்தரங்கையும், பிற்பகலில் நடைபெறும் பிரமாண்டமான சமூக நல்லிணக்கப் பேரணியையும், மாலையில் நடைபெறும் சமுதாய மறு மலர்ச்சி மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து இம்மாநாட்டிற்கு பெருமளவில் சமுதாயப் பெருமக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் மஹல்லாக்கள்தோறும் சென்று மாநாட்டு அழைப்பிதழ்கள் கொடுப்பது என்றும், மேலப்பாளையத்தில் வீடுவீடாக சென்று அழைப்பது என்றும், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கல்வி, இலக்கியம், சமூக சேவைகளில் மிகச் சிறந்த சேவையாற்றி வரும் பிரமுகர்கள் நால்வருக்கு ~சமுதாய ஒளிவிளக்கு| விருதுகள் வழங்கப்பட இக்கூட்டத்தில் முடிவானது.

விருது பெறும் பெரு மக்கள்

சிறந்த கல்வியாளர் - சீனாதானா செய்யது அப்துல் காதர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 22-8-1946-ல் பிறந்த சீனா தானா செய்யது அப்துல் காதர் ஹாங்காங், இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொழில் செய்யும் முன்னணி பிரமு கர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு சொந்த முயற்சி யிலும், ஓமியத் மற்றும் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பிலும், பைத்துல்மால் வழியிலும் உதவி செய்துவரக் கூடியவர்.

தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பைத்துல் மால் அமைக்கப்படுவதற்கு துணை புரியக்கூடியவர். அனைத்து சமயத்தவர்களுக்கான அறிவுரைகள், மதங்கள் சொல்லும் நற் சிந்தனைகள் உள்ளிட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் நான்கு புத்தகங்களை எழுதியிருக்கக் கூடியவர். சீனாதான சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை களுக்கு மருத்துவ மற்றும் உணவு உதவிகள் செய்து வரக்கூடியவர். ஏராளமானோர் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பெறுவதற்கு துணை நிற்கக் கூடியவர். இத்தகையப் பெருமைக் குரிய சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களுக்கு ~சிறந்த கல்வியாள ருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த இலக்கியவாதி - கவிஞர் வீரை ரஹ்மான்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த கவிஞர் அப்துல் ரஹ்மான் 1931 மார்ச் 28-ல் பிறந்தவர். நாற்பது ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக உள்ள இவர் சிறந்த பொதுநல ஊழியர். மிகச் சிறந்த இலக்கியவாதி.

போட்டிகளையும் நடத்தியுள்ளார்.

முஸ்லிம் சமுதாய நலச் சங்கம், வீரை ஜும்ஆ பள்ளிவாசல், மூத்த குடிமக்கள் மன்றம், மக்கள் இயக்கம், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம், பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம், வீரை ஜுல்பா அறக் கட்டளை, சிராஜுல் ஹ{ப்தா மதரஸா உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர்.

மிகச் சிறந்த இலக்கிய வாதியான வீரை ரஹ்மான் அருமையான கவிஞர். இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பல இவர் எழுதியவை. இத்தகையப் பெருமைக் குரிய கவிஞர் வீரை ரஹ்மானுக்கு ~சிறந்த இலக்கிய வாதிக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம் மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த சமூகசேவகர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை ஒட்டியுள்ள மியான்பள்ளி கிராமத்தில் 1961 மே 4-ம் தேதி பிறந்தவர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை, ஷிபா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராகவும், எம்.எச். அக்ரோபார்ம் பங்குதார ராகவும் உள்ளார்.

ஷிபா கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி ரோட்டரி கிளப், சேம்பர் ஆஃப் காமர்ஸ், முஸ்லிம் அனாதை நிலையம், காதர் அவுலியா பள்ளிவாசல், மதரஸத்துல் ஹ{சைனியா அரபிக் கல்லூரி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகக் குழு, தனியார் நர்சிங் ஹோம், மனிதஉரிமை அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் போன்ற பல்வேறு பொதுஅமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர். சமயப் பாகுபாடின்றி ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இவர் நேசப்பார்வை என்ற அமைப்பை ஏற்படுத்தி விபத்து நடக்கும் போது மருத்துவஉதவி செய்து வரக்கூடியவர். கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தி வரக்கூடியவர். இவர் ஏற்பாடு செய்கின்ற இலவச கண் சிகிச்சை மூலம் மட்டுமே வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர்.

இளம்பிள்ளை வாத நோயை ஒழிப்பதற்கு இலவச சொட்டு மருந்து வழங்கி சேவை செய்து வரக் கூடியவர். 1986- முதல் ஆண்டு தோறும் 15 தம்பதிகளுக்கு இலவச திருமணங்கள் செய்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் போன்ற அளப்பரிய காரியங்களை செய்து வருகின்றவர்.

இலவச மருத்துவ ஆலோசனை, விபத்து முதலுதவி பயிற்சி முகாம் கள் நடத்துதல், இயற்கை சீற்றப் பாதுகாப்பு உதவிகளை தாராளமாக செய்து வரக்கூடியவர். இவரது தர்ம காரியங்களும், அறப்பணிகளும் இறைவனின் நன்மைக்காக என்ற அடிப்படையில் ரகசியமாக செய்யப்படுவது பாராட்டிற்குரியதாகும். இத்தகையப் பெருமைக் குரிய டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கு ~சிறந்த சமூக சேவகருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த பெண் கல்வியாளர்- தஸ்ரீப் ஜஹான்

மதுரை ஸ்டேட் பாங்க் பணியாளர் காலனியைச் சேர்ந்த ஏ.கே. தஸ்ரீப் ஜஹான் எம்.ஏ. எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், புதுக்கோட்டை ராஜா அரசு கலைக் கல்லூரியி லும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக் கல்லூரியி லும் முதல்வராக பணி செய்தவர்.
கல்விக் கருத்தரங்குகள், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கிய வர். பொருளாதாரப் பேராசிரியையான இவர் அது குறித்த தலைப்புகளில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். இஸ்லாம் வலியுறுத்துகின்ற மனிதநேயம், சகோத ரத்துவம், கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் பயனுள்ள பல ஆக்கங்களைத் தந்தவர். 2007.ல் அவர் பணி ஓய்வு பெற்ற பின் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அல்புர்கான் மெட்ரிகுலே ஷன் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். முஸ்லிம் பெண் கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான வழிகாட்டுபவராக திகழ் கிறார். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக் கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். ஏராளமான பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு மிகச் சிறந்த உதவிகள் செய்து வருகிறார். இத்தகைய பெருமைக் குரிய தஸ்ரீப் ஜஹான் அவர்க ளுக்கு ~சிறந்த பெண் கல்வியாளருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப் படுகிறது

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழுச்சிமிகு வரவேற்ப்பு
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து

காட்டுமன்னார் கோயில் ,முட்டம் பாலம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் தளபதி
ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டைநகரில் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் ,கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் ,லால்பேட்டை நகர தலைவர் முகமத் ,பேரூராட்சி மன்றத்தலைவர் சபியுல்லா,நகர முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் அலி ,துணைத்தலைவர்கள் அப்துல் ஜெமில் ,தஹா முகமத் , அப்துல் ரசித்,துணை செயலாளர்கள் முகமத் தைய்யுப் ,ரஊப்,ஹிதயதுல்ல இளைஞர் அணி நூருல் அமின் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் சால்வை அணிவித்தனர்
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து
முஸ்லிம் லீக் மாணவர் அணியைச்சார்ந்த ஏ.எஸ்.அஹமத் தளபதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பென்னகரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள் என்ற செய்தியை தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறினார்

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகரெங்குமுல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,உலமாக்கள் ,ஜமாத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .தி.மு.க.மற்றும் தோழமை கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கான மக்களும் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் ,தளபதி ஸ்டாலின் ஜிந்தாபாத்,பேராசிரியர் காதர் மொகிதீன் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டு வரவேற்ற பொது துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்

Thursday, February 25, 2010

அறிவிப்பு

அறிவிப்பு

கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப் பதற்காக கீழ்க்காணும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
2. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்.
3. மௌலவி டாக்டர் அன்வர் பாதுஷா உலவி
4. எம். பஷீர் அஹமது
5. மௌலவி இல்யாஸ் ரியாஜி
6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
7. முஹம்மது ஹனீபா

17.2.2010 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதகா தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அ.இ. முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அறிவித்துள்ளார்.

Tuesday, February 23, 2010

சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்

சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும்,சர்வதேச காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த கேள்விக் கணைகளுக்கு தனது சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார். www.muthupet.com

www.muthupet.org

சிந்தித்தால் தெளிவு பிறக்கும்! - மோதீன் கே.ஏ. அப்துல் நசீர் (அய்யம்பேட்டை)

சிந்தித்தால் தெளிவு பிறக்கும்! - மோதீன் கே.ஏ. அப்துல் நசீர் (அய்யம்பேட்டை)

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடைபெற்றபோது ஆரம்பம் முதலே அருகில் இருந்து அனைத்து அமர்வுகளையும் மனதினுள்ளே வாங்க வேண்டும் என்றெண்ணி இயக்கத்தின் தலைவர்களுடன் பயிற்சி முகாம் நடைபெறும் வழுத்தூர் என்ற சாதனை புரிந்து சிற்றூருக்குள் நுழைகின்றோம்.
திரண்டிருந்த மக்கள் கூட்டம் தலைவர் பேராசிரியரையும் மற்றவர்களையும் வரவேற்க தலைவர் பேராசிரியர் இளம் பிறைக் கொடியை ஏற்றி பயிற்சி முகாமின் முதல் அமர்வு தொடங்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து மிகுதியான இளைஞர்கள் வந்திருந்தாலும் சிறு சத்தம்கூட இல்லாமல் அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை உன்னிப்புடன் கவனித்து கொண்டிருந்தார்கள்.

தலைவர் பேராசிரியர் துவக்கஉரையாற்றினார். எளிமையான விழாக் கோலம் - கண் சிமிட்டாமல் காது கொடுத்து கேட்டுக்கொண் டிருக்கின்றேன். பேரியக்கத்தின் இளைஞர்கள் ஆர்வமிகுதியில் தலைவர்கள் உரை யாற்றும் போது கைதட்டும்போதெல்லாம் மாநில பொதுச்செயலாளர் இளவல் அப+பக்கர் எழுந்து மைக்கை எடுத்து கைதட்டுவது கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். என்ன இது - புதிராக இருக்கிறதே? பெரும் சாதனைகளை சப்தமில்லாமல் செய்த இப்பேரியக்கத்தின் பயிற்சியரங்கம் எளிமையாக நடைபெறுகின்றது. வாண வேடிக்கைகளை விரும்பும் அரசியல் அரங்கில் என்ன புதுமை இது.

தலைவர்களை சாதார ணமாக சந்தித்து அளவளா வும் தொண்டர்கள் - எளிமையின் சின்னமா அமர்ந்திருக்கும் தலைவர்கள். அவரவருக்கு பயிற்சியரங்கப் பணிகளை பொறுப் பெடுத்து கொண்டதைப் போல் பம்பரமாய் சுற்றி உழைக் கும் நேர்த்தி, பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளு மன்ற உறுப்பினரும் தமக்கிடப்பட்ட அரசியல் பணிகளை மிக நேர்த்தியாக எடுத்துரைப்பதும், தங்களது உரைகளிலே கண்ணியத்தையும் கண்டபோது புத்தம் புதிராக இருந்தது.

நாட்டு நடப்புகளை, சமுதாயப் பிரச்சிகைளை அழகான கண்ணியமான முறைகளில் எடுத்துரைக் கும் தலைவர்கள், தொண் டர்களை தூண்டி விடாத தலைவர்கள் - விந்தையிலும் விந்தையாக இருந்தது..

இப்பேரியக்கத்தின் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு இப்போதைய தலைவர் பேராசிரியர் அவர்களால் எப்படி சத்தமில்லாமல் சாதனைகளை தொடர்ந்து செய்ய முடிகின்றது. எப்படி அரசியல் அரங்கிலே இந்த பேரியக்கம் பல கட்சி கூட்டணிகளில் இடம் பெற முடிகின்றது?
பயிற்சிரங்கத்தின் மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரத்தால் அமர்வுகள் அனைத்தும் தொழுகைக்கு பிறகு தொடரும் என அறிவிக் கப்பட்டு தலைவர்கள் முதல் அனைவரும் ஜும்ஆ தொழுகைக்கு புறப்படுகின் றோம். வழுத்தூர் அய்யம்பேட்டை மற்றும் சக்கராப்பள்ளி ஊர்களில் உள்ள ஒவ்வொரு ஜும்ஆ பள்ளிகளையும் தேர்ந்தெடுத்து அழகான முறையில் அறிவிப்பு செய்து இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் ஜும்ஆ பிரசங்கம் செய்தபோது வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டேன்.

எளிமையான அரசியல் இயக்கமாக இரண்டு நாட்களாக அடையாளம் கண்ட எனக்கு தலைவர்களின் ஜும்ஆ பிரசங்கம் புதிராக இருந்தது. இஸ்லாமியப் பெரியார்களிடத் திலே இந்த இயக்கத்திற்கும், அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரியாதையும், கண்ணியத்தையும் நேரிடையாகக் காண முடிந்தது. ஜும்ஆ தொழுகை முடிந்து பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தபோது சிறு தெளிவு ஏற்பட்டது.
ஆம். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் அமைதியாக இஸ்லாமிய சமுதாயத்திற்கான சேவைகளை எப்படி சாதிக்க முடிகிறது என்பது புரிந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் எப்படி நெருக்கமாக இருக்கின் றார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. இந்திய இஸ்லாமிய சமு தாயத்திற்கு சேவை செய்வதாக கூறிக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் அலம்பலாய் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்து வந்த வழிச்சுவடே தெரியாமல் மறைந்து போனது. அறிவிப்பு விளம்பரங்களில் தம்மைப் பிர பலப்படுத்திக் கொண்ட அந்த இயக்க அமைப்பு தலைவர்களெல்லாம் விலாசமில்லாமல் கொஞ்ச நாளில் மறைந்து போனார்கள்.
பொய்யான புகழுக்கு ஆசைப்பட்டவர்களெல்லாம் தொண்டர்களாலேயே குறை, குற்றங்கள் சுமத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். விபரீத வழிகளை அரசியல் உலகில் தேர்ந்தெடுத்த தலைவர் களெல்லாம் ஒருநாள் வீசியெறியப்பட்டார்கள்.

ஏன் என்ன காரணம்?

புகழுக்கு ஆசைப்பட்டவர்களாக இருந்த அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒழுங்குற பழகி அவர்களின் தேவைகளை அறியாதவர்களாக இருந்தார்கள். கட்டுக்கடங்காத அரசியல் புகழாசையில் கண்ணியமாக அரசியல் செய்ய மறந்தார்கள்.

இப்போது தெளிவாக விளங்கிவிட்டது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுவதன் ரகசியம் புரிந்து விட்டது.

எந்த இஸ்லாமிய அமைப்பு- இயக்கம் சார்ந்த தலைவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்ய ஜும்ஆ பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்பட்டார்கள்?

இஸ்லாமிய சமுதாயத்துடன் நெருக்கமான நட்புறவுடன் கொள்கை அளவில் இந்திய ய+னியன்
முஸ்லிம் லீக் மட்டுமே இருந்தது, இருந்து வருகின் றது என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இது ஒன்று போதுமே. அதன் வெளிப்பாடுதான் ஜும்ஆ பிரசங்கங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளையும், வரைமுறகளையும் எல்லைத் தாண்டாத ஒரே அரசியல் கட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே.

தற்கால அரசியலிலே வழி மாறி, இஸ்லாமிய வாழ்வு முறையிலி ருந்து விலகிச் சென்று இஸ்லாமிய விரோதக் கொள் கைகளுக்கு அடிமையாகி புகழையும், செல்வத்தையும் நாடியவர்களாக தன் வாழ்க்கைப் பயணத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் கண்ணியமான முறையில் அரசியல் செய்யவும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குட்பட்டு தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆர்ப்பாட்டமான அரசியல் கிடையாது. தன் கருத்துக்களை ஜனநாயக முறையிலே எடுத்துச் சொல்லி சாணக்கியத்தனமாய் நிறைவேற்றிக்கொள்ளும் சாதுர்யம் உள்ளது. இந்திய அரசியல் அரங்கிலே இந்தப் பேரியக்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நட்பு றவாய் நல்ல நண்பனாக இருந்து தோழமையுடன் தன் தனித்துவத்தை நிரூபித்து வருகின்றது.

இந்த பேரியக்கம்போல் எந்த இஸ்லாமிய இயக்கம் ஃ அமைப்புகளோ அரசியல் அரங்கிலே நிரந்தரமாக இருந்தது கிடையாது. நிரந்தரமான அரசியல் அங்கீகாரம் பெற்றதும் கிடையாது.
தான்தோன்றித்தனமாக அறிக்கைகள், போராட்டங்கள் இந்தப் பேரியக்கத்தில் கிடையாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடும் கிடையாது. தெளிவான கொள்கைகளுடன் மிதமான வேகத்தால் அரசியல் அரங்கிலே முன்னேறி வரும் பேரியக்கம் இது.
அனைத்து அரசியல் கட்சி களுடனும், வேறுபாடில்லாமல் நட்புறவுடன் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இவை அனைத்துமே இரண்டு நாள் பயிற்சி முகாமில் புரிந்தது. இந்த இயக்கத்தில் என்னை அர்ப்பணித்து சேவையாற்ற முடிவெடுத்தேன். எனதருமை இளைய சமுதாயமே நீங்களும் கண்ணியமான அரசியல் காண சமுதாய சேவையாற்றிட இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

- மோதீன் கே.ஏ. அப்துல் நசீர்
அய்யம்பேட்டை