Friday, July 30, 2010

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் நகரில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்,பொதுச் செயலாள‌ர் கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில்,மாவட்டத் தலைவராக லால்பேட்டை அல்ஹாஜ் கே.ஏ.அமானுல்லாஹ்,செயலாள‌ராக விருதாச்சலம் ஏ.சுக்கூர்,பொருளாள‌ராக பி.முட்லூர் அப்துல் கப்பார் உள்ளிட்ட மாவட்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் பங்கேற்க்க தாயகம் சென்றுள்ளஅமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச் செயலாள‌ர் ஏ.முஹம்மது தாஹா
கடலூர் மாவட்டத் தலைவர் அமானுல்லாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ம‌ற்றும் அபுதாபி மண்டலச் செயலாள‌ர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.