அன்புச் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
எந்தக் கேள்வியாக இருந்தாலும் அது சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வண்ணம் இருப்பின் அது வரவேற்கத்தக்கதே. அது உண்மையில் அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தும். ஆனால் இங்கு சகோதரர் கேட்டுள்ள கேள்வி பாராளுமன்றத்தில் எனது இருக்கை என்னவென்று. இது சமுதாயத்திற்கு பலனளிக்கக் கூடிய கேள்வியா ? இல்லை யாருக்கும் தெரியாத ஒன்றா ? இக்கேள்வி கேட்டு கிண்டல் செய்வதன் மூலம் சகோதரர் தனது தகுதியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்க முடிகிறது. இதுபோன்ற கேள்வி கேட்டு அவர் மகிழ்ச்சி பெறக்கூடியவரென்றால் எனது பதில் இதோ :
எந்த வழியான பிரதிநிதித்துவம் என்பதை விட நமது சமுதாயத்தின் பங்களிப்பு பாராளுமன்றத்தில் இருந்திட வேண்டும் என்பது தான் எந்த ஒரு சாமான்ய முஸ்லிமின் உணர்வாக இருக்க முடியும். எனது போட்டி சமுதாய நலன் கருதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் திமுக வின் உறுப்பினர் என்று கூற விரும்புகிறீர்கள். இதுபோன்ற கேள்விகளை சகோதரர்கள் மீண்டும் மீண்டும் கேட்பதை விட்டு விட்டு சமுதாயத்திற்கு பலனளிக்கும் வண்ணம் ஆரோக்யமான கருத்துக்களை முன்வைத்தால் வரவேற்கிறேன். அறிவுபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
மேலும் கடந்த ஒரு வருட காலமாக எனது பாராளுமன்ற உரைகளை கேட்டிருப்பீர்களேயானால் எனது பாராளுமன்ற பங்களிப்பின் மூலம் சமுதாயத்தின் குரலாக எந்தவகையில் எல்லாம் குரல் எழுப்ப இயலுமோ அவ்வாறெல்லாம் எழுப்பியுள்ளேன். இதற்கு யாருடைய இடையூரும் எந்தவிதத்திலும் கிடையாது. மென்மேலும் நல்ல் பல விஷயங்கள் நடைபெற துஆச் செய்திடவும். நீங்கள் ஒரு நல்ல முஸ்லிம் சகோதரராக இருந்தால் ஆரோக்யமான கருத்துக்களையும், அறிவுரைகளையும் கொண்டு வாருங்கள். இதுபோன்ற சமுதாயத்திற்குப் பலனில்லாத கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் எனது மூன் டிவி கலந்துரையாடல் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்ததே. இடஒதுக்கீடு குறித்ததல்ல. சகோதரர் கேட்ட கேள்விக்கான பதில் இதோ :
நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு பரிந்துரைத்துள்ள பத்து சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சென்னையில் நடைபெற்ற கமிஷனின்ல் கலந்துரையாடலில் முஸ்லிம் லீக்கின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளும் ஒரு பிரதான காரணம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பார்லிமெண்டிற்கு உள்ளும், வெளியும் எனது கருத்துக்களை கேட்டிருப்பீர்களேயானால் இட ஒதுக்கீடு குறித்து எனது பங்களிப்பு தெரியவரும். பாராளுமன்ற தொடரில் இக்கமிஷனின் பரிந்துரை விவாவதத்திற்கு வரும் போது எனது உரையினைக் காண காத்திருங்கள் இன்ஷா அல்லாஹ்.
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
புதுதில்லியிருந்து............
2010/7/29 abdul rahman
Assalamu Alaikum
Reply to those two questions:
1) If the question is not known to any one and there is a curiosity on the basis of community welfare, such question can be welcome. It will serve the real purpose. But here our brother has asked to redicule my placement in parliament which shows the nature of his quality. If he wants to enjoy by asking such question, please note that this is my reply:
As even an ordinary muslim realises that our ways of placement in Parliament is so important than any other creteria to represent us, my contest has been wisefully determined by Muslim League irrespective of symbol concerned matter. As per symbol, your intention of rediculing can be achieved to say as DMK, but try to come forward with healthy comments and advices which will be beneficial to the society.
In addition, try to encourage by referring to my speeches and involvements in favour of our community during the past one year service after I became MP which clearly proved that my placement in parliament alone is our significant creteria without having anyone's pressure in exercising our mission. Please do Dua for further more good events to happen. If you are a good muslim, please try to come up with far-sighted vision and healthy mission by avoiding such rediculous comment.
2) My interview in Moon TV was on the title of 'Caste based Census' and not on 'Reservation'. As the question was asked, this is my reply:
Please note that Renganath Misra Commission Report's recommendation of providing 10% reservation to Muslim community itself was Muslim League's specific written request to Commission's consideration during its interaction event in Chennai. Focussing my part on this issue, please refer to all my speeches in and outside the parliament. In addition, please wait for my participation in the debate when it comes in parliament.
Thanks.
Abdul Rahman
---------- Forwarded message ----------
From: iq bal
Date: 2010/7/28
Subject: Fw: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்
To: muduvai idayath
.SheiqB
----- Forwarded Message ----
From: AbuFaaiz
To: tamilmuslimbrothers
Sent: Wed, 28 July, 2010 3:06:55 PM
Subject: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்
Assalamu Alaikkum
சென்ற வெள்ளிக் கிழமை சகோ.அப்துல் ரஹ்மான் (பாராளு மன்ற உறுப்பினர்) அவர்கள் மூன் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு பற்றிய ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. நேயர்களும் கேள்வி கேட்கலாம் என்று ஒரு தொலைபேசி நம்பர் இருந்தது. நாம் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு 2 கேள்விகள் கேட்டோம். ஆனால் அந்த மாதிரி கேள்விகள் கேட்கப் படாது என்று கூறிவிட்டார்கள். அதே கேள்வியை வைக்கின்றோம்.
1. நீங்கள் தற்போது திமுக எம்.பியா? முஸ்லிம் லீக் எம்.பியா?
2. தற்போதுள்ள நிலையில் (அந்த நிலையை அவர் தான் சொல்லியிருப்பார்) முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கிடைக்க என்ன செய்துள்ளீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்?