Wednesday, December 23, 2009

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

ரங்காநாத் மிஸ்ரா அறிக்கை தாக்கல் எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று வழக்கம் போல் தடுமாறிகள் சொல்லத்துவங்கியது மட்டுமின்றி தங்களின் இணைய தளத்திலும் தம்பட்டம் அடித்துள்ளனர்.அதோடு விட்டார்களா?சம்மந்தமே இல்லாத சிலரின் குரலாலும் வந்தது என்று சொல்லி ,சொல்ல மறந்த கதையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர்கள் எந்த வித பிரதிபலனையும் பாராமல்,எவருடைய ஓட்டுக்ககவும் எந்தப்பெயரையும் வைக்கத் துணியாதவர்களாக வலம் வந்த சமுதாய பீரங்கிகளின் சங்கநாதத்தையும் இருட்டடிப்பு செய்தது யாருக்காகவும் அல்ல! இன்று பாராளுமன்றத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்சினைக்களை எடுத்து வைப்பதில் சிம்ம சொப்பனமாக திகழும் அறிவுச்சுடர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்களின் வீரமிக்க உறையை கண்டுதான்!!

இவர்களின் வார்த்தை ஜாலங்களை கேட்டு ஏமந்தது ஒரு காலம் ,இனி அந்தக் காலம் அவர்களுக்கு பொல்லாத காலம் என்பதை மட்டும் சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

Sunday, December 20, 2009

இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்!

இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்!

http://www.youtube.com/watch?v=0Pje5JSVDjw

முஸ்லிம் லீக் வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சென்றால் சமுதாயப் பிரச்சினைகளை பேசவே முடியாது என்று ஏளனம் செய்து பிரச்சாரம் செய்தவர்களின் முகத்தில் கறியை பூச எங்கள் தாய்ச்சபை தங்கம் இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்....அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 9, 2009

தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!

தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!

லிபரான் அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் 07-12-2009 அன்று மக்களவையில் ஆற்றிய எழுச்சி மிகு உரை!

அவைத் தலைவர் அவர்களே!
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 டிசம்பர் 6ம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது மிகவும் கொடிய
செயலாகும். இக்குற்றச் செயலைக் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை மட்டும் தகர்க்கவில்லை, மாறாக அரசியல் சாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கைகளையும் சேர்த்தே தகர்த்துள்ளனர். இந்த அவமானகரமான சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதனையுடன் புறந்தள்ளிய பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு இக்கொடிய குற்றவாளி கூட்டத்தினர் பங்கம் இழைத்துள்ளனர்.
மஸ்ஜித் தகர்ப்பு சங் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி, பஜ்ரங் தன், பி.ஜே.பி, ஆகியவற்றால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்பதை விபரான் கமிஷன் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. அது தானாகவோ, திடீரெனவோ நடந்தது அல்ல. மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட ஒன்று,. இந்த அறிக்கை 68 நபர்களின் தனிப்பட்ட குற்றச் செயல்களை வரையறுத்துள்ளது. இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ள 68 நபர்களின் மீது என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய வரலாற்றிலே இது மிகவும் அவமானகரமான ஒரு செயலாகும்.
1995ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலே சொல்லப்பட்ட ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சியிலிருந்த போது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான நபரை குறிப்பிட்டு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பாகும். அதிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாவது,
"" இந்த செயல் ஒரு தேச அவமானம். தகர்க்கப்பட்டது ஒரு புரதான கட்டிடம் மட்டுமல்ல நீதியின் மீதும், பெரும்பான்மையினரின் நியாயமான நடவடிக்கைகள் மீதும் சிறுபான்மையினர் கொண்டிருந்த நம்பிக்கையும் தான். சட்டத்தின் ஆட்சி மீதும், அரசியல் சாசன நடைமுறைகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது குலைத்துவிட்டது||. இதுதான் உச்சநீதிமன்றம் கூறிய வார்த்தைகள்.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நேரத்திலே உத்திர பிரதேச மாநிலம் பி.ஜே.பி. யால் ஆளப்பட்டு வந்தது. அதன் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ன் முழு உதவியுடன் தான் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. அது தனியாக ஒரு இணை அரசை நடத்தியது என்பது லிபரான் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகர்ப்பு செயலுக்கு மிக முக்கியமான சக்தியாக அது பயன்படுத்தப்பட்டது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்தும், சிறுபான்மையினர், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கூட, அப்பாவி மக்களை பாதுகாக்க காவல்துறைக்கு எந்த வித ஆணையையும் அவர் வழங்கவில்லை. இதன் பயனாக அனைத்து காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், ஒட்டு மொத்த அரசு எந்திரமும் பாதுகாவலர்களாக இல்லாமல் சீருடை தரித்த " கரசேவகர்களாக|| பணியாற்றினர்.
ரகசிய கேமராக்களும், வெடி பொருள் கண்டுபிடிக்கும் கருவிகளும் அரசு நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட வில்லை.
அரசு முறைப்படி செய்யும் வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டன. ஊடகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லிபரான் அறிக்கையின்படி ஊடக வியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு மிகச் சிறிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டனர்.
மானபங்கப்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த நாட்டிற்க்கும் அதன் வரலாற்றுக்கும் துரோகமிழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நபர் இந்த நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனமான இந்த அவையின் உறுப்பினராக உள்ளார் ............ ( அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.)
இந்த செயலின் தளகர்த்தாவாக இருந்தவர் திரு. எல்.கே.அத்வானி. 1990ல் அவர் சோம்நாத்திலிருந்து அயோத்தியாவிற்கு நடத்திய ரத யாத்திரை நாடு முழுவதும் 3000 கலவரங்களை தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்னனர். "" டைம்ஸ் ஆப் இந்தியா|| தன் தலையங்கத்திலே இது ரதயாத்திரை அல்ல "" ரத்த யாத்திரை|| எனக் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி இந்த நாட்டிலே நடந்தது. பி.ஜே.பின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்தாலும் அன்றைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக ரத யாத்திரையை ஆதரித்து விடவில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் செயலை அவர் ஆதரிக்காததால் அவர் தன் அரசாட்சியை இழக்க வேண்டியிருந்தது. அதை எதிர் கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை. வி.பி.சிங் அவர்களின் வீரத்தை இந்த நேரத்திலே நான் மெச்சுகிறேன்.
லிபரான் கமிஷன் முன்பும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எல்.கே. அத்வானி அவர்கள் முரன்படும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன் வாழ்நாளிலே மிகுந்த துயரமளித்த சம்பவம் என்றார். மற்றொரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன்னுடைய கட்சியின் ஓட்டு வங்கியை பெரிதாக்கியுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மற்றொரு சமயம் நாமர் கோவில் இயக்கம் இந்துக்களின் பெருமையை பறை சாற்றுகிறது என்றார். இந்து மத உணர்வுகளில் நஞ்சு கலக்கும் அவர் செயலை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
இந்த நாட்டின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை குலைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி, பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் மிகச் பெரும் தொகையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பல்வேறு சமயங்களில் அவர்களின் கணக்குகளில் பல கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட ஒரு கொடுங் குற்றச் செயலை நிறைவேற்ற வேண்டி கோடி கோடியாய் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டது? யார் இதை உபயோகப்படுத்தியது? எப்படி உபயோகப்படுத்தப்பட்டது? இந்த எல்லா உண்மைகளும் இந்த தேசத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்த அனைத்து வழக்குகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்திலே நான் என் உரையை முடிக்கு முன்னர் தேசத் தலைவர் ஒருவர் சமூக நல்லிணகத்தை எப்படி மதித்தார், எப்படி நடந்து கொண்டார் தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.
சுதந்திரத்தின் போது நாடு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உருவான பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை காப்பாற்ற குரலெழுப்பினார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் முஹம்மது அலி ஜின்னா விடம் "நீங்கள் வெளிநாட்டவர் . நீங்கள் இந்தியாவின் மைந்தன் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் . நாங்கள் இந்திய நாட்டின் மைந்தர்கள். சிறுபான்மையினர் விவகாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.
சிறுபான்மையினர் பிரச்சினைகளை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் அயல் நாட்டிலே இருக்கிறீர்கள் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தை குறித்து பேச வேண்டாம். அப்படி சிறுபான்மையினர் குறித்து பேச வேண்டியது நியாயமே என கருதினால் உங்கள் நாட்டில் வாழும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் பற்றி யோசியுங்கள். நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்னைகளை குறித்து கவலைப்படுங்கள். இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் அல்லது முஸ்லிம் சமூகம் குறித்து ஏதும் பேச வேண்டாம். எங்கள் தாய்நாட்டிலே ஏற்படும் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் துணிவு எங்களுக்கு உள்ளது|| என்றார். இதுதான் தேசப்பற்று - இதுதான் தேசியம் - இதுதான் சமூக நல்லிணக்கம் - இதுதான் இந்த நாட்டின் தலைவர்கள் காட்டிய சமூக ஒற்றுமை. இங்கே உள்ள அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நடத்தையை பார்த்து பாடம் கற்றக்கொள்ள வேண்டும்.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதற்காக மற்றொரு சாராரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதில்லை. நம் இந்திய மக்களிடம் இத்தகைய கலாச்சாரம் இல்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு - எந்த மதமும் இன்னொரு மதத்திற்கு எதிரானது அல்ல - ஒரு மதத்தின் நெறிகளுக்கு எதிராக இன்னொரு மதம் நெறியற்ற முறையை தருவதில்லை. எல்லா மதங்களுமே அறநெறிகளையே போதிக்கின்றன. நாம் மதங்களின் பெயரால் வேறுபடலாம். ஆனால் அறநெறிகளின்படி நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள் .
நான் ஒரே ஒரு கருத்தை உங்களின் பரிசீலனைக்கு வைத்து முடிக்க விரும்புகிறேன். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள சில நபர்களின் கோபத்தின் வெளிப்பாடாக சில கோவில்கள் அங்கே சிதைக்கப்பட்டன.................... ( குறுக்கீடுகள்) ....... உடனடியாக அவற்றை சரி செய்து விடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.................... ( குறுக்கீடுகள்) ....... இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். இருந்தபோதும் பாகிஸ்தான் அரசு சிதைக்கப்பட்ட கோவில்களை உடனடியாக புணரமைக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது................... ( குறுக்கீடுகள்) ....... கோவில்களை புணரமைத்தது மட்டும் அல்ல, அவற்றை மீண்டும் இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் போது நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் திரு அத்வானி அவர்களும் சென்றிருந்தார். ................... ( குறுக்கீடுகள்) ....... புணரமைக்கப்பட்ட கோவில்களின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். நம்முடைய நாடு சமய சார்பற்ற நாடாக இருப்பதால் அதே போல தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தும் அதே இடத்திலே மக்களால் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என இந்த மேலான அவையிலே வேண்டுகோள் வைக்கிறேன். அதற்கு அத்வானி அவர்கள் தலைமை ஏற்றால் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலே இப்படிப்பட்ட சமயச் சார்பின்மை - இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் - இப்படிப்பட்ட சமூக ஒற்றுமை நிறுவப்பட வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். உலக நாடுகளின் முன்னால் நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது மிகவும் பெருமை தருவதாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்திலே நான் மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன். மதத்தின் பெயரால் மத வழிபாட்டு முறையின் பெயரால் மக்களிள் சகோதரத்துவத்தை மாறுபடுத்தாதீர்கள்.................... ( குறுக்கீடுகள்) ....... எல்லா மதங்களும் அறநெறிகளையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் மக்களை சகோதர சகோதரிகளாக வாழவே பயிற்று விக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை கொள்கையை மாநில பேதமின்றி - கட்சிபேதமின்றி நம் உறுப்பினர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.
இந்த விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- தமிழில் வெ. ஜீவகிரிதரன்

Sunday, December 6, 2009

மத்திய அரசு முழு உதவியும் செய்திட வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை

மத்திய அரசு முழு உதவியும் செய்திட வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=770


இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழகத் திற்கு மத்திய அரசு முழு உதவிகளையும் செய்திட வேண்டும் என நாடாளு மன்றத்தில்வேலூர் தொகுதி உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.

இயற்கைப் பேரரிடர் நிகழ்வுகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பங்கேற்று பேசுகை யில் எம். அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டதாவது-

அண்மையில் தமிழ் நாட்டின் நீலகிரியில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு 400 மீட்டர் தொலைவிற்கும் அதிக மான தொலைப்பரப்பில் பெரும் மழையால் நிலச் சரிவு ஏற்பட்டு, 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பெரும் பாதிப்புக்களை இழப்புக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உரு வானது.

நீலகிரி பகுதியில் சாலை கள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருட் களும், உணவு வகைகளும் சென்றடைய முடியாத நிலையால் மக்கள் தவித் தனர். போக்கு வரத்து வசதியும், தொலைத் தொடர்பு வசதியும் கூட முற்றிலும் துண்டிக்கப்பட் டன.

தமிழக அரசு துரித நடவடிக்கை

இந்த நிலை அறிந்த உடனேயே தமிழக முதல் வர் கலைஞர் அமைச்சர் களையும், அதிகாரிகளை யும் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு விரைந்து அனுப்பி போர்க் கால அடிப்படை யில் உடனடி நிவாரண நடவ டிக்கைகளை மேற் கொண்டார்.

நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ள ராசா தலைமை யில் குழு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நடவடிக் கைகளை மேற்கொண்ட னர். உயிரிழந்த சடலங் களை மீட்பதற்கு மிகப் பெரிய இடையூறுகள் இருந்தும் ஆச்சரியப்படத் தக்க வகையில் மின்னல் வேகத்தில் பணிகள் நடைபெற்றன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் மட்டுமின்றி உணவு,நிவாரணப் பொருட் களும், உதவித் தொகையும் அளிக்கப்பட்டன.

1800-க்கும் மேற்பட் டோர் வீடுகளை இழந்த நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக புதிய வீடு கள் கட்டித்தரப்படும் என தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்த அறிவிப்பு பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறு தலை தந்தது. இந்த வீடுகள் கட்டப்பட குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகலாம் என்ற நிலை இருந்த போதும் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உயிரி ழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் வழங்கினார்.

உதகமண்டலம் என்று அழைக்கப்படுகின்ற இந்த சுற்றுலா மலைப்பகுதி உலக பிரசித்திப்பெற்றது. இந்திய மாநிலங்கள் மட்டு மின்றி உலகின் பல்வேறு நாடுகளி லிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதால் மத்திய - மாநில பொருளா தார வளர்ச்சிக்கு பெரு மளவில் பங்கு பணி யாற்றி வருகிறது.

எனவே, இந்தப் பகுதி யைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு அளவிலான உதவிகளையும் செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிறது.

ஆம்பூர் வௌ;ளச்சேதம்

என்னுடைய வேலூர் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட ஆம்பூரில் சில மாதங்களுக்கு முன் தொடர் மழையால் திடீர் வௌ;ளம் ஏற்பட்டு ஆற்றோரப் பகுதிகளில் உள்ள குடிசை கள் வௌ;ளத்தால் அடித் துச் செல்லப்பட்டு ஐவர் உயிரிழந்தனர். தமிழக அரசு உடனடியாக நிவா ரணப் பணிகளை முடுக்கி விட்டு உயிரிழந்தவர் களுக்கு தலா 1 லட்ச ரூபாயை முதல்வர் வழங் கினார்.

வசதியற்றவர்கள் வசிக்க வாழ்விடம் தேடி இது போன்ற பாதுகாப்பில்லாத இடங்களில் குடியேறி விடுகின்றனர். மத்திய அரசு என்.சி.சி.எஃப். என்ற தேசிய இயற்கைப் பேரிடர் முன் னெச்சரிக்கை நிதி குழுமத் திலிருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு முன்னெச் சரிக்கைளை முழுமையாக செய்திட வேண்டும்.

இத்தகைய இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப் படையில் நிவாரண உதவி கள் செய்வதை நாம் மனமுவந்து பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். அதேசமயம் இத்தகைய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தாமாக முன்வந்து உதவிகள் செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக, இயற்கை பேரி டரால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முழுமை யான சீரமைப்புப் பணிகள் நிறைவேற மத்திய அரசு தாராளமாக உதவிகள் செய்ய வேண்டும் என இந்த மாமன்றத்தின் மூலம் வேண்டுகோள் வைக்கி றேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., பேசினார்.



தகவல் உதவி :


A.Usman
9944741315

www.muslimleaguetn.com

Tuesday, November 24, 2009

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே






மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்கள்.


1987-ல் ஆரம்பமான மணிச்சுடர்| இத்தனை காலமாகப் பலப்பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிராஜுல் மில்லத் அவர்களின் கனவை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நனவாக்கிக் கொண்டிருக்கிறது.


அப+ர்வ சகோதரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர் ஷேகு நூருத்தீன், ஹ{சைன் அப்துல் காதர், ஆலிம் செல்வன் ஷம்சுதீன் ஆகிய மூவரும் அவர்கள்தம் அருமைக் குடும்பத்தினரும், மறைந்த தேவிப்பட்டினம் பாருக் சாஹிப் போன்றவர்களும் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்து உதவி வந்துள்ளனர்.


நிறுவனமும், மணிச்சுடரும் காலப்போக்கில் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டபோது, பங்குதாரர்களும், இயக்குநர்களும் 1996-ல் கூடி நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அன்றைய தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய இருவரிடத்தில் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மணிச்சுடர் சம்பந்தப்பட்ட அனைத்து முந்திய பிந்திய கொடுக்கல் வாங்கலுக்கும் இருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்படைத்தனர்.


தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் புதல்வரும், நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவருமாக இருந்த ஜனாப் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களுடைய ஒத்துழைப்போடு இதுகாறும் நிறுவனமும், மணிச்சுடரும் தொடர்ந்து வரப் பாடுபட்டு வந்துள்ளோம். முஸ்லிம் லீகர்களின் முழு ஒத்துழைப்போடும், சமுதாயப் பிரமுகர்களின் ஆதரவோடும் மணிச்சுடர் நாளேடு இதுகாறும் நடந்து வந்திருக்கிறது.


ஜனாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் திடீரென மரணமெய்திய பிறகு நிறுவனத்தையும், மணிச்சுடரையும் தொடர்ந்து நடத்துவதற்கு புதிய இயக்குநர் குழுமம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் பொதுக்குழு கடந்த 6-11-09-ல் மூத்த இயக்குநரும், சமுதாயப் புரவலருமாகிய டாக்டர் ஷேகு நூருதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பழைய இயக்குநர்கள் குழுமம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு புதிய குழுமம் அமைத்துத் தீர்மானிக்கப்பட்டது. மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பங்குதாரர்கள் யாவரும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளைக்குத் தங்களின் பங்கு பத்திரங்களை நன்கொடையாக மாற்றிக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள நாளிதழ் ~சந்திரிகா|, கேரள மாநில முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது போல மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் முஸ்லிம் லீகர்களே ஏற்று நடத்துவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.. அதன் அடிப் படையில் புதிய இயக்குநர்கள் குழுமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இயக்கும் இயக்குநர் குழுவில் கீழ்க்கண்டவர்கள் புதிய பொறுப்புக்களுடன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


புதிய இயக்குநர்கள் குழுமத்தின் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மணிச்சுடர் நாளேட்டின் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மணிச்சுடர் ஆசிரியர், முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குக் கோட்டையார் வி.எம். சைஃயது அஹமது, யு.ஏ.இ. காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் எம். லியாகத் அலி, மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், முஸ்லிம் லீக் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஏ. ஹக்கீம் சையத் சத்தார் ஆகியோர் இயக்குநர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.


முழுமையாக முஸ்லிம் லீக் சார்பில் பொறுப் பேற்றுள்ள இந்த புதிய இயக்குநர்கள் குழுமம் மணிச்சுடரை பிரபல்யமான பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிரைமரி முஸ்லிம் லீகிலும் மணிச்சுடர்| சென்றிட வேண்டும். தமிழகத்தல் உள்ள பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத்துகள் ஒவ் வொன்றுக்கும் மணிச்சுடர் செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்விச் சாலைகள், அரபி கல்லூரிகள் மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்திற்கும் மணிச்சுடர் சென்றிட வேண்டும்.


இதற்கு உங்களின் ஒத்துழைப்பும், உதவியும், ஆதரவு மிகமிகத் தேவை